For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. வானவில்லே வானவில்லே!

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

ஏப்ரல் 3ம் தேி வானவில் தினம். சிறு வயதில் இருந்தே நாம் வியந்து பார்க்கும் விஷயங்களில் வானவில்லும் ஒன்று. 7 வண்ண நிறங்களில் ஒளிரும் ஒளிநிறமிகளின் மாற்றம் தான் என்றாலும் அதன் ஆயுட்காலம் சில நிமிடங்களேஇருந்தாலும் மழையின் முன் தோன்றும் அந்த வானவில்லின் நிலையில்லாத்தன்மை மீதுதான் நமக்கு எத்தனை நேசம்மனிதர்களுக்குள்ளும் அத்தனை நிறமிழக்கும் தன்மையை பார்த்துக்கொண்டுதானிக்கிறோம்.

உலக கட்சி தினம் அதாவது WORLD PARTY DAY இதில் அரசியல் சாயம் பூசாமல் சந்தோஷத்தினை பகிர்ந்து கொள்வது என்று எடுத்துக்கொள்ளலாம். அதாவது மேலை நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் உயிரோடு இருப்பதே மகிழ்ச்சிதான் வேடிக்கையாக இருந்தாலும் ஏப்ரல் 3 இதற்காக காத்திருக்கிறது.

April 3: What is special today

இந்நாளில் சில நிகழ்வுகள் அவை

பிடல் காஸ்ட்ரோ கியூபாவை சேர்ந்த பொதுவுடைமை புரட்சியாளரும், அரசியல்வாதியும் ஆவார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்றார். ஏப்ரல் 3ம் தேதி 1958 ல் பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் அவானா மீது தாக்குதல் தொடுத்தது.

அதே நாளின் இன்னொரு அற்புதமான செய்தி 1956 சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தைஅடைந்தது. பூமியை விட வேறொரு விண்பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1982 போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டினாவிடம் இருந்து மீளப்பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையைஅனுப்பியது.

2010 ஆப்பிள் நிறுவனம் 1வது தலைமுறை ஐ-பேடு கணிணியை வெளியிட்டது.

April 3: What is special today

2017 உருசியாவில் சென் பீட்டர்ஸ்பேர்க் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 14பேர் கொல்லப்பட்டு பலர்காயமடைந்தனர்.

ஏப்ரல் 3 ந்தேதி 1903ம் வருடம் பிறந்தார் கமலாதேவி. கமலாதேவி சட்டோபாத்யாய் இந்திய சமூக சீர்திருத்தவாதி,பெண்ணியவாதி, மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர். எழுத்தாளரும் கூட 14வயதில் முதல் திருமணம் நடந்தது கணவர் இறந்தார் அதன் பிறகு அதன் பிறகு ராணி மேரி கல்லூரியில் தன் படிப்பை தொடர்ந்தபோது அறிமுகமானபன்முகத்தன்மை உடையவராக இருந்த அரிந்திரநாத்க்கும் கமலாதேவிக்கும் 20வயதில் இரண்டாம் திருமணம் நடந்தது. ஒரு மகனின் பிறப்பிற்குப்பிறகு, அவர் சில படங்களில் நடித்தார் அந்தகாலத்தில் இதற்கெல்லாம் மிகவும்எதிர்ப்பு கிளமபியது. திருமணமான பல ஆண்டுகளுக்கு பிறகு கமலாதேவியும் அவர் கணவரும் பிரிந்தனர், அந்நாளில் இது பெண்கள் பின்பற்ற அஞ்சும், தயங்கும் மிகப் புதிதான ஒரு நடைமுறை எனவே இதைக் குறித்தும் கமலாதேவி மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்தன.

1907 சிதம்பரநாதன் செட்டியார் தமிழகத் தமிழறிஞர் மொழியலாளர் அவரின் பிறந்த தினமும் இன்றே, 1928ம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று, டாக்டர்.ஜி.யு.போப் நினைவு தங்கப் பதக்கத்தை வாங்கினார். 1943ம் ஆண்டு தமிழ்ச் செய்யுள் வரலாறு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டத்தை முதன் முதலில் பெற்ற சிறப்புக்குரிய தமிழறிஞர் ஆவார்.

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தவர் இவர் படங்களில் விலங்குள்கிரிக்கெட், கதாநாயகனுக்குப் பாதுகாப்பு என்று எல்லா வேஷமும் கட்டும். ராம நாராயணன் தென்னிந்திய திரைப்படஇயக்குநர், படங்கள் ஏதும் போனியாகாமல் இருக்கும்போது, கடவுள் விலங்குகள் என்று இவருடைய படங்கள் 100 நாட்கள் சக்கை போடு போட்டது. 36 ஆண்டுகளில் 125 திரைப்படங்களை இவர் இயக்கியது உலக சாதனைகளில் ஒன்றாகும். அவர் பிறந்ததும் ஏப்ரல் 3ந்தேதி 1949ம் வருடம்

1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் தென்னிந்திய நடிகர்பிரபுதேவா, இதுவரையில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் ஆடியுள்ளார். சிறந்த நடன ஆசிரியருக்கான இந்தியதேசிய திரைப்படவிருதைப் பெற்றுள்ளார். சமீபத்தில் லட்சுமி என்ற படம் இவரின் நடிப்பில் வெளியானது.

ஒளவை துரைசாமி சென்னை பல்கலைக்கழக வித்துவான் தமிழறிஞர் இலக்கியம் மீது தீவிர பற்றோடு இருந்தாலும்வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல், உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் சேர்ந்தார்.அதன் பிறகு தமிழை முறையாக பயிலவேண்டும் என்று ஆசிரியராக பணி புரிந்துகொண்டே தமிழ்பாடம் பயின்றுபல்வேறு இலக்கியங்களை எழுதியவர் 1981ம் ஆண்டு தன் 77வது வயதில் ஏப்ரல் 3ந்தேதி இன்னுலகை நீத்தார்.

(தொடர்ந்து வரும்)

English summary
April 3 is called as Rainbow day and come let us see what and all happened on April 3.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X