For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா!

சென்னை மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட மண்ணும் மரபும் என்ற பாரம்பரிய விழா பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா! - வீடியோ

    சென்னை: சென்னை மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட மண்ணும் மரபும் என்ற பாரம்பரிய விழா பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

    தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை, பொங்கல். ஜாதி மதம் கடந்த நாம் கொண்டாடும் பண்டிகை ஆகும் இது. கிராமத்தில் குடும்பத்தோடு குடும்பமாக எல்லோரும் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையின் படி, போகியுடன் தொடங்குகிறது இந்த பொங்கல் பண்டிகை.

    ஆனால் நகரத்தில் வசிக்கும் மக்கள் பொங்கல் குறித்தும்,ஜல்லிக்கட்டு குறித்தும், கிராமத்து உணவுப்பொருட்கள் குறித்தும் எளிதாக தெரிந்து கொள்ள முடியாது. கிராமத்து பொங்கல் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் உணர்த்தும் வகையில் சென்னையில் லயோலா கல்லூரி அருகே தமிழர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

    சென்னை மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பாக இந்த நிகழ்வு நடந்தது. மண்ணும் மரபும் என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. தமிழக மண்ணை சார்ந்த தொழில்கள் இங்கு காட்சிக்கு உட்படுத்தப்பட்டது.

    சுயசார்பு தொழில்கள் மூலம் செய்யப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டது. உணவுப்பொருட்கள், சமைக்கும் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள், வீட்டில் பயன்படுத்தும் கைவினை பொருட்கள், வாசனை திரவியங்கள் எல்லாம் இங்கு இடம்பெற்று இருந்தது.

    Gandhi Foundation oraganised Pongal Cultural function in Chennai

    பொங்கலின் சிறப்பு குறித்தும் கிராமத்து பொங்கல் எப்படி நடக்கும் என்பது குறித்தும் இங்கு விளக்கப்பட்டு இருந்தது. மிகவும் குறைந்த விலையில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சுத்தமான மலை தேன், கருப்பட்டி பணியாரம் , உடைகள், பாரம்பரிய ஆடைகள், கெமிக்கல் கலக்காத பொருட்கள் எல்லாம் இங்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல் முந்திரி, மருந்து பொருட்கள், பானைகள், அடுப்புகள் எல்லாம் இங்கு விற்பனை செய்யப்பட்டது. மக்கள் பலர் இங்கு விற்பனை செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

    English summary
    Gandhi Foundation oraganised Pongal Cultural function in Chennai near Loyola.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X