For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் ஞாயிற்று கிழமை அன்று துபாய் லேண்ட்மார்க் ஹோட்டலில் மறைந்த முதுபெரும் திராவிட இயக்க தலைவர், திமுகவின் பொதுசெயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ். மீரான் தலைமை தாங்கினார். அமீரக எழுத்தாளர் / வாசிப்பாளர் குழுமத்தின் எழுத்தாளர் ஆசிஃப் மீரான் தொகுத்து நிகழ்ச்சியை வழங்கிய இக்கூட்டத்தில் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

condolence meeting held for anbalagan in uae

முதலில் மவுன அஞ்சலியும், அதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அவருடைய உருவப்படப்படத்திற்கு திமுகவினர், கூட்டணி கட்சியினர், தமிழ் அமைப்பினர்கள் மலரஞ்சலி செய்து மரியாதை செலுத்தினர்.

இரங்கல் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசின் சம்சுதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சார்ந்த ஹமீதுர் ரகுமான், பரக்கத் அலி, துபாய் தமிழ் கலாச்சார சங்க செயலளார் அஷ்ரப், மதிமுகவை சார்ந்த வில்லிச்சேரி பாலமுருகன், சமூக ஆர்வலர்கள் சொக்கிலங்கம், ஜெசீலா பானு, பவர் குரூப் அமீர கான் , திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் நஜீமுதின், உதயநதி ரசிகமன்றத் தலைவர் பாலா, எழுத்தாளர் குழுமத்தை சார்ந்த பாலாஜி பாஸ்கரன், சசிக்குமார், சாருமதி, அமீரக திமுகவின் சரத் பாபு , செந்தில், பருத்தி இக்பால், AGM பைரோஸ் கான் , செந்தில் பிரபு ,இர்ஷாத், அனீஸ், சேக்தாவூது, அப்துல்லாஹ் கனி உள்ளிட்ட ஏராளமானோர் நினைவு கூர்ந்து பேசினர்.

condolence meeting held for anbalagan in uae

ன்பழகனின் தன்னலமற்ற கழக பணி, கருத்தயல் தளத்தில் நிகழ்த்தி எழுத்து பணி, கருணாநிதியின் தலைமையில் நின்று தமிழுக்காக, இனத்திற்காக போராடியது குறித்து மீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ். மீரான் பேசினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் ஆகிய நால்வரையும் ஒருசேர கழகத் தலைவர் தளபதி உருவில் பார்த்து பெருமிதம் அடைவதாக எஸ்.எஸ். மீரான் குறிப்பிட்டார். இனமான பேராசிரியர் பயிற்றுவித்த திராவிட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கழகத் தொண்டர்கள் அயராது பின்பற்ற வேண்டும் என்று செயலாளர் பாவை அனிபா பேசினார்.

condolence meeting held for anbalagan in uae

நிகழ்வில் பேசிய பிலால் அலியார் திராவிட இயக்க வரலாற்றில், திமுகழக வரலாற்றில் பேராசிரியரின் உழைப்பையும், சமரசமற்ற, தொடர்ச்சியான செயல்பாடுகளையும் குறித்தும் விரிவாக பேசினார். கழகத்தின் மீது எப்போதெல்லாம் தாக்குதல் ஏற்பட்டதோ, அப்போதைல்லாம் கலைஞரின் பின்னால் போர்ப்படை தளபதியாக உறுதியுடன் கழகத்தை கட்டி காத்தவர் என்று புகழாரம் சூட்டினார்.

condolence meeting held for anbalagan in uae

நிகழ்வில் பேசிய ஆசிப் மீரான் கழகத்தில் கலைஞர், பேராசிரியரால் ஏற்பட்டருக்கும் மிகப்பெரிய இழப்பை, கழக தலைவர் தளபதி அவர்கள் திராவிட கொள்கை பிடிப்பு, இடையுறாத உழைப்பு, அரசியல் தொலைநோக்கு பார்வை, சிந்தாந்தத்தின் வழி நின்று சமத்துவ, சமூக நீதி சமுதாயம் படைப்பார் என்றும் திடமான நம்பிக்கை தெரிவித்தார்.

condolence meeting held for anbalagan in uae

இரங்கல் கூட்டத்தில் திமுகழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்பழகன் பெயரில் திராவிடர் பல்கலைகழகம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் செயாலளர் முஸ்தபா நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ். மீரான் தலைமையில், செயலாளர்கள் பாவை ஹனிஃபா,முஸ்தஃபா, துணைத் தலைவர்கள், பிளாக் துலிப் செந்தில், இர்ஷாத், பொருளாளர் சரத் பாபு, ஆகியோருடன் இளைஞரணி பிரபு, மூத்த நிர்வாகிகள் அன்பு , பொறியாளர் பாலா உள்ளிட்ட திமுகவினர் செய்து இருந்தனர்.

English summary
A condolence meeting was held for late DMK leader Anbalagan in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X