For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனி கொலோனில் தமிழர்கள் உற்சாக தீபாவளி கொண்டாட்டம்!

ஜெர்மனி கொலோன் மாநகரில் தமிழர்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

By Mathi
Google Oneindia Tamil News

கொலோன்: ஜெர்மனியின் கொலோன் நகர் வாழ் தீபாவளி பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

ஜெர்மனியின் கொலோன் நகரில் ஆண்டுதோறும் தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு ஆகியவை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாக்களில் தமிழர் பண்பாட்டு அடையாளங்களுக்கு முக்கியத்தும் வழங்கப்படுவது வழக்கம்.

 சிறப்பு விருந்தினர் பிரபாகர்

சிறப்பு விருந்தினர் பிரபாகர்

இந்த ஆண்டு தீபாவளி பண்டி கடந்த 21-ந் தேதி வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிராங்பர்ட் இந்திய தூதரக அதிகாரி பிரபாகர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

குறும்படங்கள்

குறும்படங்கள்

இந்நிகழ்ச்சியில் பொய்க்கால் குதிரை, கரகாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட தமிழர் தொன்ம கலைகள் அரங்கேற்றப்பட்டன. மேலும் கொலோன் நண்பர்களின் குறும்படங்களும் வெளியிடப்பட்டன.

வென்றோருக்கு சான்றிதழ்கள்

வென்றோருக்கு சான்றிதழ்கள்

அத்துடன் இந்த விழாவில் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அறுசுவை உணவு

அறுசுவை உணவு

கொலோன் தமிழர்கள் பங்களிப்புடன் தமிழகத்தில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. காலை முதல் இரவு வரை மிக எழுச்சியோடு இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

English summary
Geramany cologne living tamils were celebrated Diwali on Oct 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X