For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரத்தத் துளிகளின் வரலாறு... மே 1!

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

வேர்வைப்பூக்கள் ஒவ்வொன்றும் தங்களை அர்ச்சிக்க முன்னெடுக்கும் நாள் மே 1 அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

18ம் நூற்றாண்டின் இறுதியில் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளான பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் முதல் 18மணிநேரம் வரை உழைத்தனர். இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. அதில் குறைந்தது 10 மணிநேர வேலை என்ற கோரிக்கை முக்கியமானது. ஜனநாயம் அல்லது மரணம் என்ற வாசத்தை சுமந்துகொண்டு பிரான்ஸ் நெசவுத் தொழிலாளர்கள் தொடங்கிய போராட்டம் தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் கட்டிடத்தொழிலாளர்கள் 1856 ல் முதன்முதலாக 8மணி நேர வேலை என்ற போராட்டத்தை நடத்தி வெற்றியும் பெற்றனர். 1896 ல் லெனின் எழுதிய மே தின குட்டிப் பிரசுரத்தில் ரஷ்யத் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து குறிப்பிட்டு இருந்தார் தொழிலாளர்களின் 8மணிநேர வேலைப் போராட்டங்களே ரஷ்யப்புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.

May 1: What is special today

1889ம் ஆண்டு பிரான்ஸ்நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலாளர்களின் பாராளுமன்றம் கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8மணி நேரப் போராட்டத்தை முன்னெடுத்த செல்வது என்று முடிவு செய்தனர். இந்த அறைகூவலே மே முதல் சர்வதேச தொழிலாளர் தினமாக வருவதற்கு காரணமாக அமைந்தது. மேதினமாக இந்த நாளை கொண்டாடும் முன்னரே ஐய்ரோப்பியர்கள் அறுவடைத் திருநாளாகவும், இங்கிலாந்தில் ஒரு ஆணையும் பெண்ணையும் தேர்ந்தெடுத்து மே தின அரசி, மேதின அரசர் என்று பெயர் வைத்து கொண்டாடியுள்ளனர்.

May 1: What is special today

தங்களின் வியர்வையினால் வசந்தத்தை உருவாக்குவதால் இதற்கு வசந்த கால விழா என்ற பெயரும் உள்ளது. தமிழகத்தில் 1923ம் வருடம் மேமாதம் தொழிலாளர் சங்கத் தலைவரான அய்யா சிங்காரவேலர் மெரீனா கடற்கரையில் தொழிலாளர் உரிமைகளின் ஒப்புதலுக்காக உறுதிமொழி எடுத்துக்கொண்டார் இதுவே இந்தியாவில் மே தினத்திற்கான முதல் கொண்டாட்டம் ஆகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வின் நினைவாக கடற்கரையையே அழகுபடுத்திடக் காரணமான உழைப்பாளர் சிலையை நிறுவ காரணமாக இருந்தவர் அய்யா கர்மவீரர் காமராஜர். அவரின் உத்தரவின் பேரில் அரசு கலைக்கல்லூரி தேவி பிரசாத் ராய் செளத்திரி நான்கு கடின உழைப்பில் ஈடுபட்டிருக்கும் வடிவில் கல்லில் சிலையைச் செதுக்கினார். கல்லூரிக் காவலாளி ஸ்ரீனிவாசன் மற்றும் மாணவர் ராமு அதற்கு மாதிரியாக இருந்தனர்.

May 1: What is special today

உழைப்பாளர்களின் பெருமையைச் சொல்லும் இந்த சிலை 1959ம் வருடம் ஜனவரி 25ம் நாள் ஆளுநர் விஷ்ணுராம் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. சென்னையில மே தினத்தை நினைவுபடுத்தும் விதமாக நினைவுச்சின்னம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த நினைவுச்சின்னம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவி உள்ளது. ஒவ்வொரு மே நாளன்றும் தொழிலாளர்கள் இங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்துகின்றார்கள்.

ஆனால் இந்த 8 மணி நேர வேலை சாத்தியமா என்றால் இல்லை, இன்று 24மணிநேரம் உழைத்தாலும், நமது தேவைகள் தீரப்போவதில்லை, தொழிலப்பவர்கள் வேண்டாம் என்று கூறினாலும் தொழிலாளர்கள் இன்று உழைக்கத் தயாராக இருக்கிறார்கள். தனது திறமையையும் கடினமான உழைப்பையும் அவர்கள் சம விகதத்தில் சேர்க்க வேண்டியுள்ளது. இதில் ஏஸி அறையில் குஷன் சேரில் பணிபுரிவர்கள் முதல் கடுமையான வெய்யிலில் உழைப்பவர்களும் அடக்கம்.

