For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாம்பு கடிச்சா பயப்படாதீங்க, உடனே போங்க அரசு மருத்துவமனைக்கு.. அப்புறம் ”பாம்போட “அட்ரஸ்” முக்கியம்!

Google Oneindia Tamil News

சென்னை: பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள்.

ஏனெனில் பெரும்பாலான தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை அட்மிட் செய்வதில்லை. அதை விட முக்கியம் தேவையான மருந்துகள் அங்கு பெரும்பாலும் இருப்பதில்லையாம்

எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்குதான் அனைத்து மருந்துகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்குமாம்.

பாம்பு கடி பற்றிய சில முக்கிய விவரங்கள் இங்கே உங்களுக்காக.

விஷப்பாம்பா, வெத்துப் பாம்பா? :

விஷப்பாம்பா, வெத்துப் பாம்பா? :

கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்பட்டால் இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து ,சற்று தடித்து வீங்கி , கடுமையான வலி ஏற்பட்டால் இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்.

கட்டு போடாதீர்கள்:

கட்டு போடாதீர்கள்:

இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப் பகுதி அழுகி போகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

நன்றாக கழுவுங்கள்:

நன்றாக கழுவுங்கள்:

காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும். பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.

வேகமாக நடக்க கூடாது:

வேகமாக நடக்க கூடாது:

பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது

தைரியம்தான் முதலுதவி:

தைரியம்தான் முதலுதவி:

இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.

கடிப்பட்டவரை நிற்க வைக்காதீர்:

கடிப்பட்டவரை நிற்க வைக்காதீர்:

பாம்பு கொத்திய இடத்தை இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.

பாம்போட “அட்ரஸ்” முக்கியம்:

பாம்போட “அட்ரஸ்” முக்கியம்:

இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.

கண்ணுக்கு ஆபத்து ஜாக்கிரதை:

கண்ணுக்கு ஆபத்து ஜாக்கிரதை:

பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்...

English summary
If snake bites a person, take him to government hospital immediately. Don’t take him to private hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X