• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று சியாமிஸ் பூனை தினம்.. தெரியுமா

|

-லதா சரவணன்

ஏப்ரல் 6

உடல் ஆரோக்கியம் இவற்றில் பெரும் பங்கு வகிப்பவை உடற் பயிற்சிகள்தான். இன்றைய காலகட்டத்தில் அந்த உடற்பயிற்சி நேரங்களைகளில் ஏதாவது பார்ட்டைம் வேலைபார்க்கும் உழைக்கும் வர்க்கமாகி வருகிறோம். சில ஆக்கப்பூர்வமான செயல்களும் மனதின் திடத்திற்கும் உடல் ஆரோக்கியம் முக்கிய ப்பங்கு வகிக்கிறது. எனவேதான் பள்ளிகளில் விளையாட்டும் உடற்பயிற்சியும் சேர்த்தே மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அப்படி விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களுக்கு நல்ல வேலைகளும் அளித்து அவர்கள் எதிர்காலம் வலம்பெறும் என்பதை அரசாங்கமும் பள்ளியும உணர்த்திவருகிறது. அப்படியான நாளை கொண்டாடவும், மாணவர்களை உற்சாகப்படுத்திடவும் ஏப்ரல் ஆறாம் நாள் தேசிய மாணவர் தடகள தினம் கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் எத்தனை முக்கியமோ அப்படித்தான் சில தேவையில்லாத கொண்டாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 1920ல் அமெரிக்க அரசியலமைப்பின் 18வது திருத்ததை அரசு ஒப்புக்கொண்டபோது, அமெரிக்க குடிமக்களிடம் இருந்து பீர் உட்பட அனைத்து போதை மருந்துகளையும் தடை செய்தது, நம் மூரில் புலி வருது கதையாகிப் போன மதுவிலக்கு போல அமெரிக்காவிலும், 1933ஆம் ஆண்டில் இத்தடை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 6ம் நாள் பீர் தினமாக கொண்டாடப்படுகிறது.

கிமு 648 ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது ஏப்ரல் 6ம் தேதியான இன்றுதான். சூரிய கிரகணம் என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது கதிவரன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே ஏற்படும்.

April 6: Siamese cat day today

அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிகுந்த இடம் நியூயார்க். டச்சுக்காரர்களால் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. ஆஞ்கிலேயர்களின் கைக்கு இந்த பகுதி 1664ல் மாறும் வரை நியு ஆம்ஸ்டர்டாம் என்று அழைக்கப்பட்டது. இது நியூயார்க் நகரை முதலில் கண்டுபிடித்தவரின் பெயராகும். உலகின் பல உயராமான கட்டிடங்கள் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடமும், உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன. வணிகம் அதிகரிக்கப்பட்ட காலங்களில் அடிமைகள் இங்கு சுதந்திர தேவியின் சிலையின் முன்பே வரவேற்கப்பட்டனர். பின்னர் சில ஆண்டுகள் அடிமைகளின் பணியில் நியூயார்க் தன் வளர்ச்சியை மேற்கொண்டது. 1712 ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது.

செலுலாயிடுகள் அதிகம் இந்த வார்த்தைகளைப் புழக்கத்தில் கேட்டிருப்போம். இவை நைட்ரோசெல்லுலோசு, கற்பூரம் ஆகியவற்றில் இருந்து சாயங்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இதற்கு முதன் முதலாக உருவாக்கப்பட்ட எந்த உருவமாகவும் எளிதில் வர்ாத்தெடுக்கக்கூடிய வெப்ப நெகிழி என்று கருதப்படுகிறது. முன்பு கத்தியின் கைப்பிடிகள்,இகைக்ருவிகள் மற்றும் பல சாதனங்கள் செய்ய யானைத் தந்தங்கள் பயன்படுத்தப்பட்டன. அதற்கு மாற்றாக முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்டது இந்த செல்லுலாயிடு ஆகும். திரைப்படத்துறையில் படச்சுருள்கள் தயாரிக்க இதை பயன்படுத்தினார்கள். 1950 ல் அவை புழக்கத்திற்கு வந்தன. ஆனால் இவை எளிதில் தீப்பிடிக்க கூடியதாகவும் தயாரிப்பு செலவு அதிகமாகவும் இருப்பதால் மாற்று ஏற்பாடுகள் இப்போது வந்தாலும், ஒரு காலத்தில் ராஜாவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது அப்படிப்பட்ட செல்லுலாயிடுகள் ஏப்ரல் 6ம் தேதி 1869 ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒலிம்பிக் இதைப்பற்றி விளக்கங்கள் தேவைப்படவில்லையெனினும் வரலாற்றில் ரோமப்பேரரசு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிம்பிக்கை தடை செய்து வைத்திருந்தது. அதன் பிறகு 1896ல் அந்தத் தடைகளை உடைத்து கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் முதற்தடவையாக ஒலிம்பிக் போட்டி ஏப்ரல் 6ம் தேதிதான் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் பாதிப்புகளை நாம் அறிவோம் எல்லாவற்றிகும் முடிவு என்பது உண்டென்பதைப் போல தொடக்கமும் உள்ளது அல்லவா 1917 ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் ஐக்கிய அமெரிக்க செருமணி மீது முதலாம் உலகப்போர் அறிவிக்கப்பட்டது.

