For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்பை விதைங்க இரட்டிப்பு அறுவடை செய்யலாம்!

Google Oneindia Tamil News

வணக்கம் நண்பர்களே இந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள் மற்றும் விருப்பம் மட்டுமே யார் மனதையும் புண்படுத்த அல்ல...

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளின் பிரத்யேக விளையாட்டு பொருள் செல்போன் அப்புறம் டிவி. இது இப்ப இருக்குற பெற்றோர்களுக்கு ஒரு வரம். ஆனால் குழந்தைகளுக்கு...?

Love all and be loved by all

ஒரு குழந்தை சாப்பிட அடம் பிடிச்சா உடனே டிவி ல கார்டூன் இல்ல போன்ல பாட்டு. இதனால் குழந்தைகளுக்கு போன் தான் ரொம்ப பிடிக்குது. ஆனால் அவங்க கண் பார்வை பாதிக்கப்படுறது ஏன் பெற்றோர்களுக்கு தெரியாம போச்சு?

குழந்தைகளுக்கு 2 வயசு வரைக்கும் டிவி மற்றும் போன் திரை (display) யால் கண் விழித்திரை பாதிக்கும் அப்படினு ஆராய்ச்சி சொல்லுது. எதிர்காலத்துல குழந்தைங்க சீக்கிரமே கண்ணாடி போட வேண்டிய சூழ்நிலை வரும். அதனால் முடிந்த அளவு டிவி மற்றும் செல்போன் ஐ குழந்தைகளிடமிருந்து ஒதுக்கி வைத்து பழக்குங்கள்.

அப்புறம் ஸ்னாக்ஸ் தயவுசெய்து குழந்தைகளுக்கு வேண்டிய நொறுக்குத்தீனிய கடைல வாங்காம முடிந்த அளவு வீட்டுல ரெடி பண்ண பாருங்கள். இல்லன்னா நல்ல சத்தான ஆகாரமாக கொடுங்க. கடையில் விற்கப்படும் ஒவ்வொரு பொருளும் சுகாதாரமானது என்று கூறி விட முடியாது.( Home made food and snacks is the best and healthy forever.)

குழந்தைகளுக்கு எது வாங்கி தருவதாக இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவு பண்ணுங்க. குழந்தைங்க தான் உங்க எதிர் காலம் எப்படி உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி உங்கள ஆரோக்கியமா வளத்தாங்களோ அந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உங்கள் குழந்தைகளுக்கும் கொடுங்க.

அவங்க விளையாட நேரம் ஒதுக்கி நண்பர்களோடு பேசி மகிழ இடம் கொடுத்து சந்தோஷமா வாழ பழக்குங்கள். அவங்க சந்தோஷத்தை இரட்டிப்பு ஆக்குவது பெற்றோர்களான உங்கள் கடமை .

ஒரு குழந்தை பிறக்கும் போதே எல்லாம் கத்துகிறது இல்ல. அவங்க வளர்ற விதம் தான் நல்ல பழக்கம் கெட்ட பழக்கம் எல்லாம் கத்து தருது. குழந்தைங்க முன்னாடி சண்டை போடுறது அவங்க மனச தான் ரொம்ப பாதிக்கும். குழந்தைங்க மனசு தெளிந்த நீரோடை மாதிரி சுத்தமானது அதுல அன்பை விதைங்க இரட்டிப்பு அறுவடை செய்யலாம்.

அன்பு மட்டுமே சிறந்த ஆயுதம்...

அன்புடன்
ப்ரிஜேஷ்.

English summary
Love all and be loved by all, this is the message of our reader Brijesh shared with us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X