For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வில்லுப்பாட்டு.. பாரம்பரியமான உடை.. அமெரிக்காவின் தமிழ்ப்பள்ளியில் நடந்த ஆண்டு விழா!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியில் சென்ற வாரம் பள்ளி ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியில் சென்ற வாரம் பள்ளி ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரில் உள்ள ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியில் இந்த ஆண்டு விழா நடைபெற்றுது. சென்ற மே 19-ஆம் தேதி சனிக்கிழமை (May-19th 2018) பிற்பகல் 1:30 மணியளவில் தொடங்கிய இந்த விழா மாலை வரை நடந்தது.

ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவில் பல முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறியது. நிறைய குழந்தைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 பாரம்பரியமான உடை

பாரம்பரியமான உடை

அமெரிக்காவில் இருந்தாலும், இந்த ஆண்டு விழாவிற்கு எல்லோரும் தமிழகத்தின் பாரம்பரியமான உடையில் வந்திருந்தனர். ஆண்கள் எல்லோரும் வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் பட்டுப் புடவை கட்டியும் வந்திருந்தனர். குழந்தைகளும் பாவாடை-சட்டை, சின்ன வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தனர். விழா முழுக்க தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

 தமிழக கலாச்சாரம்

தமிழக கலாச்சாரம்

தமிழ் மொழிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதே அளவு முக்கியத்துவம் தமிழக கலாச்சாரத்திற்கும் கொடுக்கப்பட்டது. வில்லு பாட்டு, தமிழ் பாடல் நடனம், பாரதியார் பாடல் என்று நிறைய முக்கியமான விஷயங்கள் குறித்த நிகழ்வு இதில் அரங்கேறியது. எல்லா விதமான நிகழ்வுகளையும் குழந்தைகள் மிகவும் அழகாக அரங்கேற்றிக் காட்டினார்கள்.

 ஸ்டெர்லைட் பிரச்சனை

ஸ்டெர்லைட் பிரச்சனை

அதேபோல் தமிழகத்தில் தற்போது உச்சமடைந்து இருக்கும் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து அதில் பேசியுள்ளனர்.சிறுவர் சிறுமிகள் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக அரங்கிலே கோஷம் எழுப்பினார்கள். ஸ்டெர்லைட்டின் ஆபத்தை போஸ்டராக பிடித்து அங்கு வந்து இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மேலும் உலக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வும் இதில் இடம்பெற்றது. பூமி வெப்பமாவதை பற்றி பேசி இருந்தனர். ஆயுத, துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் அமெரிக்காவில், உலக அமைதிக்காக இவர்கள் வில்லுப்பாட்டு பாடி அசத்தினார்கள்.

English summary
Tamil Students celebrated annual day function in Greater Houston Tamil School, USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X