For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபெட்னா 2017: கவிஞர் சுகிர்தராணியின் கவிதை நிகழ்வு... குறுந்தகடு வெளியீடு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் தமிழ்ப் பேரவை விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் கவிஞர் சுகிர்தராணியின் கவிதை நிகழ்வு மற்றும் ஏ.வி

By Devarajan
Google Oneindia Tamil News

மின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு நகரில் தொடங்கி நடந்து வருகிறது. அதில் கவிஞர் சுகிர்தராணியின் கவிதை நிகழ்வு மற்றும் ஏ.வி.கிரி குறுந்தகடு வெளியீடு நிகழ்வும் நடைபெற்றது.

வடஅமெரிக்கா காணும் தமிழர் பெருவிழா - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 30 ஆவது தமிழ் விழா, தமிழிசை, தமிழ் நடனம், தமிழ் நாடகம் என அனைத்து ஏற்பாடுகளுடன் அமெரிக்கத் தமிழர் கூடும் பெருவிழாவாக நடந்து வருகிறது. இதில் கயானா நாட்டு பிரதமர் ஐயா. வீரசாமி மோசசு நாகமுத்து தலைமை ஆற்றினார்.

FeTNA 2017: Tamil Poet Sukirtha rani's Functions

"தமிழ் விழா - 2017" - முதல் நாள் - வரவேற்பு விருந்து, செயின்ட் பால் நகரில், சிறப்பு விருந்தினர்கள், கொடையாளர்கள் கலந்து கொண்ட வரவேற்பு இரவு விருந்தாக தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கி, அறிமுக உரைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

பேரவை விழாவில் முதல் முறையாக அமெரிக்க தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடினர் தமிழ்க் குழந்தைகள். மக்களிசை, அறுசுவை மதிய உணவு என களை கட்டியுள்ளது பேரவை விழா. கயானா பிரதமருக்கு பறை இசை, தவில் இசை வரவேற்பு, மங்கள இசை, தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கிய "தமிழ் விழா - 2017, விழாவில் கவிஞர் சுகிர்த ராணி, இயக்குனர் மிஷ்கின், எழுத்தாளர் சுகுமாரன், மு. இளங்கோவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.

இது குறித்து கவிஞர் சுகிர்தராணி தனது முகநூல் பக்கத்தில், " FeTNa விழாவில் கவியரங்கமும் மற்றும் A.V Giri அவர்களின் கவிதை கேளுங்கள் குறுந்தகடு நான் வெளியிட தோழி ரோஹிணியும் நாஞ்சில் பீட்டர் அண்ணனும் பெற்றுக் கொண்டனர் " என பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

English summary
FeTNA 2017: Tamil Poet Sukirtha rani's Functions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X