• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இதயமே.. செயற்கை இதயமே!

|

- லதா சரவணன்

ஏப்ரல் பிறந்து ஓடி விட்டது 3 நாட்கள். இன்று ஏப்ரல் 4

ஐரோப்பிய வரலாற்றில் நெப்போலியனின் தாக்கம் அதிகம். இத்தாலியின் மன்னன், பிரெஞ்சுப் புரட்சியின் தளபதி, ஆட்சியாளன், பேரரசன் 1814 ஏப்ரலில் நெப்போலியனைப் பதவியில் இருந்து இறங்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். 1814 ல் நெப்போலியன் முதற்தடவையாக முடிதுறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை அரசனாக அறிவித்தார்.

April 4: First artificial heart transplantation held this day

1818-13 சிவப்பு வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

1865 அமெரிக்க உள்நாட்டுப்போர் கூட்டுபடைகள் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் ஐக்கிய அரசு அதிபர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்கு விஜயம் செய்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமைமுறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. அடிமை முறை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.

1905 இந்தியாவில் இமாச்சலப்பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களைக் காணவும், மலைப்பாங்கான இயற்கை அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பாண்டவர் காலத்துக் கோவில்கள் பல இங்கிருக்கிறது. கோபால்பூர் என்ற ஊரில் இயற்கைப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. காங்காவில் உள்ள கோட்டையும் காணத்தக்க இடமாகும். ஏப்ரல் 4ம் தேதி 1905ம் தேதியில் மிகக் கடுமையான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதில் 2000பேர் இறந்தனர்.

1782ம் ஆண்டு ஜோசப் மைக்கேல் ஜாக்யூஸ் மான்ட்கோல்பியர் என்ற இரண்டு சகோதரர்கள் பிரான்ஸில் ஒரு பெரிய கூண்டுக்குள் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்கவிட்டார்கள். அதற்கு பெரிய பந்து என்று பொருள் அதன் பின் 1852ல் ஹென்றி கிப்பார்டு என்பவர் ஒரு பெரிய சுருட்டின் வடிவத்திலிருந்த கூட்டின் அடியில் நீராவி எஞ்சினைப் பொறுத்தி கூட்டிற்குள் சுடான வாயுவை நிரப்பி விரும்பிய திசையில் செலுத்த முடிந்தது, அதன் பின் அலுமினியத்தாலான பெரிய கூண்டுச் சட்டத்தை அமைத்து அதற்குள் ஹைட்ரஜனைச் செலுத்தி உப்ப வைக்க பல ஆயிரம் கிலோகிராம் எடையுள்ள சரக்குகளையும் நூற்றுக்கணக்கான பயணிகளையும் சுமந்து செல்லும் படி கண்டுபிடித்தார்கள். அதற்குத்தான் வான்கப்பல் என்று பெயர் 1933 அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது இதே ஏப்ரல் 4ல்தான்.

1968 அமெரிக்க கருப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் யேம்சு ரேய் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் இன்னொரு நிகழ்வும் நடந்தது.1968 அப்பல்லோ 6 விண்கப்பல் நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டது

உலகமே இன்று செயற்கையின் பின்னால் போய்விட்டது. செயற்கை அரிசி முட்டை, மீன், என்று உணவில் மட்டுமல்ல இப்போதெல்லாம் மனிதர்களின் மனதிலும் கூட செயற்கைத்தனம் நிரம்பி வழிகிறது. 1969ம் ஆண்டு மருத்துவர் டெண்டன் கூலி உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

April 4: First artificial heart transplantation held this day

மைக்ரோசாப்ட், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது மேம்படுத்துவது உரிமை அளிப்பது என வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. 1975 மைக்ரோசாப்ட் நிறுவனம் பில்கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் இணைப்பில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது, இன்று வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. அல்டைர் 8800 விற்கு பேசிக்மொழி மென்பொருள், பின்னர் 1980களில் தான் தனிமேசைக் கணிணி இயங்குதளம் ஆரம்பிக்கப்பட்டது.

1975 வியட்நாம் போர் சாய்கோன் நகரில் அநாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் உயிரிழந்தனர்.

April 4: First artificial heart transplantation held this day

நாசாவின் கொலம்பியா விண்ணோடத்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோட்டம் ஆகும் இதன் முதல் பயணம்1983 சாலஞ்சர் விண்ணோட்டம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது, மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் ஜனவரி 28 - 1986 ல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 வினாடிகளில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் என்டெவர் விண்ணோட்டம் தயாரிக்கப்பட்டு 1992இல் முதற் தடவையாய் ஏவப்பட்டது.

2013 ல் இந்தியாவின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்தைல் 70பேர் உயிரிழந்தனர்.

1855 மனோன்மணீயம் எழுதிய பெ. சுந்தம்பிள்ளை பிறந்தார், தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார். இவரது தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாரணசாமி. இவரிடமே மறைமலைஅடிகள் தமிழ் படித்தவர், 1876 ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் இவரால 1891ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்டது. மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த்தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜீன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

என்னப்பா சொல்றீங்க.. இந்தியர்களின் ஆயுட்காலம் 2.5 வருஷம் குறையப்போகுதாம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

1979 ல் இதே நாளில் தமிழில் 2000ம் வருடத்தில் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த சிம்ரன் பிறந்தார். இதே நாளில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் பிறந்தார்.

தரேப், அபூஸ் & இன்செஸ்ட் நேஷனல் நெட்வொர்க் ஆகியோரால் கல்லூரி மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டது. இந்த தினத்தில் RAINN தினத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைப் போல அமெரிக்காவில் 98 விநாடிகளுக்கு 12 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக RAINN இதே ஏப்ரல் நான்காம் நாளில் ஆரம்பிக்கப்பட்டது.

(தொடர்ந்து வரும்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
On this day in 1969, first Heart transplantation operation performed in US.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more