For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கன் 65.. மட்டன் பிரியாணி.. வண்ண வண்ண பட்டாசுகள்.. அமெரிக்காவைக் கலக்கிய தமிழ் தீபாவளி

Google Oneindia Tamil News

சார்லட், வடக்கு கரோலினா: அமெரிக்காவிலும் வழக்கமான உற்சாகத்துடன் இந்தியாவின் பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி கொண்டாடப்பட்டது.

அங்கு வசிக்கும் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவில் கொண்டாடப்படுவதைப் போலவே பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும், கறி விருந்துமாக தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.

 பாரம்பரியம் மாறாமல்

பாரம்பரியம் மாறாமல்

நம் நாட்டில் தீபாவளி திருநாளை எப்படி கோலாகலமாக கொண்டாடி மகிழ்கிறோமோ அதுபோலவே அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் நாடு கடந்து இருந்தாலும் பாரம்பரிய கொண்டாட்டத்துடன் தீபாவளியை சிறப்பொடு கொண்டாடி மகிழ்கின்றனர். எந்த ஒரு பார்மபரியத்தையும் விட்டுக்கொடுக்காத நம் ஊர் மக்கள் அமெரிக்காவில் இப்போது குளிர் காலம் தொடங்கிய நிலை என்றாலும் காலையில் எண்ணை குளியல் செய்யத் தவறுவதில்லை. சாமி பூஜை செய்வதெற்கென்ற குட்டி குட்டி சாமி சிலைகளை ஊரிலிருந்து கொண்டு வந்து தங்களிடத்தில் வைத்திருக்கும் இவர்கள் இது போன்ற நல்ல நாட்களில் அவற்றை அழகுற அடுக்கி வைத்து பூஜை செய்து அழகு பார்க்கின்றனர்.

 கறிச்சோறு விருந்து

கறிச்சோறு விருந்து

தீபாவளியன்று பிரட், சீரேல்ஸ் எல்லாம் ஒதுக்கி விட்டு காலை உணவாக இட்லி அல்லது தோசை, சிக்கன் குழம்பு, காரம், இனிப்பு வகைகள் என்றும், மதியம் மட்டன் பிரியாணி என்று அசத்துகின்றனர். இப்படி சிக்கனோடும் மட்டனோடும் கொண்டோடுவோர் அன்று கோவிலுக்கு செல்வதில்லை. கோவிலுக்கு செல்பவர்கள் அசைவம் தவிர்த்து சைவ சாப்பாட்டை மட்டும் உட்கொண்டு சாமியை தரிசிக்க செல்கின்றனர்.

 வேட்டி சட்டை- பாவாடை தாவணி

வேட்டி சட்டை- பாவாடை தாவணி

எப்போதும் ஜீன்ஸ் டி ஷர்ட் ஆடைகளுக்கு பழக்கப்பட்டுப் போன நம் மக்கள் இது மாதிரி நாட்களில் கட்டாயம் பாரம்பரிய உடைகளையே விரும்புகிறார்கள். பெண்கள் சேலை அணிந்து கொள்வது மெஹந்தி ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகளுக்கு கட்டாயம் பட்டுப் பாவாடை, பட்டு வேட்டி, சந்தனம் என நம் ஊர் ஆடைகளில் தான் அன்று அழகு பார்த்து மகிழ்கின்றனர்.

 பட்டாசும் உண்டு

பட்டாசும் உண்டு

பண்டிகை என்றால் பட்டாசு இல்லாமலா. நம்ம ஊர் மாதிரி எல்லா இடங்களிலும் சுதந்திரமாக பட்டாசு வெடிக்க முடியாவிட்டாலும் மத்தாப்பு போன்ற பட்டாசுகளை அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் நண்பர்களோடு இணைந்து குட்டிஸ் பட்ட்டாளங்களோடு கொண்டாடுகின்றனர். நம்ம ஊர் மாதிரி வெடி வெடித்து தீபாவளியை கொண்டாட அந்த அந்த ஊர்களில் உள்ள ஹிந்து சென்டரில் குறிப்பிட்ட நேரத்தில் எல்லாரும் கூடி வெடி சத்தத்தோடு கொண்டாடி ஜமாய்த்து விடுகின்ற்றனர்.

