For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் நடைபெற்ற உலக தூய்மையாக்கல் பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் முனிசிபாலிட்டியின் உலக தூய்மையாக்கல் பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 29.11.2013 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஹுமைத் ஹபீப் அபுபக்கர் எனும் இந்தியப் பள்ளியில் பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவரால் நடத்தப்பட்டு வரும் கிரீன் குளோப் எனும் அமைப்பு 23 தன்னார்வ தொண்டர்களுடன் பங்கேற்றது.

அமீரக தேசிய தினத்தையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தாலும் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே இந்தியப் பள்ளி மாணவர்கள் கிரீன் குளோப்பின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளுடன் பங்கேற்றது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மாணவர்கள் அனைவரும் இணைந்து ஒரு டிரக் அளவுக்கு குப்பைகளை திரட்டி முனிசிபாலிட்டி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் சேவையினை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

Clean up the world awareness programme in Dubai

மேலும் துபாய் 2020 வேர்ல்டு எக்ஸ்போவை நடத்த வெற்றி கொண்டதை வாழ்த்தியும் பதாகைகளை வைத்திருந்தனர். நிகழ்ச்சியில் அஹமது சுலைமான், ஹபீப் அபுபக்கர், யாஸ்மின் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர்.

English summary
Green Globe attended the Clean up the World awareness programme held in Dubai on november 29.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X