For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் டிச.12-ல் தமிழர் வாழ்வில் சூழல் பாதுகாப்பு-சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஒரு பகுதியாக வரும் 12-ந் தேதி தமிழர் வாழ்வில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு( அன்றும் இன்றும்) என்ற தலைப்பில் சிந்துசமவெளி ஆய்வாளர் இரா. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. சிறப்புரையாற்ற உள்ளார்.

சிங்கப்பூரில் நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற்று வரும் தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் "தமிழர் வாழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (அன்றும், இன்றும்)" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

R Balakrishnan IAS to participate Singapore Tamil Mozhi Vizha

இந்நிகழ்வை 'Zoom' செயலி வழியாக இணைந்தும், 'You tube' நேரலையிலும் கண்டு களிக்கலாம். இந்நிகழ்வின் ஓர் அங்கமாக இத்தலைப்பைபொட்டி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கு என்று மூன்று பிரிவுகளாகக் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு மூன்று பிரிவுகளில் முதல் பரிசைப் பெற்ற மாணவர்கள் தங்கள் படைப்பை இந்நிகழ்வில் படைக்க இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இத்தலைப்பையொட்டி சிந்துவெளி ஆய்வாளரான இரா. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

அதன் பிறகு கேள்வி - பதில் அங்கம் 20 நிமிடங்களுக்கு நடைபெறும். பார்வையாளர்களின் கேள்விகளுக்குச் சிறப்புப் பேச்சாளர் பதில் அளிப்பார்.

இந்நிகழ்ச்சியானது டிசம்பர் 12ம் தேதி சிங்கப்பூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வைப் பற்றி மேல் விவரங்களை அறிய பாலசுப்ரமணியன் அவர்களை அவர்களை 91099329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அண்ணமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்கம் அன்புடன் அழைக்கிறது.

English summary
R Balakrishnan IAS will deliver key not Address in Singapore Tamil Mozhi Vizha on Dec 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X