April 6: Siamese cat day today

அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்த பெரும்பாலனாவர்களின் முதல் செயல் ராசிபலன் கேட்பது அல்லது படிப்பது சிலருக்கு அன்றைய தினம் சில லாபங்களையும் பலருக்கு சிக்கல்களையும் கொண்டு வந்து சேர்க்கும். ஏப்ரல் 6ம் தேதியில் அப்படி சோகமான சோதனையான நிகழ்வுகள் யாருக்கு வந்துள்ளது வருடங்கள் மாறினாலும் சில வரலாற்று நினைவுகள் நீங்காமல் இடம் பிடித்துவிடுகின்றன அல்லவா, 1936 ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.

1941 இரண்டாம் உலகப்போர் யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தினை ஜெர்மனி முற்றுகையிட்டது. 1945 இரண்டாம் உலக்போர் சாரயேவோ செருமனிய குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்து? ! 1968 அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம் பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர். 1979 ல் நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.

1919 மகாத்மா காந்தி பொது வேலைநிறுத்தத்தை அறிவித்தார், 1930 தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாகிரகத்தை ஏப்ரல் 6ம் நாள் முடித்துவைத்து, கையளவு உப்பை எடுத்து இதனுடன் நான் ஆங்கிலேயப் பேரரசின அடித்தளத்தை அசைக்கிறேன் என்று கர்ஜித்தார்.

1965 முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல்தொடர்பு செயற்கைக்கோள் நிறுவப்பட்டது இந்த ஏப்ரல் 6ம் நாளில்தான், 1973 பயனியர் 11 செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது.

தற்போதைய பாகிஸ்தானின் ஊடுருவலும் இந்தியாவின் பதிலடியும் அபிநந்தனின் வீரத்தையும் பாகிஸ்தான் மட்டுமல்ல எல்லா நாடுகளும் தெரிந்து கொண்டது. இருப்பினும் 1998ல் ஏப்ரல் 6ம் நாள் இந்தியாவிற்கு எதிரான தாக்கக்கூடிய நடுத்தர ஏவுகணைகளை அணுகுண்டு சோதனை என்றபெயரில் பாகிஸ்தான் சோதனை செய்தது.

1973 பிரபல திறமையான நடிகரும் தியாகராஜன் அவர்களின் மகனுமான பிரசாந்தின் பிறந்த தினம். அற்புதமான கலைத்திறமைமிக்கவர் தன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிசகு காரணமாக தமிழ் திரையுலகை விட்டு சில காலம் விலகினாலும் மீண்டும் ஒரு மிகப்பெரிய பிரேக்கிற்காக காத்திருக்கிறார்.

மூன்று மிக முக்கிய ஆளுமைகளின் இறப்புதினமாக ஏப்ரல் 6 பதிவாகியிருக்கிறது, நடுத்தர வர்க்கத்தில் குடும்பத்தலைவனின் கவனிப்பு இல்லாத குடும்பத்தை சுமக்கும் ஒரு பெண்ணாக அவள் ஒரு தொடர்க்கதை, கணவின் வஞ்சகத்திற்கு துளியும் பயப்படாத பெண்ணாய் அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாயம் பேசும் விதியின் வழக்கறிஞர் என பல்வேறு கோணத்தில் தன் நடிப்புத் திறமையை வெளியிட்ட நடிகை சுஜாதா 2011ம் வருடம் ஏப்ரல் ஆறாம் நாள் காலாமானார்.

அதே வருடம் அதே நாள் தமிழ்நாட்டின் பிரபல வீணை இசைக்கலைஞரும் கருநாடக இசைப் பேராசிரியரும் ஆன கல்பகம் சுவாமிநாதனும் இயற்கை எய்தினார்.

கிருஷ்ணன் - பஞ்சு திரைப்பட இரட்டை இயக்குனர்கள் 50க்கும் மேற்பட்ட படங்களை பல மொழிகளில் இயக்கிவெற்றியும் கண்டவர்கள் அவர்களில பஞ்சுவின் மறைவு இந்த ஏப்ரல் 6ம் நாள் 1984ம் வருடம்.

60 ஆண்டுகளுக்கும் மேலாக சிலப்பதிகாரத்தை பட்டிதொட்டியெங்கும் பரப்பிய சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் இன்று (06-04-2019)உடல்நிலை குறைவு காரணமாக காலாமானார்.

சியாம்ஸ் பூனை 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான ஒரு இனமாகும் தாய்லாந்து முன்பொரு காலத்தில் சியாம் என்று அழைப்பட்டது சர்வதேச பூனை சங்கம் நவீன சியாம் பூனைகளை பாதுகாத்தது. வட அமெரிக்காவிலேயே மிகவும் பிரபலமான இனங்களான இதன் கண்கள் நீல பாதம் வடிவமுடியது. மனிதர்களிடம் மிகவும் தோழமையுடன் பழகக்கூடியது. இன்று சர்வதேச சியாமிஸ் பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

(தொடர்ந்து வரும்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
April 6 is siamese cat day. Here is a compilation of other IMP events on this day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more