For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவிட்சர்லாந்தில் பொற்றடைத் தேர்த்திருவிழா... தேர் இழுத்து பக்தர்கள் பரவசம்

சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் பொற்றடை ஆண்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பேர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பேர்ன் நகரில் அருள்புரியும் ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது.

26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.

ஊர்கூடி இழுத்தால் வாசல் வந்து தேர் சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார்.

ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேஸ்வரர்

ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேஸ்வரர்

பொன்னார் மேனியன் புலித்தோலை அரைக்கிசைத்த பெருமான் பொன்நகர் பேர்னில் சுவிட்சர்லாந்தில் அருட்பேரரசி ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரனாக செந்தமிழ்த்திருமறை கருவறையில் ஒலிக்க திருக்கோபுரத்தில் நால்வர் பெருமக்கள் எழுந்துநிற்க அருளாட்சி புரிகிறான். சைவமும் தமிழும் சிறந்து விளங்க ஞானலிங்கேச்சுரர் பெருங்கருணை புரிந்து ஐரோப்பாத்திடலில் நாளும் தமிழ் ஒலிக்க அருள்செய்துளான்.

பொற்றடை ஆண்டு தேர் திருவிழா

பொற்றடை ஆண்டு தேர் திருவிழா

ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் பொற்றடை ஆண்டுத் திருவிழா பெருவிழாவாக 17. 08. 2017 வியாழக்கிழமை முதல் 29. 08. 2017 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்று வருகிறது. 26. 08. 2017 சனிக்கிழமை தேர்த்திருவிழா பெரும் சைவப்பெருவிழாவாக நடைபெற்றது. ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட அடியார்கூட்டம் பெரும்திரளாக ஒன்றுகூடிய பெருநிகழ்வாக நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்பு

பக்தர்கள் பங்கேற்பு

பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் (Haus der Religionen) பிரதிநிதிகள், பல்சமயத் தலைவர்கள் ஒன்றுகூடி வருகை அளித்து, ஞானலிங்கேச்சுர் தேர்த்திருவிழா சிறக்க தம் வாழ்த்துக்களை நவின்று சென்றனர்.

வாழ்த்திய பெருமக்கள்

வாழ்த்திய பெருமக்கள்

றெகுலா அவர்கள் தனது உரையில் இக்கோவில் அடிக்கல் நாட்டியது முதல் இன்று விழாக்காணும் காலம்வரை நான் தமிழ்மக்களையும் அவர்களது பக்தியையும் அறிவேன். நேரில் கண்டு வியந்திருந்கிறேன். நீங்கள் சைவநெறிக்கூடத்தின் திருக்கோவில் ஊடாக பல்சமயத்தில் உறுப்பினாராக விளங்குவதும் எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தினார்.

ஆன்மீகா உரைகள்

ஆன்மீகா உரைகள்

பேர்ன் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தில் இருந்து திருநிறை. அன்ரன் மற்றும் திருநிறை வின்சன் அவர்கள் வருகையளித்து நிகழ்வைச் சிறப்பித்தனர். சைவநெறிக்கூடத்தின் கொள்கை சமயம் தாண்டி தமிழர்கள் நாம் ஒரு வலிமையான இனமாக விளங்கவேண்டும் என்பதாகும். வருகை அளித்த விருந்தினர்கள் யாவருக்கும் சிறப்பு மதிப்பளிப்பு நடைபெற்றது. புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திருமதி. றெகுலா மேடர் மற்றும் பழைய தலைவி காலநிதி. திருமதி கேர்டா கவுக் ஆகியோர் வருகையளித்திருந்தனர்.

பாரம்பரிய விழா

பாரம்பரிய விழா

பேர்ன் மாநிலத்தின் குடிவரவு குடியகல்வுத் திணைக்கழகத்தின் அதிகாரி திரு. பெல்லெர் அவர்களும் வருகை அளித்து விழாவைச் சிறப்பித்துப் பேசினார். தமிழர்கள் தமது பாரம்பரியத்தைப் பேணுவதற்கு தனக்கு வாய்ப்புக்கிடைப்பது மகிழ்ச்சி எனத் தன் உரையில் தெரிவித்தார்.

