For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 லட்சம் இந்தியர்களின் உயிரை குடிக்கும் புற்றுநோய்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் இந்தியர்கள் புற்றுநோய்க்கு பலியாவதாக உலக சுகாதார மையம் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையம் சர்வதேச புற்றுநோய் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில் இந்தியாவில் புற்று நோய் தாக்கம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2012-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பபட்டுள்ளனர்.அவர்களில் 4 லட்சத்து 77 ஆயிரம் ஆண்களும், 5 லட்சத்து 37 ஆயிரம் பெண்களும் அடங்குவர்.

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோய்

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் புகையிலையாலேயே புற்றுநோய்க்கு உள்ளாகின்றனர். 30 முதல் 69 வயது வரைக்குட்பட்ட புற்றுநோய் மரணங்களில் 70 சதவீதத்துக்குப் புகையிலையே காரணம்.

7 லட்சம் மரணங்கள்

7 லட்சம் மரணங்கள்

அதே போன்று புற்று நோயால் மரணம் அடைந்தவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி, ஆண்டு தோறும் 7 லட்சம் பேர் புற்று நோயால் இறப்பது தெரியவந்துள்ளது. ஆண்களில் 3 லட்சத்து 56 ஆயிரம் பேரும், பெண்களில் 3 லட்சத்து 26 ஆயிரம் பேரும் இறக்கின்றனர்.

அதே நேரத்தில் 75 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 10 பேரில் ஒருவர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார். புற்று நோய் பாதித்து இறப்பவர்களில் ஆண்களை விட அதிக பெண்கள் தான் மார்பக புற்று நோயால் இறக்கின்றனர்.

2010ம் ஆண்டில்

2010ம் ஆண்டில்

2010ல் நாடு முழுவதும் 5,56,400 பேர் புற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 3,95,400 பேர் 30 முதல் 69 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்களின் விகிதம் 71 சதவீதமாக இருக்கிறது. ஆண்களில் 2 லட்சத்து 100 பேரும், பெண்களில் 1 லட்சத்து 95,300 பேரும் மரணத்திருக்கிறார்கள்.

வாய் புற்றுநோய்

வாய் புற்றுநோய்

அனைத்து தரப்பு வயதினரில், ஒரு லட்சம் ஆண்களில் 59 சதவீதம் பேரும், ஒரு லட்சம் பெண்களில் 52 சதவீதம் பேரும் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். வாய் தொடர்பான புற்றுநோய் காரணமாக (உதடு மற்றும் உணவு குழாயும் வாயும் இணையும் 45,800 பேர் (22.9%), உயிரிழந்துள்ளனர். வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 25,200 பேரும் (12.6) மரணித்துள்ளனர்.

பெண்களும் பாதிப்பு

பெண்களும் பாதிப்பு

பெண்களில் கழுத்து புற்றுநோய் காரணமாக 33,400 (17.1%) பேரும், வாய்ப்புற்றுநோய் காரணமாக 27,500 (14.1%) பேரும், மார்பகப் புற்றுநோய் காரணமாக 19,900 (10.2%) பேரும் உயிரிழந்துள்ளனர்.

முஸ்லீம் பெண்களுக்கு

முஸ்லீம் பெண்களுக்கு

இந்தியாவில் இந்துப் பெண்களை விடவும் முஸ்லிம் பெண்களிடத்தில், குறிப்பாக அவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் கழுத்துப் புற்றுநோய் குறைவாகக் காணப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை பழக்கம்

போதை பழக்கம்

போதைப் பொருள் காரணமாக ஆண்களில் 84,000 பேரும் (42.0%), பெண்களில் 35,700 பேரும் (18.3%) பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில்தான் புற்றுநோய் மரணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

English summary
Cancer killed 700000 people across the country in every year. The 30-69 age group accounted for 71 per cent (3,95,400) of the deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X