For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராசல் கைமாவில் சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்ற பொங்கல் விழா

By Siva
Google Oneindia Tamil News

ராசல் கைமா: துபாயில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராசல் கைமா கடற்கரை நகரில் செயல்பட்டு வரும் ராசல் கைமா தமிழ் மன்றத்தில் பொங்கல் விழா 07.02.2014 அன்று மாலை 6.30 மணிக்கு இந்தியப் பள்ளி வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது.

சின்னத்திரை கலைஞர்கள் ம.க.ப. ஆனந்த், சாலினி, பழனி, அமுதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களை மகிழ்விக்கும் வண்ணம் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினர். மேலும் குழந்தைகளின் நடனம், இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பழனி பண்டாளம் மற்றும் அமுதவாணனின் கலக்கல் காமெடி மற்றும் பல குரல் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ம.க.ப. ஆனந்த் நிகழ்ச்சியின் இடையே இளைஞர்களுடன் நடனமாடி மகிழ்வித்தார்.

பிரசித்தம் குழுவினர் பங்கேற்ற நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

Ras Al Khaimah tamil mandram celebrates Pongal Vizha

கடும் குளிரையும் பொருட்படுத்தாது நிகழ்ச்சியில் தமிழர்கள் பலர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராசல் கைமா தமிழ் மன்ற நிர்வாகிகள் சிறப்புற செய்திருந்தனர்.

English summary
Ras al Khaimah tamil mandram celebrated Pongal Vizha on february 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X