For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபெட்னா 2017: முன்னணி இயக்குனர் மிஷ்கின் பங்கேற்கும் தமிழ்ப்பேரவை விழா

By Devarajan
Google Oneindia Tamil News

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30-ம் ஆண்டு தமிழ் விழா நிகழ்ச்சி மினியாபொலிஸ் நகரில் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. அதில் கலந்துகொண்டு முன்னணி இயக்குனர் மிஷ்கின் தனது திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உள்ளார்.

மிஸ்கின் - இயக்குனர்

தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான இவரின் இயற்பெயர் சண்முக இராஜா. தாசுதோவேசுகியின் "தி இடியட்" புதினத்தில் வரும் கதைத் தலைவன் "பிரின்சு மிஷ்கின்" மீதான பற்றால் தனது பெயரை மிஷ்கின் என வைத்துக் கொண்டார்.

Mysskin

தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்த இவருக்கு திரைப்படத் துறையை போலவே நூல் வாசிப்பிலும் மிகுந்த ஈடுபாடு. தனது அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான நூல்களை தொகுத்து நூலகம் போல அமைத்துள்ளர்.

திரைப்பட இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் இன்று திரைப்பட நடிகர், கவிதை மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட வெற்றியாளராக திரைத்துறையில் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

2011 ஆம் ஆண்டு "நத்தை போன பாதையில்" எனும் தலைப்பில் தனது முதல் கவிதை மொழி பெயர்ப்பு நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலில் சப்பானிய, அமெரிக்க ஐக்கூ கவிதைகள் நூறு எண்ணிக்கை அளவில் மொழிபெயர்த்துள்ளார்.

சித்திரம் பேசுதடி, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்டவை இவர் இயக்கிய வெற்றித் திரைப்படங்களில் சில. பேரவையின் சார்பாக இந்த ஆண்டு நடைபெறும் "நான்காம் ஆண்டு வட அமெரிக்க குறும்படப் போட்டியின்" நடுவர்களில் ஒருவாரக உள்ளார் மிஷ்கின்.

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Director Mysskin is going to participate at minnesota city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X