For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்வு!!!

துபாயில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி அந்த அமைப்பின் தலைவராக குத்தாலம் ஏ.லியாக்கத் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்பான, ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பேரவையின் செயற்குழு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக குத்தாலம் ஏ.லியாக்கத் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Quaid-e-Millat Council of the United Arab Emirates in Dubai to choase new Administrators !!!

மூத்த துணைத் தலைவராக களமருதூர் ஹாஜி ஷம்சுத்தீன் தேர்வாகியுள்ளார். துணைத் தலைவர்களாக வழக்கறிஞர் சென்னை இஜாஜ் பெய்க், காயல்பட்டினம் நூஹ் சாஹிப், திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச்செயலாளராக கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மானும், துணைப் பொதுச்செயலாளர் மற்றும் துபை மண்டல செயலாளராக இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. பரக்கத் அலி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர் மற்றும் நிர்வாகச் செயலாளராக லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Quaid-e-Millat Council of the United Arab Emirates in Dubai to choase new Administrators !!!

துணைப் பொருளாளராக காயல்பட்டினம் எஸ்.எம்.ஏ முஹம்மத் ஈசாவும், துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள்அமைப்புச் செயலாளரக லால்பேட்டை ஏ.ஆர்.தாரிக்கும் தேர்வாகியுள்ளனர். துபாய் மற்றும் வடக்கு மண்டலங்கள் இணை அமைப்புச் செயலாளராக புளியங்குடி மவ்லவி செய்யத் அபூசாலிஹ் பிலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபி அமைப்புச் செயலாளரக ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரியும் அபுதாபி இணை அமைப்புச் செயலாளராக திருவாடுதுறை அப்துல் ரஜாக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அல் அய்ன் அமைப்புச் செயலாளராக லால்பேட்டை மவ்லவி அமீனுல் ஹுசைன் மன்பஈ தேர்வாகியுள்ளார்.

மார்க்கத்துறைச் செயலாளராக காயல்பட்டினம் சுலைமான் மஹ்ழரியும், மார்க்கத்துறை இணைச் செயலாளராக வாலிநோக்கம் கலீல் ரஹ்மான் பிலாலியும், மார்க்கத்துறை துணைச் செயலாளராக பெரியபட்டினம் மவ்லவி ஷர்ஃபுத்தீன் ஆலிம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Quaid-e-Millat Council of the United Arab Emirates in Dubai to choase new Administrators !!!

துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் கொள்கை பரப்புச் செயலாளராக வழுத்தூர் ஜா. முஹ்யித்தீன் பாட்ஷாவும் அபுதாபி கொள்கை பரப்புச் செயலாளராக கொள்ளுமேடு மவ்லவி சிராஜுத்தீன் மன்பஈயும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் மக்கள் தொடர்புச் செயலாளராக முதுவை ஹிதாயதுல்லாஹ் துணைச் செயலாளராக கங்கவல்லி முஹம்மத் யாக்கூப் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபி மக்கள் தொடர்புச் செயலாளராக கொள்ளுமேடு மவ்லவி முஹம்மது ஹாரிஸ் மன்பஈ அபுதாபி மக்கள் தொடர்பு துணைச் செயலாளராக மதுக்கூர் ஜாஃபர் சாதிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் விழாக்குழு செயலாளராக காயல் யஹ்யா முஹ்யித்தீனும், அபுதாபி விழாக்குழு செயலாளராக ஆடுதுறை முஹம்மத் அப்துல் காதரும் தேர்வாகியுள்ளனர். துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளராக திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் துணைச் செயலாளராக திருச்சி முஹம்மத் இத்ரீஸ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அபுதாபி ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளராக காயல் ஹுசைன் மக்கி ஆலிம், துணைச் செயலாளராக லால்பேட்டை முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். துபாய் ஊடகத்துறைச் செயலாளராக கீழக்கரை ஹமீத் யாஸின், துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் சமூக நலத்துறைச் செயலாளராக பனைக்குளம் முஹம்மத் இப்ராஹிம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அபுதாபி ஊடகம் மற்றும் சமூக நலத்துறைச் செயலாளர், லால்பேட்டை சல்மான் பாரிஸ், சமூக நலத்துறை துணைச் செயலாளராக வாலிகண்டபுரம் ஜான் பாட்ஷாவும் வடக்கு அமீரகங்கள் ஊடகத்துறைச் செயலாளராக கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

துபாய் மற்றும் வடக்கு அமீரகங்கள் மின்னணு ஊடகத்துறைச் செயலாளராக வடக்கு மாங்குடி முஹம்மத் சலீமும் அபுதாபி மின்னணு ஊடகத்துறைச் செயலாளராக லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துபாய் மண்டலத்துக்கான மண்டலச் செயலாளர் மற்றும் துணைச் செயலாளராக கும்பகோணம் சாதிக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அபுதாபி மண்டல செயலாளராக லால்பேட்டை மவ்லவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அல் அய்ன் மண்டல செயலாளராக ராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. தைய்யூப் அலியும் அல் அய்ன் மண்டல துணைச் செயலாளராக ரெட்டியூர் முஹம்மது பஷீர் மன்பஈ மற்றும் செயலாளராக தஞ்சை பாட்ஷா கனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இணைச் செயலாளராக மதுக்கூர் முஹம்மத் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஷார்ஜா மண்டல துணைச் செயலாளரக திண்டுக்கல் யாசீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அஜ்மான் மண்டலம் செயலாளராக அஞ்சுகோட்டை அப்துல் ரஜாக்கும் ராஸ் அல் கைமா மண்டலம் செயலாளராக கீழக்கரை ஃபஹ்ருல் ஃபையாஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துபாய் பகுதி செயலாளர்களாக தேரா (பொது) கோட்டாறு சாதிக்கும், பர்துபை (பொது) ஆடுதுறை திப்பு சுல்தானும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் பஜார், பனியாஸ் மற்றும் நாயிஃப் பகுதி செயலாளராக அய்யம்பேட்டை முஹம்மத் அமானுல்லாஹ், அல் முத்தீனா பகுதி செயலாளராக கீழக்கரை முஹம்மது காமில், கராமா பகுதி செயலாளராக அய்யம்பேட்டை ஜா. இப்ராஹிம் அஹ்மத் தர்வேஷ் மற்றும் சோனாப்பூர், செயலாளராக லால்பேட்டை கிஃபாயத்துல்லாஹ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சோனாப்பூர், துணைச் செயலாளராக ராமநாதபுரம் ஷஹாபுத்தீனும் அல் கூஸ் பகுதிக்கு லால்பேட்டை முஹம்மத் முபாரக்கும் இணை அமைப்பாளராக லால்பேட்டை முஹம்மத் ஃபையாஜும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். அல் கிஸைஸ் பகுதிக்கு காரைக்கால் ஃபைஜுர் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபி பகுதி செயலாளர்களாக சாபியா பகுதிக்கு களமருதூர் ஷர்ஃபுத்தீன் பனியாஸ் & முஸஃப்பா பகுதிக்கு லால்பேட்டை எஸ்.ஏ. அஸ்கர் அலி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஷார்ஜா மற்றும் ரோலா பகுதி செயலாளராக லால்பேட்டை நஜீர் அஹ்மத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜ்மான் பகுதி செயலாளராக அல் ஜர்ஃப்:- ஜெஸிமுத்தீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

English summary
Quaid-e-Millat Council in Dubai, United Arab Emirates selected the new administrators. Quaid-e-Millat Council is accredited by Indian Union Muslim League.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X