For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் 6 வயது அதிசயம்.. சாஜிதாவின் அசத்தல் தமிழ்ப் பாசம்!

Google Oneindia Tamil News

சென்னை: கலச்சாரம், பாரம்பரியம் இதெல்லாம் கிலோ எத்தனை என்று கேட்போருக்கு மத்தியில், 6 வயதேயான ஒரு சிறுமி, அதுவும் இஸ்லாமியச் சிறுமி, தமிழ் நாட்டுப் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் பிடித்து தூக்கி நிறுத்தி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்த சிறுமியின் பெயர் சாஜிதா ஷைனப். இச்சிறுமி நம்நாட்டு பாரம்பரிய உடை உடுத்தி காண்போரை கவர்ந்து வருகிறார். நம் கலாச்சார உடைகள் அணியும் அதிக ஆர்வமுள்ள இச்சிறுமி யை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே இரவணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முகம்மது நஸீருத்தீன் - ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் புதல்விதான் சாஜிதா.

சாஜிதா

சாஜிதா

குற்றாலம் செய்யது ஹில்வியூ பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சாஜிதா ஷைனப். ஆறுவயதே ஆன இச்சிறுமி யின் நடவடிக்கை முற்றிலும் அறிவுபூர்வமான சிந்தனைக்குறியவை மிகவும் பாராட்டும் விதமாக அமைந்துள்ளது

உடை மாற்றம்

உடை மாற்றம்

கடந்த மூன்று வருடங்களாக இச்சிறுமியின் பேச்சு மற்றும் சிந்தனை திறன் முற்றிலும் ஆறு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளிடம் இருக்கும் விதத்தில் மாறுபட்டு காணப்படுகிறது. இவரது குடும்பத்தினர் முதல் அனைவரது மனதையும் கவர்ந்து இழுத்து வருகிறது. இவர் பள்ளி விடுமுறை நாட்களில் மாடர்ன் டிரஸ் போடுவதை தவிர்த்து விட்டு பாவாடை, தாவணியில் வளைய வருகிறார். அதுதான் இவருக்குப் பிடித்திருக்கிறதாம்.

தாவணி சேலை

தாவணி சேலை

பாவாடை, தாவணி, சேலைகள் ஆகிய உடைகள் மீது அலாதி பிரியம் கொண்டு மற்ற ரக உடைகளை மறுத்து வந்த நிலையில் உள்ளூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இச்சிறுமி பெரிய பெண்கள் போன்று ஆடை மற்றும் சிகை அலங்காரம் செய்து பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினார். இச்சிறுமியின் பேச்சுத்திறன் அறிவுத்திறன் சிந்தனைகள் போன்றவற்றை பொது மக்கள் அனைவரும் பாராட்டி சிறப்பித்தனர்.

யோகாவும்

யோகாவும்

மேலும் கடந்த ஒரு வருட காலமாக யோகாசனத்திலும் தனிக்கவனம் செலுத்தி தொடர்ந்து பயிற்சி முறைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் கலாச்சாரம்

தமிழ் கலாச்சாரம்

மாடர்ன் உடை என்ற பெயரில் கலாச்சார சீரழிவுக்கு வித்திடும் வகையில் பலர் உடை அணிவதைப் பார்க்கிறோம். ஆனால்அவர்களுக்கு மத்தியில் சாஜிதா ஒரு வைரம் போல ஜொலிக்கிறார்.. தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான இவரது காதலைப் பார்க்கும்போது, நமது கலாச்சாரமும், பாரம்பரியமும் தொன்று தொட்டு தொடரும் என்ற நம்பிக்கையும் நமக்கு வருகிறது.

English summary
A 6 year old girl shows her love on Tamil tradition by wearing sarees and half sarees instead of modern dress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X