• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. மதுவுக்கு எதிராக மெட்ராஸ் கொந்தளித்த நாள் இன்று!

|

- லதா சரவணன்

ஏப்ரல் 5ம் நாள் 1879. பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. அதற்கு பசுபிக்போர் என்று பெயர். இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் மாக்கடலில் நடைபெற்ற போர் கிழக்கு ஆசியாவில் எட்டு வருடங்கள் நீடித்தது.

சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி உப்பு மீதான வரியை நீக்கக் கோரி பிரித்தானிய அரசுக்கு எதிராக உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியடிகள், அகமதாபாத் நகரத்திலிருந்து, 1930 ஏப்ரல் 5ம் தேதி சுமார் 241மைல் வரை தண்டி கிராமம் வரை தொடர்ந்து 24 நாட்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து தண்டி கடற்கரையில் உப்பை அள்ளினார்.

April 5: When Madras state erupted against Liquor menace

மதுவிலக்கு சமூக சீர்த்திருத்தம் பெற ஒரு முயற்சி, நான் மதுவிலக்கை அமல்படுத்திவிடுவேன் என்று மார் தட்டிக் கொண்ட எந்த அரசியல் கட்சியாலும் இதுவரை மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை மாறாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நேரத்தைக் குறைத்துக்கொண்டது. அதாவது டெய்ரிமில்க் சாக்லெட்டுக்காக அழும் குழந்தைக்கு ஐம்பது காசு புளிப்புமிட்டாய் வாங்கித்தந்து ஏமாற்றுவதைப் போல. ஆனால்1932ல் பின்லாந்தில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.

1930ல் இந்தியாவில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி சாராயம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டங்களின் விளைவாக அன்றைய சென்னை மாகாணத்தில் 9000 சாராயக் கடைகளை ஏலம் எடுக்க ஆளில்லாமல் போனது. 6000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பல தாலுகா மாவட்டப் பஞ்சாயத்து போர்டுகள் தென்னை, பனைமரங்களைக் கள்ளிறக்கக் குத்தகைக்கு விடுவதில்லை என்று தீர்மானம் இயற்றியது. ஆனால் தற்போது இந்தியாவில் தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டு அரசே மதுவிற்பனை செய்யும் மாநிலமாக முன்னேறி வருகிறது வேதனை அளிக்கிறது.

ஏப்ரல் 5ம் தேதிக்கும் இரண்டாம் உலகப்போரிற்கும் அநேக ஒற்றுமை உள்ளது போலும், அந்த தேதியில் வேறுவேறு வருடங்களில் நிறைய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது. 1936 மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர். 1942 இரண்டாம் உலகப்போர் ஜப்பானியப் போர் கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின. 1943 ல் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900பேர் கொல்லப்பட்டனர்.

1944 ஏப்ரல் 5ம் தேதி கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளுர் மக்கள் கொல்லப்பட்டனர். 1945 யுகோசுலாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் உடன்பாடு செய்து கொண்டார். 1946ஆம் ஆண்டு 11மாத ஆக்கிரமிப்பின் பிறகு சோவியத்படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டுவிலகின. 1949 அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77பேர் கொல்லப்பட்டனர். 1956 பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பார்ட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார்.

1971 இலங்கையில் சிறிமாவோ ப்ணடாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னனியினர் நாட்டின் தென்பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 1981 தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1998 அகாசி கைக்ஜோ, உலகின் மிகப்பெரிய தொங்குபாலம், ஜப்பானில் 3,8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

1901 வல்லம் என்னும் சிற்றூரில் இந்தியக் கணிதவியலாளர் சுப்பைய்யா சிவசங்கர நாராயணபிள்ளை பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கணிதவியலாளரில் ஒருவர். எண் கோட்பாட்டில் பல நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த வாரிங் பிரச்சனையில அவருடைய சாதனை மிகப்பெரியதாகப் பேசப்படுகிற ஒன்று.