நாட்டின் மக்கள் தொகை பெருகியது போல வேலைவாய்ப்புகள் பெருகவில்லை படித்துவிட்டு தனக்கான பணிச்சூழல் இல்லாமல் ஏதோ வேலையில் கையூன்றி நிற்கும் நிலைதான் பெருக்கெடுக்கிறது. சில இடங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதில்லை, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொத்தடிமையாய் தமிழன் தொங்கிக்கொண்டு இருக்கிறான்.

இந்நாளில் சாதி மத இன மொழி வேறுபாடின்றி ஒரே வர்க்கம் நாங்கள் உழைக்கும் வர்க்கம் என்று உறுதிபூண்டு பாராபட்சமின்றி மேதின விழாவை கொண்டாடவேண்டும். இன்று உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டம் அதிகரிக்கது. காரணம், தங்களுடைய அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறாதபோது வேறு வழியின்றி அவர்கள் போராட்டக் களத்தில் குதிக்கிறார்கள். ஒரு துறையினரின் போராட்டம் அடுத்த துறையை சேர்ந்தவர்களால் இழிவு செய்யப்படுகிறது.

உழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்த தினத்தில் மனித மலங்களை மனிதர்களே சுத்தம் செய்து அந்த நச்சுவாயுவினால் இறந்து போன அந்த உன்னதமான உழைப்பாளர்களின் பாதங்களுக்கும் கரங்களுக்கும் நாம் பூஜை செய்து விட வேண்டும். முதல்நாள் நம் உணவுமேசையில் மணக்கும் பண்டங்கள் மறுநாள் சாலையோரத்தில் அசிங்கம் நாற்றம் என்று மூக்கைப் பொத்தி கொண்டு நகரும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே அதையும் சுத்தம் செய்கிறார்கள் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.

1930ம் ஆண்டு ஐந்தாவது அகில உலக தாவரவியல் கூட்டம், இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்சு என்னுமிடத்தில் தாவரங்களின் பெயரிடுமுறையின் அடிப்படை விதிமுறைகளை விவாதிக்க கூடியது. 1753ம் வருடம் தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது மே மாதம் 1ம் தேதிதான்.

இலுமினாட்டி லத்தின் வார்த்தையான இல்லுமினட்டஸ் இன்பன்மை தெளிவூட்டுதல் வரலாற்று சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் மே 1ம் தேதி 1776ம் வருடம் கண்டறியப்பட்ட இரகசிய சமூகம். இந்தக் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது இன்றையதினம்தான்.

பென்னி பிளாக் விக்டோரியா மகாராணியின் உருவத்தோடு 1840ம் வருடம் மே1 தேதி உலகின் முதலாவது அதிகாரபூர்வமாக ஒட்டக்கூடிய தபால் தலை வெளியிடப்பட்டது.

1844 ம் ஆண்டு மே 1ம் தேதி ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹாங்காங் காவல்துறை அமைக்கப்பட்டது. ஹாங்காங்கில் காவல்துறை சட்ட ஒழுங்கைப் பேணுவதில் தலைச்சிறந்தது அதேவேளை உலகில் குற்றங்கள் மிக குறைவான நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்றாகும்.

1851ஆம் ஆண்டில் மே1ம் தேதி ஹைட்பார்க் என்ற இடத்தில் கண்காட்சிக்காக கட்டப்பட்ட ஒரு மாளிகை தூய இரும்பினால் ஆக்கப்பட்ட கண்ணாடி அரண்மனையாகும் ஜோசப் பாக்ஸ்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இம்மாளிகை 1850 அடி நீளமும் 110 அடி உயரமும், உள்ளுயரம் 408 அடியும் கொண்டது.இது விக்டோரிய மகாராணியால் திறந்து வைக்கப்பட்டது.