தீச்சட்டி சுமந்த பக்தர்கள்

தீச்சட்டி சுமந்த பக்தர்கள்

பலபத்து அடியார்கள்கூடி வேல் குத்திக் காவடி எடுத்தனர். சிறுவர்கள், பாலர்கள், இளவயதினர், காவடி எடுத்து ஆடிவந்த காட்சி இது சுவிசா ஈழமா என வியக்க வைத்தது. பல பெண் அடியார்கள் தீச்சட்டி சுமந்து வந்து தம் வேண்டுதலை நிறைவுசெய்தனர்.

பேர்ன் நகரில் கயிலை

பேர்ன் நகரில் கயிலை

இந்த ஆண்டும் மூன்று தேர்கள் திருவலம் வந்தன. முதற்தேரில் கரிமுகக்கடவுள் பிள்ளையாரும், முருக்கப்பெருமானும், திருமால் எழுந்திருக்க, ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் நடுநாயகமாக எழுந்தகாட்சி கையிலை இங்கு வந்ததாக அமைந்தது.

திருவள்ளுவருக்கு வழிபாடு

திருவள்ளுவருக்கு வழிபாடு

உலகப்பொது மறை அளித்த திருவள்ளுவர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளம் சிறார்கள் திருக்குறள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவள்ளுவரும் சிறப்புத் தேரில் எழுந்து உலா வந்தது, சைவமும் தமிழும் இரண்டல்ல ஒன்றென விளக்கியதாக அமைந்தது.

தமிழ்மணம் நிறைந்த விழா

தமிழ்மணம் நிறைந்த விழா

தமிழ் உலகின் முதன்மைத் தமிழ் ஊடகங்கள் செய்தியினை நேரடி அஞ்சலும் பதிவு செய்தன. சைவநெறிக்கூடத்தின் சார்ப்பில் யாவருக்கும் நன்றி நவிலப்பட்டது. மேலும் தமிழ் ஊடகங்கள் பணி சிறந்து விளங்க வாழ்த்துக்களும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சைவ நெறிக்கூடம்

சைவ நெறிக்கூடம்

ஐரோப்பாத்திடல் முழுவதும் தமிழ் மணம் நிறைந்தது, பல தமிழ் அங்காடிகள் திருவிழாச் சூழலை மனதில் பதிய வைத்தது. கோவில்கள் வெறும் சடங்குகளுடன் நின்றுவிடாமல் தம் பணியை இனம், மொழி, சமயம், பண்பாடு, வரலாறு காக்கும் கருவிகாளாக விளங்கவேண்டும் எனும் சைவநெறிக்கூடத்தின் நோக்கம் ஒழுகுவதாக நிகழ்வுகள் அமைந்தன.

ஊர்கூடி தேர் இழுத்தனர்

ஊர்கூடி தேர் இழுத்தனர்

காலை 06.00 மணிக்கு தொடங்கிய வழிபாடுகளைத் தொடர்ந்து 12.30 மணிக்கு தேர் இழுக்கப்பட்டு, 13.30 மணிக்கு அருளமுது அறுசுவை விருந்தாக அளிக்கப்பட்டது. தேர் முன்றலில் முத்தமிழ் நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டால் மட்டுமே வாழ்வு உண்டெனத் தேர்த்திருவிழா அடையாளமாக விளக்குவதாக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் விளக்கினார்.

ஒற்றுமையை உணர்த்திய விழா

ஒற்றுமையை உணர்த்திய விழா

ஊர்கூடி இழுத்தால் வாசல் வந்து தேர் சேரும், இன்று நாம் திருவாசல் வந்து அடைந்துள்ளோம், ஆனால் இன்னும் வாசல் வந்து சேரவேண்டிய தேர்கள் பல உண்டு, நாம் தமிழர்கள் ஒன்றாக இத்தேரை இழுத்து திருவாசல் சேர்க்க வேண்டும் என விளக்கினார். ஒருநாள் தமிழர்கள் தேர் திருவாசல் வரும் எனும் நம்பிக்கையுடன் ஞானலிங்கேச்சுரர் திருத்தேர் விழா நிறைவுற்றது.

English summary
Gnanalingeshwarar temple car festival held on 26th august in Bern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X