For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே!

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

ஏப்ரல் 12

குழந்தைகள் சோர்ந்து வரும் நேரத்தில் நமக்கு கிடைக்கும் எனர்ஜி பூஸ்ட் எத்தனையோ மன வேதனைகளை அவர்கள் தங்கள் புன்னகையாலும், அழுகையாலும், குட்டிக் குட்டி குறும்புகளாலும் தவிர்க்கிறார்கள். அவர்களின் உலகம் சுவாரஸ்யமானது, மனதை இலகுவாக்கும் மருந்து குழந்தைகள். பொலிவியாவில் ஏப்ரல் 12 அன்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகிறது. 1955ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கம் தொடர்கிறது. குழந்தைகள் தினம் இந்தியாவில் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகில் ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு தினங்களில் குழந்தைகள் தினத்தை கொண்டாடுகிறார்கள்.

April 12: What is special today

நாம் பயணிக்கும் நிமிடங்களில் நம் கண்களுக்கு சிலநேரம் தெரியும் சாலையோர சிறுவர்கள் அரை டவுசரின் கிழிசல்களோடு, வெய்யில் மினுமினுக்கும் உடலில் சற்றே புழுதி மண்ணோடு ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடிக்கொண்டு இருப்பார்கள். சில நேரம் சினிமா கதாநாயகர்களைப் போல சண்டையிட்டு கொண்டு இருப்பார்கள், கிடைக்கும் சொற்ப உணவை பகிர்ந்தளித்து மேலும்கீழும் இரைத்து அந்த சாலையோரத்திலும் சொர்க்கம் காணும் சிறார்களின் தினம் தான் ஏப்ரல் 12... உலகெங்கும் உள்ள வீதியோரச் சிறுவரின் நல்வாழ்வுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்கும் சர்வதேசநாளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ம் நாள் கொண்டாடப்படுகிறது.

நாம் அறியாத அறிந்து கொள்ள முடியாத சூழலில் அண்டசராசங்களும் உண்டு. அநேக ஆச்சரியங்களை உள்ளடக்கியுள்ளது விண்வெளியுகம், இப்போது கூட வாட்ஸ்அப்பில் வைரலாய் ஏலியன்களின் ஒலி நடனம் என்று ஒரு வீடியோ சுற்றிவருகிறது அதன் உண்மைத் தன்மையை விவாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லையெனினும் பல ரகசியங்களை உள்ளடக்கிய விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ரஷ்யாவைச் சேர்ந்த யூரிககாரின் நினைவாக ஏப்ரல் 12ம் நாள் 2011ம் வருடம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏகமனதாக தீர்மானித்து மனித விண்வெளிப்பயணத்துக்கான சர்வதேச நாளாக கொண்டாப்பட்டு வரகிறது. 1961ல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யூரி ககாரின்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவான சான்ட்வெட்ச் வேலை நேரங்களில் வயிற்றைப் பிராண்டும் குட்டிப் பசியை தீர்க்கும் நிவாரணி நம்ம ஊர் உப்புமா மாதிரி இன்று உலக கிரில்டு ஜீஸ் சான்வெட்ச் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

1832 இலங்கையில் கட்டாய அரசு சேவையை ஒழிக்கும் ஆணையை பிரிட்டிஷ் அரசாங்கம் பிறப்பித்தது.

தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து வெள்ளையன் வந்தான் போங்க என்பது பிரபலமான ஒரு பாடல் அப்படி நம் நாட்டின் வளங்களைக் கைப்பற்றவே ஆங்கிலேயேர்கள் இந்தியா வந்திருந்தாலும், அதன் பிறகு சில உட்கட்சிப்பூசல்களும், உள்நாட்டுப் போர்களும்தான் அவர்கள் இந்தியாவினை அடிமைப் படுத்திடக் காரணமாக அமைந்தது. வீட்டிலும் சரி நாட்டிலும் சரி உட்கட்சிப்பூசல் என்பது வலிய நாமே எதிரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைப்பதைப் போலத்தான். இப்போது நம் அரசியல் கட்சிகள் இல்லை பொழுதுபோக்கான சினிமாவைக் கூட அரசியல் ஆக்கிக்கொண்டு போராட எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது ஒரு நடிகன் வசனம் தவறென்று தொங்கிக்கொண்டு அப்படித்தான். இது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க மாநிலங்களிலும் நடந்தது ஏப்ரல் 12ம் தேதி 1864 ஆம் வருடம் தென் மாநிலங்களில் ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட உள்நாட்டுப்போர், ஆப்பிரிக்க- அமெரிக்கப் படையினரும் கூட்டமைப்புப் படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1865ம் வருடம் அலபாமாவில் மொபைல் நகரம் அமெரிக்க உள்நாட்டுப்போரில் இராணுவத்திடம் வீழ்ந்தது. 1877ம் வருடம் ஏப்ரல் 12ம் நாள் ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் மாநிலத்தை தென்னாப்பிரிக்காவுடன் இணைத்தது.