1866 அமெரிக்காவில் மெம்பிசு கலவரம் ஆரம்பமானது. மூன்று நாட்களில் 46 கருப்பர்களும், இரண்டு வெள்ளையினத்தவரும் கொல்லப்பட்டனர். 1886 ஆம் ஆண்டு மே 1ம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் 8மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மேநாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1884 ஐக்கிய அமெரிக்காவில் எட்டு மணி நேர வேலை நாள் வேண்டிய பொது அறிவிப்பு வெளியானது.

1891 ஆம் பிரான்சில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது படையினர் சுட்டதில் 9பேர் கொல்லப்பட்டு 30பேர் காயமுற்றனர்.

1893ஆம் ஆண்டில் உலக கொலம்பியக் கண்காட்சி ஒரு உலக விழா ஆகும் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400வது ஆண்டைக் கொண்டாடுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தக் கண்காட்சியைக் காண சுமார் 27 மில்லியன் மக்கள் பார்வையிட்டனர்.

மே 1ம் தேதி 1900 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாநிலத்தின் ஸ்கொபீல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 200பேர் உயிரிழந்தனர். 1915 ம் ஆண்டு லூசித்தானியா என்ற கப்பல் தனது 202 ஆவதும் கடைசியுமான பயணத்தை நியூயோர்க் நகரில் புறப்பட்ட ஆறாவது நாள் அயர்லாந்துக் கரைக்கருகில் மூழ்கியதில் 1198 பேர் உயிரிழந்தனர்.

1925 ம் ஆண்டு இதே மே 1ல் சீனாவில் அனைத்து சீன தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று 134 மில்லியன் உறுப்பினர்களுடன் உள்ள உலகின் மிகப்பெரிய தொழிற்சங்கம் ஆகும்.

1929ம் வருடம் 7,2 ரிக்டர் அளவு நிலநடக்கம் ஈரான்- துருக்மெனிஸ்தான் எல்லையைத் தாக்கியதில் 3800 பேர் உயிரிழந்தனர். 1121 பேர் காயமடைந்தனர்.

1956ல் யோனாசு சால்க்கினால் தயாரிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1956 ம் வருடம் மே 1ம் தேதி மினமாட்டா கொள்ளை நோய் அதிகார பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது.

1977 தொழிலாளர் நாள் நிகழ்வின் போது துருக்கியின் இஸ்தான் புல் நகரில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

2009 ல் சமப்பால் திருமணம் ஸ்வீடனில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

2011 பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அல்காயிதா தலைவர் உசாமா பின்லாந்தின் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழக மக்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் அல்ட்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் அவர்களின் பிறந்தநாள் மே 1நாள் சிலரின் பிறப்பே இயல்பாய் இப்படி அமைந்துவிடும் போல திரைத்துறையில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கி அனைத்து உள்ளங்களிலும் நீங்காமல் இடம் பெற்று இருப்பவர்.

ஐதராபாத் நகரில் பிறந்த இவர் தமிழ் படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தொடக்கக் காலங்களில் விளம்பரபடங்கள் அதன் பிறகு சிறு சிறு வேடங்கள் தெலுங்கில் பிரேம புத்தகம் 1992 ல் வெளியானது இதில் சிறந்த புதுமுகமாக தேர்வு செய்யப்பட்டார். 1995ல் வெளியான ஆசை ரெக்கார்ட் பிரேக் அதன் பின் ஏறுமுகமும் இறங்குமுகமாக அவரது மார்க்கெட் இருந்தாலும் அவரின் புன்னகை முகம் மட்டும் ஒருமுறையும் மாறவே இல்லை, எத்தனை விபத்துகள் படுகாயங்கள் அறுவகைச் சிகிச்சைகள் எல்லாவற்றையும் அவரின் உடல் தாங்கியது. திரையுல பீனிக்ஸ்ஸாய் மீண்டு வந்தார்.

அவருடைய தைரியமான பேச்சுகள் செயல்பாடுகள், தன் ரசிகன் தன்னால் கெட்டுப்போகக்கூடாது என்று ரசிகர் மன்றத்தையே கலைத்தது கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ உதவிகள் செய்தது என்று இன்னும் அவரைப் பற்றி அநேகம் சொல்லலாம். பாதுகாப்பு பயணத்தை வலியுறுத்தி 2013 ம் ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார். உழைப்பில் உயர்ந்த அவரின் பிறந்தநாளும் இந்த மே1ம் தேதிதான்.

English summary
Today is May 1, the day for workers all over the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X