• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. நதியில் விளையாடி கொடியில் தலைசீவி!

|

- லதா சரவணன்

இன்று.. உடன்பிறப்புகள் நாள்.

ஏப்ரல் 10 உடன் பிறப்புகள் நாள். உடன் பிறந்தவர்களை கெளரவிக்கும் வகையில் இந்த நாள் நடக்கிறது. இந்நாளில் அமெரிக்காவில் சில மாவட்டங்களில் விடுமுறை கூட அறிவிக்கப்படுகிறது. உறவுகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் வகிக்கிறது. கடவுள் எப்படி மனிதனின் கூடவே வரமுடியாது என்று அன்னையைப் படைத்தார். அதேபோல்தான் பெற்றோர்களும் இறுதிவரை வரமுடியாது என்பதற்காகவேதான் உடன் பிறந்தவர்களைப் படைத்திருக்கிறார். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவர்களைப் பிரித்திருந்தாலும் சகோதரப் பாசத்தை மறைக்க இயலாது.

April 10: Today is Siblings Day

அதுமட்டுமின்றி ஏப்ரல் 10 நாள் அதிக இழப்புகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் சந்தித்து உள்ளது.

1809 நெப்போலியப் போர்கள் ஆஸ்திரியப் படை பவேரியாவை ஊடுருவியது.

1826 துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை கிரேக்க நகரில் இருந்து 10500பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினார்.

1919 மெக்சிக்கோ புரட்சித்தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1912 டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் செளதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.

1963 ஐக்கிய அமெரிக்காவின் திரெசர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் கடலில் மூழ்கியது.

1972 வியட்நாம் போர் அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின்.

1973 சுவிட்சர்லாந்து, பேசெல் நகரில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 108பேர் கொல்லப்பட்டனர்.

1991 இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140பேர் கொல்லப்பட்டனர்.

1992 லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரியக் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.

2002 விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.

2006 இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60பேர் கொல்லப்பட்டனர்.

2010 போலந்து விமானம் ஒன்று உருசியாவில் சிமோரென்ஸ்க் நகரில் வீழ்ந்ததில் போலந்து அரசுத்தலைவர் லேக் காச்சின்ஸ்கி அவரது மனைவி, மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட 96பேர் உயிரிழந்தனர்.

2016 கேரளா பரவூரில் பண்டிகைக் கால வாணவெடிகள் வெடித்து தீ பரவியதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

ஏப்ரல் 10 1959ம் நாள் பிறந்தவர். தமிழகத்தை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர், இதழாசிரியர் மற்றும் நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர். பல்வேறு நூல்களை எழுதியவர், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் இருக்கும் இடத்தை மறைத்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். வீரப்பனுக்கும் தமிழக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார். சமூகத்தின் எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதலில் அதை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுபவர்.

April 10: Today is Siblings Day

1922 ஏப்ரல் 10ம் நாள் சுவாமி பிரம்மானந்தர் இந்த தேதியில் இறந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரும் சுவாமி விவேகானந்தரின் சகோதரத்துறவியும் ஆவார். வெறுமனே ஏதாவதொரு வேலையைச் செய்வது போதாது. எந்த வேலையானாலும் அதைச் சரியான முறையில் செய்ய வேண்டும். சொந்த நோக்கம் எதுவும் இல்லாமல் இறைவனுக்குச் செய்யப்படும் சேவையாகச் செய்யவேண்டும் இவரின் மறைவு நாள் ஏப்ரல் 10நாளாகும்.

கலீல் ஜிப்ரான் உலகப்புகழ்பெற்ற கவிஞர். ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது, 1905 முதல் அரபு மொழியில் எழுதிவந்தவர் ஆங்கிலத்திலும் எழுதினார். 1918ல் அவர் எழுதிய தி மேட்மேன் எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது, தீர்க்கதரிசி (தி ப்ராபெட்) என்னும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அந்த கவிஞரின் இறந்த நாள் 1931ம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் இறந்தார்.

1964 ஏப்ரல் 10 நாள் நாச்சியார் கோவில என்.பி, இராகவப்பிள்ளை புகழ்பெற்ற தமிழ்நாட்டு தவில் கலைஞர். டி.என். ராஜரத்தினம் பிள்ளை இவரது தேதி கிடைக்கவில்லை என்றால் தன் நிகழ்ச்சியை ஒத்திவைப்பார். அறிஞர் அண்ணா ஒருமுறை மி அருமையான தவில் நிகழ்ச்சியை ஊர்வலத்தில் வைத்துவிட்டீர்கள், நான் கேட்டு ரசிப்பதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று வருந்தும் அளவிற்கு அற்புதமான கலைஞர் அவர் இறந்ததினமும் இன்றுதான்.

1995ம் ஆண்டு ஏப்ரல் 10 நாள் மெரார்சி தேசாய் அவர்களும் தன் இன்னுலகப் பயணத்தை நீத்தார். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியப்பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்தியக் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியரும் இவர்தான்.

1999 ஏப்ரல் 10 மலையாள மொழியின் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஞானபீட விருது பெற்றவர். மலையாள மொழியில் 36 நாவல்களையும் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஒரு நாடகத்தையும் எழுதியிருந்ததால் பரவலாக அறியப்பட்டார். அவரின் மறைவும் இன்றுதான். ஏணிப்படிகள் நாவலுக்காக கேந்திர சாகித்திய அக்காதமி விருது வழங்கப்பட்டது. 1984ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை கயிறு நாவலுக்காக பெற்றார். அவர் தன் வாழ்நாளின் கடைசி நாளாக ஏப்ரல் 10ந்தேதி அமைந்துவிட்டது.

(தொடர்ந்து வரும்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
April 3 is called as Rainbow day and come let us see what and all happened on April 3.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more