For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் அறிமுக விழா: கொழும்பில் கோலாகலம்

கொழும்பில் வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் அறிமுக விழா நடைபெற்றது.

Google Oneindia Tamil News

கொழும்பு: வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் அறிமுக விழா நடைபெற்றது.

இலங்கை சித்திலெப்பை ஆய்வு பேயவை மையம் இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் இலங்கை கொழும்பைச் சேர்ந்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் அறிமுகம் விழா இலங்கை கொழும்பில் உள்ள வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு. இலங்கை சித்தி லெப்பை ஆய்வு பேரவை தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமை வகித்தார். கூட்டத்தை ஶ்ரீலங்கா மௌலவி முஅத்தீன் அமைப்பு தலைவர் காரி மௌலவி அப்துல் ஜப்பார் பஹ்ஜி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.

Annai Kathija and Annalars family Epic released in in Colombo

சித்தி லெப்பை அய்வுப் பேரவையின் சர்வேதச விவகார செயலாளர் டாக்டர் ஏ.ஏல். அகமது ரிஷி, தஞ்சை வழுத்தூர் வெள்ளம்ஜி ஜமால் - தாவூது அறக்கட்டளை அறங்காவலர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துர் ரவூஃப், கொழும்பு தமிழச் சங்க தலைவர் சட்டத்தரணி ஜீ. இராஜ்குலேந்திரா, இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவர் பேரா. முனைவர் சேமுமு முகமதலி, ஹம்சியா பரீதா ஷரிபுத்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் 11 வது காப்பிய நூலை சிங்கப்பூர் நன்யாங் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் தஞ்சை ப. திருநாவுக்கரசு நூல் ஆய்வு பற்றி பல்வேறு தகவல்களை எடுத்து பேசினார்.

வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் சார்பில் இலங்கை கொழும்பைச் சேர்ந்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் நூலை பற்றி
வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் உரிமையாளர் உரிமையாளர் மற்றும் தோஷிபா எலிவேட்டர்ஸ் மேலாண்மை இயக்குநர் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் பேசுகையில் : இந்த காப்பிய நூலை நான் முதலில் படித்து பார்க்கும் எனக்கு உடம்பு முழுவதும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த அளவுக்கு அன்னை கதீஜா பற்றி யாரும் சொல்லாத அளவுக்கு இந்த காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. எனக்கு இந்த புத்தகத்தை எங்களது பதிப்புக்கு வாய்ப்பு அல்லாவின் உதவியால் எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.இந்த காப்பியத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அன்னை கதீஜாவை பற்றி எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆண்களும் பெண்களும் அனைவரும் படிக்க வேண்டும்.

Annai Kathija and Annalars family Epic released in in Colombo

இந்தக் காப்பியத்தைப் படிக்கும் யாரும், "இது இரண்டு ஜமாஅத்துக்கும் சொந்தமான காப்பியமல்ல! இது முஸ்லிம் உலகத்திற்குச் சொந்தமான காப்பியம்!!" என்றே கூறுவர். இஸ்லாமிய மார்க்கத்தைச் சரியாகப் புரிந்துகொண்டோரும், அதன் வரலாற்றை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டோரும் - இந்தக் காப்பியத்தை ஒரு சார்புடைய இலக்கியமாகப் பார்க்கவே முடியாத அளவுக்கு சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள கவிதைகள், அதில் இடம்பெற்றுள்ள சொற்கள் அவ்வளவு தெளிவாக தெரிவு செய்து பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டுமென நான் மனதார வாழ்த்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இலங்கை கொழும்பைச் சேர்ந்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும் காப்பியம் நூலை கட்டார் பல்கலைக்கழக பேராசிரியர் தீன் முஹம்மத் வெளியிட முதல் பிரதிகளை எஸ்.ஏ.எம். அஸ்ஸெய்யத் இர்பான் மௌலானா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்.

இலக்கிய புரவலர் ஹாசிம் உமர், அஸீஸ் மன்ற தலைவர் அல்ஹாஜ் அஷ்ரஃப் அஸீஸ், இலங்கை தினகரன் நாளிதழின் தமிழ்மொழி வெளியீடு ஆலோசகர் அல்ஹாஜ் எம்.ஏ.எம். நிலாம், அல்ஹாஜ் எச்.எம்.எம். மஹ்பூப், அல்ஹாஜ் ஏ. புஹாரி, அல்ஹாஜ் ஏ.எச்.எம். றிசான், அக்ரம் பாயிக் மக்கீன், கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடக இணைப்பாளர் அப்துல் ஸலாம் யாசீம், அல்ஹாஜ் இம்தியாஸ், அல்ஹாஜ் அப்துல் ஹலீம், கம்பஹா மாவட்ட எழுத்தியக்கச் செயலாளர் எம்.எஸ்.எம். றிஸ்மி, றொஷான் கமருத்தீன், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, திருச்சி ஊடகவியாலளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, பேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழாய்வுத்துறை தலைவர் அனஸ், நவமணி நாளிதழின் ஆசிரியர் என்.எம். ஆமீன் , வானொலி அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீது, ஆகியோருக்கு வெள்ளம்ஜி தாவூது பதிப்பகம் உரிமையாளர் உரிமையாளர் மற்றும் தோஷிபா எலிவேட்டர்ஸ் மேலாண்மை இயக்குநர் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் வழங்கினார். விழா ஏற்பாடுகளை இஸ்லாமிய இலக்கியக் கழகம் மற்றும் வெள்ளம்ஜி -தாவூது பதிப்பகம் செய்து இருந்தனர்.

English summary
Annam Kathija and Annalar's family Epic released in in Colombo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X