For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடா இணையதள விருது விழாவில் கலகலக்க வைத்த ராதிகா..!

Google Oneindia Tamil News

டோரன்டோ: கனடாவில் நடந்த பிஸ்தா விருதுகள் வழங்கும் விழாவில் அந்த நாட்டு தமிழ்ப் பெண் எம்.பி. ராதிகா சிற்சபேசன் கலந்து கொண்டு வழக்கம் போல கலகலக்க வைத்தார்.

இணைய சந்தைப்படுத்துதல் சேவைகளை கனடா மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு அளித்து வரும் நிறுவனமான தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் சார்பில் கடந்த சனிக்கிழமையன்று Taste Of Online marketing என்ற கோலாகல நிகழ்ச்சி கனடாவில் நடைபெற்றது.

கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் ராஜ் தவரத்னசிங்கம், பரராஜசிங்கம் மற்றும் அவரது மனைவி, ராசரத்தினம், சிறீதரன் துரைராஜா, நவஜீவன் ஆனந்தராஜ் ஆகியோர் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியைத் ஆரம்பித்து வைத்தனர். அதன் பின்னர் அனைவரும் அமைதியாக எழுந்து நிற்க தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது.

யாழினி ராஜகுலசிங்கம் நாட்டியம்

யாழினி ராஜகுலசிங்கம் நாட்டியம்

நிகழ்விற்கு வந்திருந்த தமிழ் மக்கள் அனைவரையும் வரவேற்கும் முகமாக சிறப்பு நாட்டியமொன்றை யாழினி ராஜகுல சிங்கம் வழங்கினார். அந்த நடனம் அனைவரையும் ஈர்த்தது.

விருதுகள்...

விருதுகள்...

இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான விருது வழங்கும் விழா இடம்பெற்றது. தமிழ் பிசினஸ் கனெக்ஷன்ஸ் நிறுவனம நடத்திய Taste Of Online marketing நிகழ்வின் முக்கிய அம்சமே Biztha Web award 2013 விருது வழங்கும் விழா தான்.

நான்கு பிரிவுகளில் விருதுகள்

நான்கு பிரிவுகளில் விருதுகள்

சிறந்த ஊடகத் தகவல் இணையதளம், சிறந்த தன்னார்வத் தொண்டு இணையத்தளம், சிறந்த தொழில் சேவை இணையதளம், சிறந்த கூட்டமைப்புக்கான இணையத்தளம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

விருது பெற்ற நினைவுகள்..

விருது பெற்ற நினைவுகள்..

முதலாவதாக சிறந்த ஊடகத் தகவல் இணையதளத்திற்கான விருது கடந்த பல ஆண்டுகளாகவே தமிழர்களுடன் ஒன்றிணைந்து, தமிழர்களின் நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றி வரும் நினைவுகள் இணையத்திற்கு வழங்கப்பட்டது. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சின்னதுரை ஜெயக்குமார் இந்த விருதினை நினைவுகள் நிறுவனத்திடம் வழங்கினார்.

கனடிய தமிழ் இளையர் கூட்டமைப்பு தளத்திற்கும் விருது

கனடிய தமிழ் இளையர் கூட்டமைப்பு தளத்திற்கும் விருது

அதைத் தொடர்ந்து சிறந்த தன்னார்வத் தொண்டு இணையத்திற்கான விருது யாழ் பலகலைக்கழக முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியரும் , விரிவுரையாளருமான பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களால் கனடியத் தமிழ் இளையோர் கூட்டமைப்பின் இணையத்தளமான www.ctya.org க்கு வழங்கப்பட்டது.

ஐதாமர் தளத்திற்கும் விருது

ஐதாமர் தளத்திற்கும் விருது

இதன் பின்னர் சிறந்த தொழில் சேவை இணையதளத்திற்கான விருதினை கனடியத் தமிழ் மருத்துவ சங்கத்தின் தலைவர் ராஜேஷ் லோகன் தங்க நகை விற்பனை மற்றும் உடனடி பணப் பரிமாற்றங்களில் சிறந்த சேவையாற்றி வரும் iThamor நிறுவனத்திடம் வழங்கினார்.

சிறந்த கூட்டமைப்பு இணையத்திற்கான விருது

சிறந்த கூட்டமைப்பு இணையத்திற்கான விருது

இதைத் தொடர்ந்து சிறந்த கூட்டமைப்பு இணையத்திற்கான விருது www.noblereign.net இணையத்திற்கு வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினர்கள் கோபிநாத்.. ராதிகா

சிறப்பு விருந்தினர்கள் கோபிநாத்.. ராதிகா

விழாவில் விஜய் டிவியின் நீயா நானா புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவிற்கு வந்திருந்த மக்கள் அனைவருக்கும் உற்ச்சாகமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். தன் உரைக்கு இடையே அவ்வப்போது சிறு சிறு நகைச்சுவை பேச்சுக்களையும் அள்ளித் தெளித்து அனைவரையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் கோபிநாத்.

கலகலக்க வைத்த ராதிகா

கலகலக்க வைத்த ராதிகா

கூடவே நிகழ்ச்சியில் கனடா தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசனும் கலந்து கொண்டு கலகலப்பைக் கூட்டினார்.

கலகலக்க வைத்த ராதிகா

கலகலக்க வைத்த ராதிகா

கூடவே நிகழ்ச்சியில் கனடா தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசனும் கலந்து கொண்டு கலகலப்பைக் கூட்டினார்.

English summary
Neeya Naana fame Gopinath played as guest in Canada awards function. He and Canadian Tamil MP Radhika Sitsabesan brought cheers to the function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X