• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இசை முரசும், முண்டாசு எழுத்தும் மறைந்த நாள்!

|

- லதா சரவணன்

ஏப்ரல் 8

217 ரோமப் பேரரசின் மன்னன் கரகல்லா படுகொலை செய்யப்பட்டான்.

1211 ல் ஆரம்பிக்கப்பட்ட மங்கோலியர்களின் சின் வம்சப் படையெடுப்பு என்பது மங்கோலியப்பேரரசிற்கும் மஞ்சூரியா மற்றும் வடசீனாவை ஆண்ட வர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் 23 வருடங்களுக்கும் மேலாக நீடித்து மங்கோலிய வம்சம் முழுமையாக கைப்பற்ற பின்னரே முடிவுக்கு வந்தது.

1857 கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள இராவணுவத்தைச் சோர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக தூக்கிலிடப்பட்டான்.

April 8: Tamil Nadu lose Jayakanthan today

1867 முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிசு நகரில் ஆரம்பமானது.

1906 அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் இறந்தார்.

1919 பஞ்சாப்பில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார். 1929 டில்லி நடுவன் அரசு கட்டிடத்தில் பகத்சிங் மற்றும் பதுகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர்.

1950 இந்தியாவும் பாகிஸ்தானும் லியாக்கத் நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1970 இஸ்ரேல் விமானங்கள் எகிப்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டுகளை வீசியதில் 46 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1985போபால் பேரழிவு, போபாலில் நச்சு வாயுக் கசிவினால் 2000 பேருக்கு மேல் கொல்லப்பட்ட நிகழ்வுக்காக இந்தியா யூனியன் கார்பைட்

நிறுவனத்துக்கெதிராக வழக்குத் தொடர்ந்தது.

1917 ல் எஸ்.ராமநாதன் தமிழக கருநாடக பாடகரும் வீணைக் கலைஞருமானவர் இவர் பிறந்த தினம் ஏப்ரல் 8ம் நாள்.

1954 ஏப்ரல் 8ல் பிறந்தவர் கோ.வா. லோக நாதன் இந்திய அமெரிக்க பொறியிலாளர் அமெரிக்கா வர்ஜீனியா டெக் பல்கலைக்காகத்தின் பொறியியல் கல்லூரியின் அங்கமான குடிசார் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். வர்ஜீனியா டெக்கில் ஏப்ரல் 16 2007 ல் 32பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிப் படுகொலை நிகழ்வில் உயிரிழந்தவர்களில் இவரும் ஒருவர்.

1983 ம் வருடம் தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லுஅர்ஜீன் பிறந்தார். 1988ம் ஆண்டு நித்யாமேடம் திரைப்பட நடிகை பிண்ணனிபாடகி இவரும் இன்றுதான் பிறந்தார்.

பிறப்பு மட்டுமல்ல இறப்பும் ஒருகையில் நம்மை பாதிப்பவைதான். 1964ம் ஏப்ரல் 8ம் நாளில் இறந்தார். காருக்குறிச்சி அருணாச்சலம் என்னும் தமிழக நாதஸ்வரக் கலைஞர், நாம் மிகவும் ரசித்த கொஞ்சும் சலங்கை என்னும் திரைப்படத்தில் எஸ்.ஜானகி அவர்கள் பாட சாவித்திரி நடித்த சிங்காரவேலனே பாடல் மிகவும் பிரபலமானதாகும்.

1989 ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி மறைந்தார். ஏ.எம்.ராஜா கருநாட இசையும் கலந்த பிண்ணனி இசைப்பாடகர் தெவிட்டாத காலத்தை வென்ற பாடல்களை பாடிய வாடிக்கை மறந்ததும் ஏனோ சரோஜாதேவியும், ஜெமினி கணேசனும் பாடிய பாடல்கள் மாசிலா உண்மைக்காதலே அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படப்பாடல்கள் களத்தூர் கண்ணம்மா படத்தில் கண்களின் வார்த்தைகள் பாடல்களும் வெகு பிரசித்தம்

April 8: Tamil Nadu lose Jayakanthan today

ஞானபீடவிருது, சாகித்திய அகாடமி விருது, பத்மபூஷன் விருது பெற்ற எழுத்துலக மேதை ஜெயகாந்தன் அவர்கள் ஏப்ரல் 8 2015ம் வருடம் காலமானர் இவர் பிறந்ததும் ஏப்ரலில் தான் 1950களில் தொடங்கிய அவரது இலக்கிய வாழ்க்கை வெகுஜன பத்திரிக்கைகளில் வெளியாகின. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர், உன்னைப் போல் ஒருவன் சிலநேரங்களில் சில மனிதர்கள் ஆகியவை படமாக்கப்பட்டன.

திராவிட முன்னேறக் கொள்கையில் தீவிர பற்றுகொண்டவர் முக்கியப் பங்கு வகித்தவர் இசை முரசு என்று அழைக்கப்பட்ட ஹனீபா , எல்லோரும் கொண்டாடுவோம் நட்டநடுகடல் மீது, உன் மதமா என் மதமா இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல்களில் உச்சம் தொட்ட அய்யா நாகூர் ஹனீபா அவர்கள் இறந்த நாள் ஏப்ரல் 8 2015ம் வருடத்தில் காலமானார்.

(தொடர்ந்து வரும்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Tamil Nadu lost Jayakanthan and Nagoor Haniffa today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more