For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தது நவராத்திரி.. எங்க வீட்டு கொலு பார்த்தீங்களா.. பூரிக்கும் மஞ்சுளா சிவம்

Google Oneindia Tamil News

சென்னை: வந்து விட்டது நவராத்திரி.. எங்கெங்கும் களை கட்டியுள்ளன கொலுக்கள். அதேபோல நமது வாசகர் மஞ்சுளா சிவம் வீட்டிலும் கோலாகலமாக கொலு வந்து விட்டது.

நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. வீடுகள் தோறும், ஆலயங்கள் தோறும் கொலு வைத்து மக்கள் வழிபாடுகளை தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளை வழிபட்டு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Navaratri Golu begins

இந்த வரிசையில் நமது வாசகர் மஞ்சுளா சிவமும் தனது வீட்டில் கொலு வைத்து அது தொடர்பான புகைப்படங்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். இது அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் 2வது ஆண்டு கொலு. எனவே விசேஷமாக இதை கொண்டாடி வருகின்றனர்.

சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வரும் மஞ்சுளா சிவம் தம்பதியினர் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தின் நீண்ட கால வாசகர்கள். 5 படிகள் வைத்து ஒரு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமான கடவுள் பொம்மைகளோடு பிற பொம்மைகளும் கலந்து வைக்கப்பட்டுள்ளன.

Navaratri Golu begins

காஞ்சிப் பெரியவரின் அருமையான உருவ பொம்மை இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணர் இருக்கிறார்.. வெண்ணெய் உண்டு மகிழும் கண்ணன் இருக்கிறார். காய்கறி விற்கும் பாட்டி இருக்கிறார்.. பார்க்கவே சூப்பராக இருக்கிறது. கல்யாண வைபோக பொம்மைகளும் அழகாக வைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் மஞ்சுளா சிவம் குடும்பத்தினர் வைத்துள்ள இந்த கொலு மிகவும் அற்புதமாக உள்ளது. கண் கொள்ளாக் காட்சியாக உள்ளன. நீங்களும் கொலுவைத்திருந்தால் எங்களுடன் பகிரலாமே.

உங்கள் வீட்டு கொலு குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்களை எங்களிடம் சேர்க்க வேண்டிய முகவரி: [email protected]

English summary
Navaratri Golu celebration has begun in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X