For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. 100க்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட அந்த நாள்!

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

சென்ற தினங்களில் சொன்னதைப்போல இரண்டாம் உலகப்போருக்கும் ஏப்ரல் தினங்களுக்கும மிகப்பெரும் தொடர்பு இருந்து வந்ததுள்ளது. ஒவ்வொரு நாளும் அதன் வீரியம் அதிகரிக்கும் நாளாக ஏப்ரல் இருந்து வருகிறது. 1942 இரண்டாம் உலகப்போர் ஆல்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது, 1939 இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. 1943 உக்ரைனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாட்சிகள் 1100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக்கொன்று புதைத்தனர்.

1945 இரண்டாம் உலக்போர் உலகில் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்க கடற்படையினாரால் மூழ்கடிக்ப்பட்டது. 1141 மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள்.

April 7: Nazis kill hundreds of Jews in Ukraine

1927 முதலாவது தொலைதூரத் தொலைக்காட்சி சேவை வாசிங்டன் நகரம், நியூரோக் நகரம் ஆகியவற்றிக்கிடையில் மேற்கொள்ளப்பட்டது.

1928 வால்ட் டிஸ்னி உலகப்புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் இவர் உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்காக ஐம்பது ஒன்பது ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார் இதில் ஒரே ஆண்டில் நான்கு விருதுகள் வென்றது உலகசாதனையாகும். தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1946 பிரான்சிடம் இருந்ததான சிரியாவின் விடுதலை அங்கீகரிப்பட்டது. 1948 சீனாவில் ஷங்காயில பெளத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்தகுருங்கள் உயரிழந்தனர்.

1948 நாம் சுதந்திரம் பெற்றதற்கு அடுத்த வருடத்தல் உலக சுகாதார அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

1978 நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை அமெரிக்கத் தலைவர் ஜிம்மி கார்ட்டா கைவிட்டார்.

1989 கொம்சோமோலெட்ஸ் என்ற சோவியத் நீர்மூழ்கிக் கப்பல் நார்வேயில் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் 42பேர் உயிரிழந்தனர். 1990
எசுக்காண்டினாவியன் ஸ்டார் பயணிகள் கப்பல் தீப்பிடித்தில் 159 பேர் உயிரிழந்தனர்.

2003 அமெரிக்கப்படைகள் பக்தாத்தைக் கைப்பற்றின அடுத்த இரு நாட்களில் சதாம் உசைனின் ஆட்சி கவிழ்ந்தது.

2007 தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட வெடிப்பபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

April 7: Nazis kill hundreds of Jews in Ukraine

2015 ம் ஆண்டு ஏப்ரல் 7 உலகை திரும்பிப்பார்க்க வைத்த செம்மரக் கடத்தல் குற்றவாளிகள் என்று கூறப்பட்ட 20பேர் ஆந்திரப்பிரேதச கடத்தல் தடுப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 7 வருடங்களில் வேறானாலும் பல சாதனை மனிதர்களின் பிறப்பு தினமாக உள்ளது

1770 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஆங்கிலேயக் கவிஞர், தி பிரிலூட் இவரின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இவர் தனது மரணம் வரையில் இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்தார்.

1894 லூயிஸ் பிளாக் ஹாம்மெட் ஐக்கிய அமெரிக்க வேதியியலாளர். ஹாம்மேட் சமன்பாட்டிற்காக அறியப்படுவர். 1961ல் பிரீஸ்ட்லீ பதக்கம் பெற்றவர். கர்டின் ஹாம்மெட் விதிகள் இவர் பெயரால் வழங்கப்படுகிறது.

1903 ஏப்ரல் 7ம் தேதி முருகேசு பாலசுந்தரம் இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார். லண்டன் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் கலைமாமணிப் பட்டம் பெற்றுத் திரும்பிய இந்தியர்.

1920 உலப்புகழ்பெற்ற இந்திய இசையை மேற்குஉலகிற்கு கொண்டு சென்ற சிதார் இசைக்கலைஞர் ஆவார். 1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருதும், 1999 இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதும் வழங்கப்பட்டது.

பிரேம்நசீர் மலையாளத்திரைப்பட நடிகர், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றவர் 610 திரைப்படங்களில் நடித்துள்ளவர் 34 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்த பெருமைக்குரியவர்.

1935 ஏப்ரல் 7 எஸ்பி முத்துராமன் அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கு ம் கூடுதலானத் திரைப்படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கியவர் தென்மண்டல பிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றவர்.

1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் நாள் குழந்தைகளுக்குப் பிடித்தமான நடிகர், ஜாக்கிசானின் சாகசங்கள் கார்ட்டூன் தொடர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்களை பிடித்த தொடர், ஹாங்காங் நடிகர் ஆக்ஷன் இயக்குநர் திரைப்படத்தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்புகலைஞர்,
திரைக்கதையாசிரியர், பாடகம் தொழில் நிறுவனர் என பன்முக திறமையாளர். 1970களிலிருந்து நடித்துவரும் இவர் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1962 ஏப்ரல் 7ம் நாள் சர்ச்கைக்குரிய கருத்துக்களைக் கூறும் இயக்குநர் ஆர்.ஜி.வி என அறியப்படுவர் திரைப்பட இயக்குநர், எழுத்தாளர். உளவியல், பரபரப்பூட்டும் படைப்பு திகில் திரைப்படம் எடுப்பவர், ரங்கீலா என்றால் இவர் பெயர் நினைவில் வரும்

1962 ல் ஏப்ரல் 7ம் ஆண்டு இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகை கோவை சரளா அவர்களின் பிறந்தநாள் 25 ஆண்டு திரைப்பட வாழ்வில் 750 க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. நந்தி விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

ஏப்ரல் 7 1950 ஆம் ஆண்டில் உலக சுகாதர அமைப்பு உலக சுகாதார தினத்தை உருவாக்கியது. நாம் இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே எந்த நோயும் நம்மை அண்டுவதில்லை அதிலிருந்து கிடைக்கும் ஒரு பாசிட்டிவான எனர்ஜி நம்மை உற்சாகப்படுத்தும். எனவே இன்றைய தினம் உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது.

(தொடர்ந்து வரும்)

English summary
Nazis killed hundreds of Jews in Ukrain on this day in 1943.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X