For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய் ஈமான் அமைப்பு நடத்திய ரத்ததான முகாம்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் ஈமான் கல்சுரல் சென்டர், துபாய் அரசின் ரத்ததான மையத்துடன் இணைந்து 31.10.2014 அன்று ரத்ததான முகாமை நடத்தியது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சோனாப்பூர் பவர் குரூப் கேம்பில் நடந்த முகாமிற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக ரத்தம் அத்தியாவசியத் தேவையாகிறது. இதற்காக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது இறை உவப்பிற்காக ரத்ததானம் செய்து வரும் அனைவரையும் பாராட்டினார்.

துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக துபாய் இந்தியன் கன்சுலேட்டின் கல்வி மற்றும் பொருளாதார கன்சுல் டாக்டர் திஜு தாமஸ், துபாய் அரசின் கம்யூனிட்டி டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் அலுவலர் பழனி பாபு, துபாய் அரசின் ரத்ததான வங்கி மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப், துபாய் அரசின் மக்கள் தொடர்பு மேலாளர் முஹம்மது ஹனீஃப், சென்னை இலாஹி இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் சையது முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை, நினைவுப் பரிசு மற்றும் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

பவர் குரூப் கேம்பில் ரத்ததான முகாமை நடத்துவதற்கு அனுமதி மற்றும் அனைத்து ஒத்துழைப்பினை வழங்கிய நிர்வாகத்தினர் கௌரவிக்கப்பட்டனர். பவர் குரூப் நிர்வாக இயக்குநரின் மகன் முஹம்மது ஹனீஃப், மனிதவளத்துறை மேலாளர் அப்துல் மாலிக், மக்கள் தொடர்பு அலுவலர் கஜினி முஹம்மது, பாதுகாப்பு அலுவலர் தேவராஜ், அனீஸ் உள்ளிட்டோர் பொன்னாடை, நினைவுப்பரிசு மற்றும் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

IMAN conducts blood donation camp in Dubai

துபாய் மில்லியனியம் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவன் ஹார்டிக் சங்கர் தன்னார்வ பணியாளராக ரத்ததானம் செய்ய வருவோரை பதிவு செய்து சேவையாற்றினார். ஷார்ஜா இந்தியப் பள்ளியில் பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜயராகவனின் மகள்கள் ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த பதாகைகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 150 பேர் ரத்ததானம் செய்தனர்.

ஈமான் துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா தலைமையில் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், திருச்சி ஃபைஜுர், மெல்கோ காதர், மைதீன், ஜமால், ஜாபர், இக்பால், தமீம், அப்துல் ரசாக், யாகூப், உஸ்மான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

பவர் குரூப், பிளாக் துளிப் பிளவர், அல் ரவாபி, பிரான் ஜுஸ், தட்ஸ் தமிழ் உள்ளிட்ட நிறுவனங்கள் அனுசரணை வழங்கின.

English summary
IMAN conducted a blood donation camp in Dubai on october 31st. 150 persons donated life saving blood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X