ஏப்ரல் 12ம் நாளுக்கும் உலக போர்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. சீன பொதுவுடைமைக் கட்சி 1921ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றைய சீனாவின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இக்கட்சி சீனப் புரட்சி எனப்படும் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. 70 மில்லியன்களுக்கு மேலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இக்கட்சியே உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும் 1927ம் வருடம் சாங்காயில் சங் கை செக் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதித்தார்,

1927 சீனாவில் மட்டுமல்ல அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ரொக்சுஸ் பிரிங்சு என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் நகரின் கட்டங்கள் அனைத்தும் சேதமடைந்து 72 பேர் உயிரிழந்தனர்.

1 முதல் 5வயது குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து ஊசி போடப்படுவதால் அவர்களுக்கு முடக்குவாதம் எனப்படும் போலியோ நோய் தாக்காது என்பதால் பிறக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடுவது அறிவுறுத்தப்படுகிறது. 1955ம் ஏப்ரல் 12ம் நாள்தான் யோனாசு சால்க் என்பவர் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.

April 12: What is special today

1963 சோவியத் அணுசக்தி நீர்முழ்கிக் கப்பல் கே - 33 பின்லாந்து சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதியது. 1970 சோவியத் நீர்முழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது.

1982 இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் வெளிவந்த வரலாற்றுத் ரைப்படம் காந்தி ரிச்சட் ஆட்டன் பரோவுக்கு இப்படம் உலகளாவியப் புகழைத் தேடித்தது. 1983 ல் ஏப்ரல் 12ம் தேதியில் நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவில் பிரிட்டிஷ் திரைப்படமான காந்தி எட்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது. அவ்விருதை வாங்க அவர் மேடைக்குச் சென்றபோது பல மேற்கத்தியர்கள் ரசிக்கும் படியாக ரகுபதி ராகவ ராஜாராம் இசைக்கப்பட்டது. அவர் மேடையில் விருதுக்குப்பின் பேசிய வார்த்தைகள் தான் நம் தேச மதிப்பின் உச்சம். அன்பு நண்பர்களே இந்த விருதுகள் எனக்கோ பென்கிங்ஸ்லிக்கோ இல்லை இந்த விருதுகள் மூலமாக நீங்கள் மகாத்மா காந்திக்கும் நாம் அனைவரும் அமைதியாக வாழவேண்டும் என்ற அவருடைய குறிக்கோளுக்கும் தான் என்று கூறினார்.

2007 இந்தியா அக்னி -III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000கிமீ தூரத்திற்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது. இதன் மூலம் இந்தியாவின் அருகாமை நாடகளின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்த இயலும், இந்த அக்னி 3 ஏவகணை பாதுகாப்பு படைகளுடன் சூன் 2011ல் இணைக்கப்பட்டது. இவை தற்போது உற்பத்தியிலும் இருக்கின்றன.

April 12: What is special today

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றது தமிழ், 1854 ஏப்ரல் 12ம் நாள் தமிழறிஞர், பேச்சாளர் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவரின் தாலாட்டு தினம், தலவரலாறுகள், ஆரியதருமம் உட்பட 94 நூல்களை தமிழில் எழுதிப் பதிப்பித்தவர். பயண இலக்கியங்களின் முன்னோடி இவர். இராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்மசமாசத்தில் பங்கேற்று பெண்களுக்கு எனத் தனிப்பள்ளியைக் கட்டினார். இதன் கொள்கைகளை வலியுறுத்தி நீதிக்கும்மி என்ற நூலை எழுதினார்.ஆங்சில அரசு இவரது பொதுப்பணியைப் பாராட்டி இவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்க முன்வந்தபோது, நாட்டுப்ற்றால் அதை மறுத்துவிட்டார். பால்ய விதவைப்பெண்களுக்கு கல்வியளித்து அவர்களுகுகு புனர்விவாகம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார்.

