For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சியாட்டலில் முதன் முறையாக ‘ஒரு குறள்- ஒரு டாலர்’ போட்டி!

By Shankar
Google Oneindia Tamil News

சியாட்டல்(யு.எஸ்): அமெரிக்கா முழுவதும் பரவலாகி வரும் ‘ஒரு குறள் - ஒரு டாலர்' திருக்குறள் போட்டி சியாட்டல் நகரிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

பல்வேறு அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் திருக்குறளை அடுத்த தலைமுறையினருக்கு பயிற்றுவிப்பதில் பல முயற்சிகள் எடுத்து வருகின்றார்கள்.

Seattle Tamil Sangam conducts Thirukkural competition

டல்லாஸ் நகரில் 9 ஆண்டுகளுக்கு முன்னால் ப்ள்னோ தமிழ்ப் பள்ளியில் ‘ ஒரு குறள் - ஒரு டாலர்' திருக்குறள் போட்டி தொடங்கப்பட்டது. பிற பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் வித்த்தில் விரிவுபடுத்தப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஹூஸ்டன், ஃப்ரீமாண்ட் உள்ளிட்ட பிற நகரங்களிலும் ‘ஒரு குறள் - ஒரு டாலர்' திருக்குறள் போட்டி தொடங்கப்பட்டு பிரபலம் அடைந்துள்ளது.

சியாட்டல் தமிழ்ச் சங்கம் இந்த ஆண்டு அங்கே ‘ஒரு குறள் - ஒரு டாலர்' போட்டியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இன்றும் நாளையும் அதாவது மார்ச் 19 - 20 ம் தேதிகளில் நடைபெறும் இந்த போட்டியில் 16 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழும், ஓப்புவித்த குறள் எண்ணிக்கை + பொருள் ஏற்ற்வாரு டாலர் பரிசும் வழங்கப்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் 27 ம் தேதி நடைபெறும் தமிழர் கலை விழாவில் பரிசு வழங்கப்படும்.

தமிழர் கலை விழாவில் சுகி சிவம், வழக்கறிஞர் சுமதி, கவிஞர் நீலகண்டன் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

போட்டி மற்றும் விழாவுக்கான ஏற்பாடுகளை சியாட்டல் தமிழ்ச் சங்கத்தினர் செய்து வருகிறார்கள். சியாட்டலில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகள் திருக்குறள் போட்டிக்கு இணைந்து பணியாற்றுகிறார்கள்.

English summary
The Seattle Tamil Sangam is conducting Thirukkural Competition today and tomorrow at Seattle City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X