For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சான்பிரான்சிஸ்கோவை மகிழ்வித்த சான் ரோமான் முத்தமிழ் விழா

Google Oneindia Tamil News

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்க வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா ஜூலை 19ம் தேதி சான் ரோமான் நகரில் மிக விமர்சையாக நடைபெற்றது. மன்றத்தலைவர் சோலை அழகப்பன் வரவேற்புரையுடன் தொடங்கியது.

சான்பிராசிஸ்கோ இந்திய தூதரக அதிகாரி திரு பாஸ்கர் அவர்கள் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அசோக் சுப்ரமணியம் ஒருங்கிணைப்பில் வளைகுடா பகுதி குழந்தைகளின் இனிய குரலிலும் இசையிலும் கவிஞன் கண்ட கனவு என்ற தலைப்பில் பாரதியாரின் பாடல்கள் பாடபட்டன.

வளைகுடா பகுதியில் முதல் முறையாக உள்ளூர் மக்களை கொண்டு நீயா? நானா மாதிரியில் விவாத மேடை நடைபெற்றது. அறிவொலி தலைமையில் "உண்ண உண்ண திகட்டாதது! உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது சைவமா? அசைவமா?? என்ற தலைப்பில் மிக சுவையான விவாதம் நடந்தது. விவாதத்துடன் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவு பொருட்கள் பற்றிய குறிப்பும் பகிரப்பட்டது.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இந்தியாவிலிருந்து வந்திருந்த தோல்பாவை கூத்து கலைஞர் அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணண் ஆகியோரின் தோல்பாவை கூத்து நடைபெற்றது. தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மைகள் மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது.

Bay area Muthamzhil Vizha held

பொம்மைகளை இயக்கும் கலைஞர்களின் குரலும் , குரல் மூலமாய் வெளிப்படும் பாவனைகளும் எள்ளல் மிகுந்த நகைச்சுவையும் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத அனுபவத்தை தருகின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை .ராமாயணத்தில் வாலி வதம் படலத்தை தோல்பாவைகளை கொண்டு செய்து காட்டியதை அரிய வாய்ப்பாக கருதி பார்த்து ரசித்தனர். வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தினர் இது போன்ற தமிழர்களின் தொல்கலைகளை வளைகுடா மக்களுக்கு தொடர்ந்து செய்து காட்ட முயற்சி செய்யபடும் என உறுதி அளித்தனர்.

வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் அடுத்த ஆண்டு விழா வளைகுடா பகுதியில் நடைபெறும் என அறிவிக்க பட்டது.

English summary
Tamils from various walks of live attended the Bay area Tamil sangam's Muthamzhil Vizha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X