For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்கள் முதுகை 'பதம் பார்க்கும்' தினசரி பழக்க வழக்கங்கள்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: உங்கள் முதுகை பதம் பார்க்கும் சில பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று பலரும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். அதிலும் அலுவலகங்களில் காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களில் பலர் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

மாறி வரும் பழக்க வழக்கங்கள், ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் பயன்பாட்டால் உங்களின் முதுகு தண்டு பாதிக்கப்படலாம். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு முதுகு வலி ஏற்பட இவையெல்லாம் தான் காரணம்.

ஒரே இடத்தில்

ஒரே இடத்தில்

நாள் முழுவதும் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பது உங்கள் முதுகுக்கு நல்லதல்ல. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு தான் அதிகம் முதுகு வலி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. முதுகு வலி ஏற்படாமல் இருக்க குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையாது உங்கள் இடத்தில் இருந்து எழுந்து 2 நிமிடம் நடந்து செல்லுங்கள்.

ஹை ஹீல்ஸ்

ஹை ஹீல்ஸ்

தற்போது ஃபேஷன் என்கிற பெயரில் பெண்கள் அணியும் ஹை ஹீல்ஸ் அவர்களின் முதுகை பதம் பார்க்கிறது. இது தெரிந்தும் பலர் அதை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் வேடிக்கை. ஹை ஹீல்ஸ் அணிவதால் முழங்காலில் இருந்து முதுகு வரை வலி ஏற்படும். தினமும் ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.

தொப்பை

தொப்பை

தற்போது ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலானோருக்கு தொப்பை உள்ளது. இந்த தொப்பையால் உங்களுக்கு முதுகு வலி ஏற்படும் என்று தெரியுமா?. காரணம் தொப்பை இருந்தால் முதுகு தண்டுக்கு வயிற்று பகுதி தசைகளில் இருந்து போதிய சப்போர்ட் இருக்காது. அதனால் முதலில் தொப்பையை குறையுங்கள்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

செல்போன்கள், ஐபேட், லேப்டாப்கள் பயன்படுத்தும்போது தலையை குனிந்து கொண்டே இருப்பதால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. பல மணிநேரம் குனிந்தபடியே இருந்தால் உங்களுக்கு கூன் தான் விழும். அதனால் அவற்றை பயன்படுத்தும்போது குனிந்து பார்க்காமல் தலையை நேராக வைத்து பயன்படுத்துங்கள்.

English summary
Above is the list of few things that are not good for your back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X