For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை அபுதாபியில் இந்திய தூதரகம் நடத்தும் கருத்தரங்கு

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபி இந்திய தூதரகம் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து கருத்தரங்கு ஒன்றினை நாளை (13.09.2014) இந்திய சோஷியல் மற்றும் கல்சுரல் செண்டரில் நடத்துகிறது.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கோவா, மஹாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் அரசு அலுவலர்கள் பங்கேற்கினர்.

இந்த ஒரு நாள் கருத்தரங்கு மூலம் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும். இவற்றில் அமீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமல்லாது தாயகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

அபுதாபி இந்திய தூதரகத்தின் முயற்சியால் முதல் முறையாக இக்கருத்தரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian embassy's seminar to address the problems of NRIs will be held in Abu Dhabi tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X