1923 சாராதா மேனன் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் என்ற பெருமைக்கு உரியவர், இவர் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கியவர், மனநோயளிகளைப் பேணுதல், தொழில்,வேலைவாய்ப்பு பயிற்சிகள், மறுவாழ்வு அளித்தர் போன்றபணிகளை செய்தது அந்த தொண்டு நிறுவனம். தமிழ்நாடு அரசு 2016ம் ஆண்டு அவ்வையார் விருதையும், அதே ஆண்டு இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சாரதா மேனனுக்கு அன்னை தெரசா விருதும் வழங்கப்பட்டது. மேலும் உயரிய விருதான பத்மபூசன் விருதையும் பெற்றவர்.

1957ல் ஏப்ரல் 5ம் தேதி ஓர் இந்திய தொழிலதிபரும் வள்ளலும் ஆன ராம.அழகப்பசெட்டியார் இறந்தார், அன்னை தேசம் விடுதலை அடைந்த நேரத்தில் பல கல்விச்சாலைகளையும், ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர். கொச்சி டெக்ஸ்டைல்ஸ் என்று 1937ம் ஆண்டு துவங்கி பின்னர் அழகப்பா டெக்ஸ்டைல்ஸ் ஆலையை கேரளாவில் திருச்சூர் அருகே புதுக்காடு என்ற இடத்தில் துவங்கினார்.

ஏ.பி.நாகராசன் தமிழ் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். 1960களின் இடையில சரஸ்வதிசபதம், திருவிளையாடல், கந்தன் கருணை திருமால் பெருமை போன்ற படங்கள் இவர் இயக்கியத சமூக கருத்துக்கள் உள்ள படங்களும் இவரால் இயக்கப்பட்டுள்ளது. 1977ம் வருடம் ஏப்ரல் 5ந்தேதி இயற்கை எய்தினார். பாலிவுட் நாயகி மர்மான முறையில் இறந்துபோன திவ்யபாரதியும் ஏப்ரல் 5ம் தேதிதான் இறந்தார் வருடம் 1993.

பாலத்தீனம் தீவுகளில் இந்த ஏப்ரல் 5ம் தேதி குழந்தைகள் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 5ந்தின் சிறப்புகள் இன்னும் முடியவில்லை, இப்போது ஒரு இடத்திற்கு செல்லவேண்டும் என்றால் நமது மொபைல்போனில் மேப்பை அழுத்தி வழி தெரிந்து கொள்கிறோம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைவாக பயணிப்பவர்கள் கையில் ஒரு பேப்பரில் போகும் பாதையை வரைந்து வைத்துக்கொண்டிருப்பார்கள், நாம் கூட புதையலைத் தேடிப்போகும் சில சினிமா படங்களில் அதைப் பார்த்திருப்போம் அப்படி கையில் மேப்பை பார்த்துக்கொண்டு இருப்பதற்கும் இந்த தினம் (READ A ROAD MAP). அறிவியல் புனைகதைத் தொடரின் ரசிகர்கள் ஸ்டார் ட்ரெக் ஏப்ரல் 5ம்தேதி (CONTACT DAY) முதல் தொடர்பு தினத்தை கொண்டாடுகிறார்கள்.

இன்று இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விருப்பமான உணவான பீட்ஸா ஏப்ரல் 5ம்நாள் பீட்சா தினமாக கொண்டாடப்படுகிறது.

மலேசியாவின் ஹான் சீனர்கள் கிங்கிங் பெஸ்டிவல் அதாவது சமாதி திருவிழா நாளாக கொண்டாடப்படுகிறது, பாராம்பரிய உணவு வழங்கல்களால் மற்றும் பரந்த கல்லறைகள் மூலம் மக்களின் முன்னோர்கள் கெளரவிக்கும் ஒரு நேரமாகும். தமிழ்நாட்டில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மதிப்பில்லாமல் போனாலும், வெப்பநிலை உயர்வு மற்றும் மழைப்பொழிவு அதிகரிப்பதால், கிங்கிங் வசந்த காலத்தில் ஆலைக்கு விவசாயிகளுக்க ஒரு அடையாளமாக இருக்கிறது.

(தொடர்ந்து வரும்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
On April 5 1930, entire Madras state erupted against Liquor menace and agitated against the liquor sales.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more