For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாய்வால் பாஷை: எந்தப் பக்கம் வாலாட்டுதுன்னு பாருங்க!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாய்கள் தங்களின் எஜமானர்களின் மீது பிரியத்தைக் காட்ட வாலாட்டும் என்று கூறுவார்கள். இது வளர்ப்பு நாய்களுக்கு பொருந்தும். அதேசமயம் தெருவில் திரியும் நாய்கள் மனிதரைப் பார்த்து வாலை ஆட்டுவது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குத்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நாய் வாலை ஆட்டுவது பற்றிய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.

நாய் வாலை ஆட்டுவது வெறுமனே நட்பைத் தெரிவிப்பதற்காக மாத்திரம் அல்ல, அது வாலை எப்படி ஆட்டுகிறது என்பதைப் பொறுத்தும் அதன் உணர்வுகள் வேறுபடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மூளையின் செயல்பாடுகள்

மூளையின் செயல்பாடுகள்

மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டால், அதன் வலது மற்றும் இடது பகுதிகள் வெவ்வேறான உணர்வுகளுக்கு பொறுப்பானவை என்று கூறுகிறார், ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தின் நரம்பியல்துறை பேராசிரியரான ஜோர்ஜியா வலூர்ட்டிஹரா.

நாய்களிலும் உண்டு

நாய்களிலும் உண்டு

மனிதரைப் போல நாய்களிலும் வலது பாக மூளை உடலின் இடது பகுதியையும், இடது பாதி மூளை உடலின் வலது புறத்தையும் கட்டுப்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

உணர்ச்சியை காட்ட

உணர்ச்சியை காட்ட

உண்மையில் நாய்கள் வாலைக் கொண்டு அடுத்த நாயுடன் தொடர்பு கொள்ள நினைப்பதில்லையாம். ஆனால், அவை தமது உணர்ச்சியைக் காண்பிக்க தம்மையே அறியாமல் தன்னிச்சையாக இடது அல்லது வலது புறமாக வாலை அசைக்கின்றன என்கிறார் ஜோர்ஜியா வலூர்ட்டிஹரா.

நட்பான பார்வை

நட்பான பார்வை

குறிப்பாக இன்னுமொரு நாயைப் பார்த்து, ஒரு நாய் வாலை ஆட்டுவதன் மூலம் தனது உணர்வுகளை வெளிப்படுத்துமாம், அதாவது, வாலை வலது புறமாக ஆட்டினால், அது நட்பாம்.

கோபமா இருக்கேன்

கோபமா இருக்கேன்

அதேசமயம் மற்றொரு நாயைப் பார்த்து அது இடது புறமாக ஆட்டினால், அது வெறுப்புடன் அதனை பார்க்கிறது என்றும் அர்த்தமாம். இது குறித்து ஏனைய விலங்குகளில் சோதித்துப் பார்க்க அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.

ரோபோ நாய்கள்

ரோபோ நாய்கள்

இந்த ஆய்விற்காக திரைப்படமாக பதிவு செய்யப்பட்ட நாய்களை, ரோபோ நாய்களை அவர்கள் தமது சோதனைக்குரிய நாய்களுக்கு காண்பித்திருக்கிறார்கள்.

படத்தில் எந்தவிதமான உணர்வையும் காட்டாத நாய்களை பார்த்தவுடன், சோதனை நாய்கள் நல்ல ஆசுவாசமாக பிரச்சினை இன்றிக் காணப்பட்டனவாம்.

அதிகரித்த இதயத்துடிப்பு

அதிகரித்த இதயத்துடிப்பு

வாலை இடதுபுறமாக ஆட்டிய நாய்களைப் பார்த்தவுடன், இவற்றுக்கு இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்ததுடன், அவை பதற்றமடைய தொடங்கிவிட்டனவாம்.

ஒரு நாய் இன்னுமொரு நாயை புதிதாகப் பார்க்கும் போதைவிட அடிக்கடி பார்க்கத்தொடங்கிய பிறகு அதன் உணர்வுகள் மாறிவிடுமாம்.

ஆகவே நாயை வாலை ஆட்டுகிறது என்பதை விட எந்தப் பக்கமாக அதனை ஆட்டுகிறது என்பதுதான் முக்கியமாகும் என்கிறார் ஆய்வாளர்.

நிமிர்ந்த வால்

நிமிர்ந்த வால்

நாய் நிமிர்ந்த வாலுடன் நின்றால், அது தன்னம்பிக்கையுடன் பிடிவாதமாக உள்ளது என்று பொருளாகும். அது கிளர்வுற்ற நிலையில் இருந்தாலும் கூட, தன் வாலை இப்படி தூக்கி கொள்ளும்.

உயரத்திலே வால்

உயரத்திலே வால்

செல்ல நாயின் வால் அதன் உடலின் உயரத்திலே வைத்திருப்பதை நீங்கள் காணலாம். அப்படி இருந்தால், அது சாதாரண மனநிலையில் இருக்கிறது என்று அர்த்தமாகும். மேலும் அது நட்பு உணர்ச்சியுடன் பாதுகாப்பாக உணர்வதையும் எடுத்துக்காட்டும்.

கால்களுக்கு நடுவே

கால்களுக்கு நடுவே

இது பொதுவாக நாம் காணக் கூடியவை தான். அதுவும் சண்டை போட தயாராக இருக்கும் தெரு நாய்களில் இதனை அடிக்கடி காணலாம். அப்படி இரண்டு கால்களுக்கு நடுவே வால் இருந்தால், நாய் பயந்து போயுள்ளது என்று அர்த்தமாகும். இந்த தருணத்தில், அது உங்களால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைக்கும்.

நாய்களை புரிந்து கொள்ளலாம்

நாய்களை புரிந்து கொள்ளலாம்

இந்த கண்டுபிடிப்புக்கள் மூலம் நாய்களை வளர்ப்பவர்கள், அவற்றை மேலும் அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதுமாத்திரமன்றி தமக்கு எதிரிகளான மிருகங்களைப் பார்க்கும் போது, தலையைக் நாய்கள் கூட ஓரளவு இடது புறமாக திருப்புமாம்.

நல்லா கவனிங்க

நல்லா கவனிங்க

நாய் வாலை வலதுபுறமாக ஆட்டுகிறது என்றால் நம்மை அது நட்புடன் பார்க்கிறது என்று அர்த்தாம். ஆனால் இங்கு வலது புறம் என்பது நாய்க்கு வலதுபுறமாக என்று பொருளே அன்றி அதனை முன்பாக நின்று பார்க்கும் உங்களுக்கு வலது புறம் என்று பொருள் அல்ல. எனவே கவனமாக வாலை கவனிக்காவிட்டால் கடிபட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அதுசரி கடிக்கிற நாய், எந்த பக்கம் வாலாட்டுதுன்னு கவனிக்கிற வரைக்கும் சும்மா இருக்குமா என்ன?

English summary
Dogs have different emotional responses to their peers depending on the direction of a tail wag, a new study found. Seeing a fellow dog swing its tail to the right keeps canines relaxed, while a wag to the left seems to induce stress, the researchers say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X