For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாய் புற்றுநோய்!.... இயற்கைக்கு மீறிய உறவினால் வரும் அவஸ்தை!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாய்வழிப் புணர்ச்சியினால் பெரும்பாலோனோர் வாய்ப்புற்றுநோய்க்கு ஆளாகின்றனர் என்று பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மனைவியின் இயற்கையை மீறிய செக்ஸ் ஆசையினால் அகமதபாத் நகரில் வசிக்கும் பெரும்பாலேனோர் வாய்ப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

அகமதாபார் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு வாய் புற்றுநோய் வரவே இவர் கஸ்தூப் படேல் என்ற புற்று நோய் நிபுணரை அணுகியுள்ளார். முதலில் மருத்துவரால் வாய் புற்றுநோய்க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவருடன் பேசிப் பேசி அவரது செக்ஸ் பழக்க வழக்கங்களை கேட்டறிந்துள்ளார்.

ஓரல் செக்ஸ்

ஓரல் செக்ஸ்

முதலில் தயங்கிய நபர் மருத்துவரிடம் உண்மையை தெரிவித்துள்ளார். அதாவது இந்த நபரின் மனைவி கணவனை மீண்டும் மீண்டும் "ஓரல் செக்ஸ்"-ற்கு வலியுறுத்த இவரும் எண்ணற்ற முறை இணங்கியுள்ளார்.

ஒவ்வொரு முறை மனைவியுடன் உறவு கொள்ளும்போதும் இவரது மனைவி 'ஓரல் செக்ஸிற்கு' கணவனை வலியுறுத்தியுள்ளார். இதுதான் இவரது வாய்புற்றுநோய்க்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. தற்போது இந்த நபர் அகமதாபாத்தில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் மையத்தில் இப்போது இந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

எளிதில் குணப்படுத்தலாம்

எளிதில் குணப்படுத்தலாம்

"இந்த வகையான கேன்சர் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்' என்பதனால் உருவாகிறது. இது குணப்படுத்தக்கூடியதே, பதட்டப்படவேண்டிய அவசியமில்லை. சரியான நேரத்தில் இதனை கணித்து விட்டால் அகற்றி விடலாம்" என்கிறார் டாக்டர் படேல் ஆனால் இதுபோன்ற 'ஓரல் செக்ஸ்' காரணமாக தொண்டை, மற்றும் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது என்று அவர் எச்சரித்துள்ளார்.

பரவும் வைரஸ்

பரவும் வைரஸ்

வாய்வழி செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு வாய், தொண்டையில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அகமதாபார் நகரில் மட்டும் 40 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனராம். இதற்கு காரணம் வைரஸ்களில் எளிதில் வாய் மற்றும் தொண்டையில் பரவுவதே காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தொண்டை புற்றுநோய்

தொண்டை புற்றுநோய்

வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளினாலும், புகையிலைப் பொருட்களினாலும் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் வருவது அதிகரிக்கிறது என்று தெரியவந்தது.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்கள் எச்சரிக்கை

மேலும் வாய்ப்புற்றுநோய்க்கு காரணமான வைரஸ் ஓரல் செக்ஸ் மூலம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ள நிபுணர்கள் வந்தபின் தவிப்பதை விட வருமுன் தவிர்ப்பதே நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
Ahmedabad is considered the capital of oral cancers with 40 per cent of cancers recorded being cancers of the mouth, mostly caused by tobacco and gutkha chewing. Now, another risk factor is emerging from the bedroom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X