அமெரிக்காவில் வளைகுடா தமிழர்கள் கொண்டாடிய பொங்கல் விழா.. ஏராளமானோர் பங்கேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
   அமெரிக்காவில் வளைகுடா தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டம்- வீடியோ

   கலிபோர்னியா: அமெரிக்காவில் வளைகுடா தமிழ் மன்றம் சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

   தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை ஒன்றாம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

   புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு கறும்பு உள்ளிட்டவற்றுடன் கதிரவனை வழிபடும் பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

   எலிசபெத் ஏரியில் பொங்கல்

   எலிசபெத் ஏரியில் பொங்கல்

   இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள எலிசபெத் ஏரி பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

   பாரம்பரிய பொங்கல்

   பாரம்பரிய பொங்கல்

   கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். பெண்கள் கேஸ் அடுப்பில் வெட்டவெளியில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

   அனைவரும் பங்கேற்பு

   அனைவரும் பங்கேற்பு

   இதைத்தொடர்ந்து கும்மிடியத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் பாரபட்சமின்றி கலந்துகொண்டன்ர்.

   தம்பதிகளுக்கு போட்டி

   தம்பதிகளுக்கு போட்டி

   உரியடி, கயிறு இழுத்தல் பரமபதம் உள்ளிட்ட போட்டிகளும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும் தம்பதிகளின் காலை சேர்த்து கட்டி நடந்து செல்லும் போட்டிகளும் நடத்தப்பட்டன.

   தமிழர்கள் பங்கேற்பு

   தமிழர்கள் பங்கேற்பு

   இதைத்தொடர்ந்து அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இதில் ஏராளமான தமிழர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

   வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

   English summary
   Pongal festival celebrates in California Bay Area Tamil Mandram (BATM) California. (near San Francisco) had arranged Pongal celebration at open place. Many Tamils were participated and enjoyed Pongal as if they are in own place in Tamil Nadu.

   நாள் முழுவதும் oneindia
   செய்திகளை உடனுக்குடன் பெற

   We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more