 லீவு மட்டும் கிடையாது

லீவு மட்டும் கிடையாது

நம் ஊரில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் தீபாவளி திருநாள் அன்று அமெரிக்காவில் விடுமுறை இல்லை. பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அலுவலகம் செல்பவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. சிலர் இந்நாளில் 'ஒர்க் பிரம் ஹோம்' எடுத்து வீட்டில் இருந்து வேலை பார்த்தபடியே கொண்டாட்டத்திலும் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கு மாலையிலே தீபாவளி களை கட்டுகிறது.

 நண்பர்களே சொந்தங்கள்

நண்பர்களே சொந்தங்கள்

மாலை வேளையில் நண்பர்களெல்லாம் சொந்தங்களாக மாறி சந்தித்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் சேர்ந்து மத்தாப்பு கொண்டாடும் நேரமாகவும், எல்லோரும் மனம் விட்டு பேசி வாழ்த்து சொல்லும் தருணமாகவும் பல குடும்பங்கள் சேர்ந்து தீபாவளி பார்ட்டி வைக்கிறார்கள். ஒரு பெரிய மெனு போட்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு அயிட்டம் கொண்டு வரப்பட்டு ஹோட்டல் ஐ விட அதிகமான வகை உணவுகளோடு பக்காவாக "potluck" ஸ்டைல் இரவு உணவு உண்டு குடும்பமாக கொண்டாடுகின்றனர். எல்லோருக்கும் கிப்ட்டும் கொடுத்தும் அசத்துகின்றனர்.

 தியேட்டர்களுக்குப் படையெடுப்பு

தியேட்டர்களுக்குப் படையெடுப்பு

கொண்டாட்டங்களின் உச்சம் சினிமாதானே. தமிழ் திரைப்படங்கள் ஓடும் திரையரங்கு படை எடுக்க தொடங்கி விடுகின்றனர். கடல் கடந்து வாழும் தமிழர்கள் எங்கு போனாலும் அவர்கள் கொண்டாட்டத்தோடு திரைப்படங்களை இணைக்காமலில்லை. சில நண்பர்கள் குழுக்களாக இசை நிகழ்ச்சி, டான்ஸ் ஷோ ,தீவாளி பேஷன் ஷோஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்கின்றனர். சொந்தங்களை விட்டு வெகு தொலைவில் இருக்கும் இவர்கள் மனம் இதுபோன்ற நாட்களில் சொந்த பந்தங்களை அதிமாக தேடும். அதனால் காலையிலே ஊருக்கு போனை போட்டு ஹாப்பி தீவாளி வாழ்த்துக்களை எல்லாருக்கும் பரிமாறி நம் ஊரு வெடி சத்தத்தை காதால் கேட்டே பெரும் ஆனந்தம் கொள்கின்றனர். இங்கு கோடை கால பள்ளி விடுமுறை மே முதல் ஆகஸ்ட் வரை என்பதால் பெரும்பாலானோர் ஊருக்கு அந்த நாட்களிலே தான் வருகின்றனர். தீபாவளி காலம் பள்ளி நேரம் என்பதால் ஊருக்கு வர முடியாத காரணத்தால் நம்மவர்கள் பெரும்பாலானோருக்கு தீபாவளி அங்கு தான். ஆனாலும் அதை சிறப்பாக கொண்டாடத் தவறுவதில்லை.

- Inkpena சஹாயா
(படங்கள்: உமா கார்த்திக்)

 சார்லட் இந்து மையத்தில் கொண்டாட்டம்

சார்லட் இந்து மையத்தில் கொண்டாட்டம்

சார்லட் நகரில் உள்ள பிரபல இந்து மையத்தில் அக்டோபர் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை தீபாவளி கொண்டாடப்படுகிறது. தினசரி பல்வேறு பூஜைகள், பஜனை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21ம் தேதி கலை நிகழ்ச்சியும், 28ம் தேதி கடைசி நாளன்று இரவு விருந்தும், கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

English summary
Like in India Tamils and other Indians are celebrating the Diwali in the US. Writer Inkpena Sahaya has brought out the news and the photos for our readers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X