For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை சிங்கப்பூரில் நடக்கும் முப்பெரும் விழா

By Siva
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாகூர் சங்கம் நடத்தும் முப்பெரும் விழா நாளை (23.08.2014) மாலை 5.30 மணிக்கு சுல்தான் மஸ்ஜித் அரங்கில் நடக்க இருப்பதாக நாகூர் சங்க செயலாளர் முஹம்மது கௌஸ் தெரிவித்துள்ளார்.

தேசிய தின விழா, நோன்புப் பெருநாள் இன்னிசை விருந்து மற்றும் தமிழ் மொழி விழா ஆகியவை முப்பெரும் விழாவாக நடக்க இருக்கிறது.

Singapore Nagore Sangam's triplet function on aug. 23rd

சிங்கப்பூர் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலைய தலைவர் ஹாஜி எஸ்.எம். அப்துல் ஜலீல் தலைமை வகிக்கிறார்.

சிறப்பு மலரை குவைத் நாட்டிற்கான சிங்கப்பூர் தூதர் ஜெய்னுல் ஆபிதீன் ரஷீது வெளியிடுகிறார். முதல் மலரை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் எஸ். திண்ணப்பன் பெறுகிறார்.

முப்பெரும் விழா ஒலிப்பேழையினை சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வெளியிடுகிறார்.

ஜமால் கஜூரா நிறுவன தொழிலதிபர் எம். முஹம்மது ஜமால் முதல் ஒலிப்பேழையினை பெறுகிறார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளை தலைவர் முனைவர் எம்.ஏ. காதர், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே. பரதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியின் இடையே ஆன்மீக இசைத் தென்றல் ஏ. ஜெய்னுல் ஆபிதீன் ஃபைஜி அவர்கள் தம் குழுவினரோடு இசை விருந்தளிப்பார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் பெற +65 - 94551473 / 81843868 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இணையதளம் : www.nagoreassociation.org.sg

English summary
Singapore Nagore sangam is celebrating triplet function on august 23rd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X