For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளைப்பூண்டு சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருளே மருந்தாக செயல்பட்டு நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. வெள்ளைப் பூண்டு நம்முடைய உணவில் பிரிக்க முடியாத ஒரு பொருள். இதில் உள்ள மருத்துவ குணங்கள் அனைவரையும் வியக்கவைக்கிறது.

வாரம் இருமுறை வெள்ளைப்பூண்டு சாப்பிடுபவர்களுக்கு தொண்டைப் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

புகைப் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது வெள்ளைப்பூண்டு சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 30 சதவிகிதம் குறைகிறதாம்.

சீனாவில்2003ம் ஆண்டு முதல்2010 ஆம் ஆண்டு வரை 1424 நுரையீரல் புற்றுநோயாளிகளிடமும், 4500 ஆரோக்கியமான இளைஞர்களிடமும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அனைவரிடமும் அவர்களிடம் வாழ்க்கைத்தரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதில் புகைப்பிடிக்கும் நபர்களுக்கு வெள்ளைப் பூண்டு கொடுக்கப்பட்டது.

வெள்ளைப்பூண்டில் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல பெனிசிலின் அல்லது ‘டெட்டிராசிலின்' ஆகிய மருந்துகளில் சக்தி வாய்ந்த ‘அலிசின்' என்ற பொருள் உள்ளது. அலிசின் சிறந்த ஆண்டிஆக்ஸிடென்டாக செயல்பகிறது. இதுதான் நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறதாம்.

காசநோய் டைபாய்டு

காசநோய் டைபாய்டு

காசநோய், டைபாயிட் முதலிய நோய்களின் கிருமிகளை அலிசின் அறவே ஒழித்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள நோய் நுண்ம நச்சூட்டுப் பொருள்களை வெளித்தள்ளி விடுகிறது. இரத்தத்திற்கு மீண்டும் வீரியம் ஊட்டி, இரத்த ஓட்டத்தை நன்கு செயல்பட வைக்கிறது

இளமையை தக்கவைக்கும்

இளமையை தக்கவைக்கும்

மீண்டும் இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது.. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.

தினசரி சாப்பிடலாம்

தினசரி சாப்பிடலாம்

ஐந்து பூண்டுப் பற்களை எண்ணெயில் வதக்கி தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. சமையலில் அதிகம் சேர்க்கவும். மூன்று பூண்டுப் பற்களைப் பாலில் காய்ச்சி அருந்திவிட்டு இரவில் படுப்பது நல்லது.

சருமத்தை சுத்தமாக்கும்

சருமத்தை சுத்தமாக்கும்

பூண்டில் உள்ள சல்ஃபர் உப்பு ஆரோக்கியமான தோல், முடி, நகங்கள் பெற உதவுகிறது. உடலில் உள்ள குப்பைகளையும் விஷமான பொருட்களையும் உடனே வெளியேற்ற உதவுகிறது. தோல் சுத்தமாக, பளபளப்பாக, ஒளிரும் விதத்தில் பாதுகாக்கிறது. அதற்காக B காம்ப்ளக்ஸ் வைட்டமின்களுடன் இணைந்து தோலை மிகவும் ஆரோக்கியமாகப் பராமரிக்கிறது.

தைராய்டு, கல்லீரல்

தைராய்டு, கல்லீரல்

சல்ஃபர் உப்பைப்போலவே அயோடின் உப்பும் பூண்டில் அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பியில்தான் அயோடின் உப்பு சேமிப்பாக உள்ளது. இதிலிருந்து தைராக்ஸின் சுரக்கிறது. அயோடின் உப்பு குறைந்தால் ‘தைராக்ஸின்' சுரப்பது குறையும். வளர்சிதை மாற்றத்திலும் திசுக்கள் ஆக்ஸிஜனை உபயோகித்துக் கொள்வதிலும் தைராக்ஸின்தான் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இதயம் சீராகத் துடிக்கிறது. கல்லீரலின் பணிகளும் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

மூளையை புத்துணர்ச்சியாக்கும்

மூளையை புத்துணர்ச்சியாக்கும்

சிறுநீர் மூலம் கால்சிய உப்புக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மூளையை விழிப்புடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மீன், முட்டை போன்றவைகூட சாப்பிடாத சைவ உணவுக்காரர்களுக்கு இந்த அயோடின் உப்பு வெள்ளைப்பூண்டு மூலம்தான் நன்கு உடலுக்குக் கிடைக்கும். எனவே, தினமும் 5 பூண்டுப் பற்களாவது சாப்பிடுங்கள் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

English summary
Eating raw garlic twice a week can cut the chances of lung cancer by almost half, new research suggests. The results, published online Wednesday in the journal Cancer Prevention Research, showed those who ate raw garlic at least twice a week cut the risk of lung cancer by 44 per cent, even if they were exposed to high-temperature cooking-oil fumes, which is thought to be another trigger for the disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X