• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்கழி பூஜை - திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி

By Mayura Akilan
|

திருப்பாவை - 28

ஆயர் குலத் தலைவன் கண்ணன்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

Sri Andal's thiruppavai

விளக்கம்:

இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம்.

உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.

திருப்பள்ளியெழுச்சி - 8

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலார் யாவர்மற்றறிவர்

பந்தணை விரலியும் நீயும் உன் அடியார்

பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டி

திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி

அந்தண னாவதும் காட்டிவந்தாண்டாய்

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

விளக்கம்:

முதல் பொருள், இடைப் பொருள் மற்றும் நடுப் பொருளான இறைவா. உன்னை அந்த மும்மூர்த்திகளைத்தவிர வேறு யார் முழுமையாக அறிய முடியும். நீயும், உன் உமையும் அடியார் வீடு தோறும் எழுந்திருளி காட்சி தந்தீர்கள்.

செந்தழல் போன்ற உனது திருமேனியை அடியார்களுக்குக் காட்டி அருட் செய்தாய்.திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தணன் வேடத்தில் வந்து என்னையும் ஆட்கொண்டாய். அமுதம் போன்ற என் சிவபெருமானே, படுக்கையிலிருந்து துயில் நீங்கி எழுந்து வந்து எனக்கருள்வாய்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sri Andal, One of the twelve Alwars and the only female saintess, lived in the first half of 8th century A.D.Andal imagined herself as a cow-girl at the time of Sir Krishna, collecting all girls at Ayarpadi at dawn during the Margazhi month, day after day performing the ritual on the banks of the river Yamuna

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more