1904 ஏப்ரல் 2ம் நாள் கு.மு. அண்ணல் தங்கோ ஒரு தனித்தமிழ் அறிஞரும் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் ஆவார். 1942ல் தமிழ் நிலம் என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். திருக்குறள் நெறியைப் பரப்பினார். அவரைப் கெளரவிக்கும் வகையில் அண்ணல் தங்கோ அவரின் படைப்புகளை நாட்டுடமை ஆக்கினார் முதல்வர் கருணாநிதி.

பாஜாகாவின் பதினாறாவது மக்களையின் மிக நீண்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சுமித்ரா மகஜன் ஏப்ரல் 12 1943 ல் பிறந்தார்.

April 12: What is special today

1954 ஏப்ரல் 12 மார்க்சியக் கொள்கைகளை வீதி நாடங்கள் மூலம் அரங்கேற்றிய பெருமைக்குரியவர் சப்தர் ஆசுமி அந்தக் காலக்கட்டத்தில் நிலவிய மக்கள் பிரச்சனைகளை நாடகங்கள் மூலம் எடுத்துக்காட்டி ஜன நாட்டிய மஞ்ச் என்னும் வீதி நாடகக் குழுவைத் தோற்றுவித்தார். 24நாடகங்களை 4000முறை தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் வீதி நாடகங்களாக அரங்கேற்றி மக்களின் பிரச்சனைகளை எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்தார்.

சிலரின் பிறப்பு மட்டுமல்ல இறப்பும் வரலாறுதான். 1946 ஏப்ரல் 12ம் நாள் வலங்கைமான் சங்கர நாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி இந்திய அரசியல்வாதி, கல்வியாளர் என்ற முகங்கள் கொண்டவர், ஆங்கில மொழி மீது உள்ள புலமைக்காகவும், சொற்பொழிவுகளுக்காகவும் பிரிட்டனில் 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவத்தியால் பாராட்டப்பட்ட பெருமைக்குரியவர். ரைட் ஹானரபில் என்ற பட்டத்தினை ஆங்கிலேயர்கள் இவருக்கு வழங்கினார் அவரின் இறப்புநாள் இன்று.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இரண்டு முறை துணைவேந்தராக பொறுப்பு வகித்த நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள், காமராஜர் முதல்வராக இருந்த போது அவருடன் இணைந்து இலவசக்கல்வி, மற்றும் இலவசச் சீருடைத் திட்டங்களை செயல்படுத்தினார். இவர் காலத்தில் தான் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப்பட்டது. எல்லா ஊர்களிலும் தொடக்கப்பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு வேலையில்லாத ஆயிரக்கணக்காணவர்கள் ஆசிரியர் பணி ஏற்கச் செய்ததும் இவரின் சாதனையாகும். பெரியவர்களுக்கு 30 நூல்களையும், சிறுவர்களுக்காக 13 நூல்களையும் வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதயுள்ளார் பெரியார் பற்றி நூலும் சுந்தரவடிவேலு அவரின் கைவண்ணத்தில் வெளியானது அன்னார் மண்ணின் மடி சேர்ந்ததும் 1993 ஏப்ரல் 12ம் நாள்.

ராஜ்குமார் பரவலாக அறியப்பட்ட கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் பிண்ணினப் பாடகர்,இவர் கோகக் இயக்கம் என்ற கன்னட மொழியை கர்நாடக மாநிலத்தின் முதல் மொழியாக ஆக்கும் இயக்கத்தை வழிநடத்தி வெற்றி கண்டார். 200 படங்களில் நடித்திருக்கும் அவர் 2000ம் ஆண்டில சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். 2006ம் ஆண்டில் ஏப்ரல் 12ம் நாள் இதய நோயால் பெங்களூரில் இறந்தாார்,

(தொடர்ந்து வரும்)

English summary
April 12 is being celebrated as Children's day in Bolivia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X