For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்பிட முடியலையே... ஏக்கத்திலேயே குண்டாகும் மனிதர்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: உடல் எடையைக் குறைப்பதற்காக விருந்துகளை புறக்கணிக்கும் குற்ற உணர்வே உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அறிவியலின் வளர்ச்சியால் உணவுப் பொருட்களில் உள்ள சத்து மற்றும் அதிலுள்ள கேடுகளை சுலபமாக மனிதர்களால் ஆராய்ந்து பார்த்து விட முடிகிறது. அதன் விளைவாக பல உணவுப் பொருட்களை எடை அதிகரிக்கும் உணவுப் அட்டியலில் சேர்த்து சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர்.

இதனால், விருந்து உள்ளிட்டவற்றில் சாப்பாடுகளைப் பார்த்து நாவில் மனதார மட்டுமே மகிழ்ந்து கொள்பவர்களுக்கு இனிய செய்தி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு....

ஆய்வு....

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக விருந்து சாப்பாட்டையும், சாக்லேட் மற்றும் கேக் போன்ற இனிப்புகளையும் தவிர்ப்பவர்கள் குறித்து நியூசிலாந்தின் கேன்டர்பரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது,

அபிடைட்....

அபிடைட்....

அதன்படி, உடல் மெலிவதற்காக கேக் துண்டு ஒன்றினை சாப்பிடாமல் வருத்தப்படுபவர்களை விட அதனை சந்தோஷமாக சாப்பிடுபவர்களே எடை குறைவாக உள்ளார்கள் என 'அபிடைட்' என்ற இணையதள பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ருசித்து சாப்பிடல்....

ருசித்து சாப்பிடல்....

அதில், கலோரிகளை மட்டுமே கணக்கிட்டு சாப்பிடாமல் இருப்பதைவிடவும், இதுபோன்ற உணவு வகைகளை ருசித்துச் சாப்பிடுவதும் உடல் எடைகுறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது.

குற்ற உணர்வு...

குற்ற உணர்வு...

மேலும், விருந்து உணவுகளை சாப்பிடாமல் பெறும் குற்ற உணர்வே உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டங்களைக் கைவிட்டு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களையும் மேற்கொள்ளத் தூண்டு கோலாக அமைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எடை குறைப்புத் திட்டங்கள்....

எடை குறைப்புத் திட்டங்கள்....

ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ரோலின் குய்ஜர் மற்றும் ஜெசிகா பாய்ஸ் இது குறித்து கூறுகையில், ‘சாக்லேட் போன்ற இனிப்புகளைப் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்ற ஆவல் தோன்றுவது இயல்பு தான். ஆதலால் அவற்றை அனுபவிக்கவேண்டிய ஒரு பரிசு என்று எண்ணி சந்தோஷமாக உண்ணுவதும் நீண்டகால எடைகுறைப்புத் திட்டங்களுக்கு உதவக்கூடிய ஒரு விஷயமாகும்' எனத் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பழக்கவழக்கம்...

உணவுப் பழக்கவழக்கம்...

இந்த ஆய்வில், 18 முதல் 86 வயதுடைய 300 பேரிடம் அவர்களின் உணவுப்பழக்கங்களையும், சாக்லேட் உண்ணும் விருப்பத்தினையும் ஆய்வாளர்கள் கேட்டு அதன்படி இந்த அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

சந்தோசமா சாப்பிடுங்க...

சந்தோசமா சாப்பிடுங்க...

இவர்களுள் 27 சதவிகிதத்தினர் சாக்லேட் சாப்பிடும்போது குற்ற உணர்வினையும், மற்றவர்கள் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதன்மூலம் சாக்லேட் சாப்பிடாமல் குற்ற உணர்வினைப் பெறுபவர்களுக்கும் எடை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.

English summary
People who can look at a slice of cake as something to celebrate rather than regret are more likely to stay slim, New Zealand research suggests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X