For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை (பெட்னா) நடத்தும் குறும்படப் போட்டி

By Siva
Google Oneindia Tamil News

FeTNA conducts short film contest: Don't miss it
நியூயார்க்: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான "பெட்னா" குறும்படப் போட்டி ஒன்றை நடத்துகிறது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான "பெட்னா" ஆண்டு விழாவினை அமெரிக்க மாநிலம் ஒன்றில் மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.

அமெரிக்காவில் வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒரே குடும்பமாகக் கூடிக் கொண்டாடும் இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, அடையாளத்தை வெளிக்கொணரும் குறும்படங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. குறும்பட ஆர்வலர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெறலாம்.

பெட்னா முதல் முறையாக தமிழ்க் குறும்படப் போட்டியினை அறிவித்துள்ளது. தமிழர் வாழ்வியலை/ சமூகச் சூழலைப் பேசுகின்ற சிறந்த 10 குறும் படங்களை உலகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்து விருது மற்றும் 3 குறும்படங்களுக்குப் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத்துறையின் உயரிய படைப்பாளி ஒருவரைத் தலைவராகக் கொண்டு இயங்கும் நடுவர் குழு மூலம் இந்தப் படங்கள் தேர்வு செய்யப்படும். இந்தப் போட்டி மூலம் ஆர்வமும், திறமையும், ஆற்றலும் உள்ள இளைஞர்களைத் தேர்வு செய்து தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தவும், விருது பெறுகின்ற சிறந்த குறும்படங்களை அமெரிக்காவின் அனைத்துத் தமிழ்ச் சங்கங்களுக்கும் பரிந்துரைக்கவும் பெட்னா குழு முடிவு செய்துள்ளது.

குறும்படங்களை தேர்வு செய்யப்படுவதற்கான விதிமுறைகள்:

• தமிழ் மொழி, தமிழர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்ந்தவையாகப் படைப்புகள் இருக்க வேண்டும்.

• இணையங்களில் ஏற்கனவே வெளியான குறும்படங்கள் என்றால், அது குறித்த குறிப்பை/ சுட்டியை(டிவிடியுடன்) கட்டாயம் தர வேண்டும்.

• ஏற்கனவே பங்கேற்ற விழாக்கள், பெற்ற விருதுகள் பற்றியும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

• பெட்னாவின் குறும்படப் போட்டிக்கென்று உருவாக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

• ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.

• 2013, 2014 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டும் போட்டியில் பங்கு பெறலாம்.

• குறும்படங்கள் 15-20 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

• சட்டச் சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்குப் பெட்னாவோ அல்லது நடுவர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

குறும்படங்களை அனுப்ப நிறைவு நாள்:

• உங்கள் குறும்படங்களை 25.05.2014 அன்றுக்கு முன்னதாகப் பதிவு செய்து/ அனுப்ப வேண்டும்.

• நடுவர்கள் பார்வைக்கான டிவிடி (with region 0) அல்லது ப்ளூ ரே(Blue Ray) படிகள் இரண்டு தங்களின் சொந்த செலவில் அனுப்பி வைக்க வேண்டும். இவை அமெரிக்காவில் உள்ள மின்னணுக் கருவிகளில் பார்க்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.

• தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் குறித்த விவரம் எங்கள் இணையத்தளத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழ் ஊடகங்களின் மூலமும் அறிவிக்கப்படும்.

குறும்படங்கள் - சில வழிகாட்டுதல்கள்:

தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, பண்பாட்டையும் அடையாளப்படுத்துவதாக இருக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்தும் சிந்தனைகளைத் தூண்டும் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ் இலக்கியங்கள், தமிழர் வரலாறு சார்ந்த படங்களுக்கு முதன்மை அளிக்கப்படும். ஆங்கிலத்தில் துணைத்தலைப்பு இருத்தல் நன்று. தமிழ் மொழி - பண்பாட்டை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் குறும்படங்கள் இருந்தாலும் நலம்.

தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் படங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நடுவர்களின் முடிவே இறுதி. போட்டிக்கு அனுப்பப்பட்ட எந்தப் படத்தின் டிவிடியையும் திருப்பி அனுப்ப இயலாது. அதே நேரம் அவற்றைப் பெட்னா தனிப்பட்ட முறையில் பயன்படுத்தாது. உங்களுடைய குறும்படப் படிகள் மீண்டும் தேவைப்படின் அதை அனுப்புவதற்கான செலவினை ஏற்று வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம்.

பரிசு விவரம்:

தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களில் முதல் இடம் பிடிக்கும் இரு படங்களுக்கு 500 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும். இரண்டாவது இடத்துக்கு மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு முறையே 200 டாலர்கள் வழங்கப்படும். மூன்றாவது பரிசுக்கு 5 படங்கள் தேர்வு செய்யப்படும். பரிசு முறையே 100 டாலர்கள். இந்தப் படங்கள் வரும் ஜூலை மாதம் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் நடைபெறவிருக்கும் பெட்னா தமிழ் விழாவில் திரையிடப்படும்.

விழாவில் நேரில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் சொந்த செலவில் வரலாம். போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

மேலதிக விவரங்களுக்கு: http://www.fetna2014.com/ என்ற பெட்னா இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.

குறும்பட டிவிடிகளை அனுப்ப வேண்டிய முகவரி:

துளிர் சாப்ட்வேர் டெக்னாலஜீஸ்,

368, பத்மாவதி தெரு, ஸ்ரீனிவாசா நகர்,

மடிப்பாக்கம், சென்னை - 91.

Thulir Software Technologies,

No.368, Padmavathy Street, Srinivasa Nagar,

Madipakkam, Chennai 600091. Tamilnadu, INDIA.

English summary
FeTNA is conducting a short film contest. It plans to select ten short films which are based on Tamil society and culture, out of which three will be given awards or cash prizes. All ten films will be screened during the 27th FeTNA Convention in Saint Louis, Missouri, USA. The short films to be screened will be selected by a panel of judges headed by a well-known movie-maker. Those who are interested can send the DVD to Thulir software technologies in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X