For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அபுதாபியில் 'ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்' நூல் வெளியீடு

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபியில் 'அய்மான்' அமைப்பின் சார்பில் கடந்த வியாழக்கிழமை மீலாது விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வி.களத்தூர் கமால் பாஷா எழுதிய 'ஷேக் ஜாயித் ஒரு சகாப்தம்' என்ற நூல் வெளியிடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ஷேக் ஜாயித் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில செயலாளர் முஹம்மது அபூபக்கர் வெளியிட லால்பேட்டை சிராஜுதீன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

'Sheikh Zayed Oru Sagaptham' book launch in Abu Dhabi

'ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான்' ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசத் தந்தை என்று போற்றப்படுபவர். ஐக்கிய அரபு அமீரகத்தை வடிவமைத்தவர். தேச மக்களின் நலனுக்காக உழைத்தவர். உலக மக்கள் அனைவரின் மீதும் மாறாத அன்பு கொண்டவர். மனித நேயம் மிக்க பண்பாளர். இந்தியர்களை நேசித்த மாண்பாளர்.

அமீரகத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஷேக் ஜாயித் அவர்களைப் பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்துள்ளது.

இந்நூல் வெளிவர உதவிய லால்பேட்டை சிராஜுதீன் அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அய்மான் அமைப்பின் கீழக்கரை சையத் ஜாபர் அவர்களுக்கும், லால்பேட்டை அப்துர் ரஹ்மான் மற்றும் அய்மான் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நூல் ஏற்கனவே சென்னையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவிக்கோ அரங்கில் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜே.எம் ஹாரூண் வெளியிட எழுத்தாளர் ஆளுர் ஷாநவாஸ், இயக்குனரும், நடிகருமான ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர். கலாம் பதிப்பகத்தின் சார்பில் இந்நூல் வெளியிடப்பட்டது.

தொடா்புக்கு:
கலாம் பதிப்பகம்
இலக்கம் : 6, 2 ம் பிரதான சாலை, சி.ஐ.டி காலனி, மயிலாப்பூர்,
சென்னை 600 004
தொலைபேசி 91-44-24997373
9444025000,9940059400

English summary
Book titled 'Sheik Zayed oru sagaptham' was launched in Abu Dhabi on thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X