For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் நடந்த டிடிஎஸ் இவெண்ட்ஸின் முப்பெரும் விழா: தமிழிசை, சுகி சிவம் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: டிடிஎஸ் இவெண்ட்ஸ் நடத்திய முப்பெரும் விழா 14.11.2014 வெள்ளிக்கிழமை மாலை துபாய் இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் சிறப்புற நடைபெற்றது.

டிடிஎஸ் இவெண்ட்ஸ் நிர்வாகி ஜெயந்தி மாலா சுரேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். துணைத் தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். நிறுவனப் புரவலர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

துவக்கமாக குத்துவிளக்கினை ஜெயந்தி மாலா சுரேஷ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், திருமதி. குமார் உள்ளிட்டோர் ஏற்றினர். அதனைத் தொடர்ந்து அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்டவை பாடப்பட்டது.

திருக்குறளை செல்வி பத்மஸ்ரீ விஜயராகவனும், இன்று ஒரு தகவலை கோபிகா கீதா கிருஷ்ணனும் வாசித்தனர்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தனது உரையில், தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்திய டிடிஎஸ் இவெண்ட்ஸுக்கு பாராட்டு தெரிவித்தார். அமீரகத்தில் எவ்வித இன, சாதி, மொழி பாகுபாடு இன்றி பணியாற்றி வரும் இந்திய மக்களைப் பாராட்டினார்.

சுகி சிவம் நடுவராக இருக்க வாழ்க்கை என்றும் நமக்கு பூந்தோட்டமா? போராட்டமா எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. சுகி சிவம் குழுவில் சண்முகவடிவேல், பேராசிரியர் டாக்டர் பிரேமா, மோகன சுந்தரம், மது, வழக்கறிஞர் சுமதி, மணிகண்டன் உள்ளிட்டோர் இடம்பெற்று ரசிகர்களை தங்களது நகைச்சுவையின் மூலம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்.

நடன ஆசிரியை கவிதா பிரசன்னா வடிவமைப்பில் நடன நிகழ்ச்சியும், பாடல் ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன் வடிவமைப்பில் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிறப்புக் குழந்தை கார்த்திக் தனது பாடலின் மூலம் பாராட்டு பெற்றார்.

ஜெயந்தி மாலா சுரேஷ் தனது ஆய்விற்காக முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் ஆலியா டிரேடிங் மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவூது, அரப் லைட் ரவி கண்ணன், சமூக சேவையாளர் கே. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tamilisai Soundararajan attends Mupperum Vizha in Dubai

அரப் லைட், பிளாக் துளிப் பிளவர், ராயல் செஃப் அல் கலீஜ், பாய்ண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி, அலையன்ஸ் குரூப், சூப்பர் டெக்ஸ், ஏஎஸ்பி சௌந்தர்யம் ஜென்ரல் டிரேடிங், அல் அஸ்மா டெக்னாலஜி, டிரான்ஸ்கான், வாஸ்டாக், சிவ் ஸ்டார் பவன், அல் வஹா குரூப், யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ், பெருமாள் பூக்கடை, வெஸ்டர்ன் ஆட்டோ, பேங்க் ஆஃப் பரோடா, லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டல், ஈராஸ் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுரனை வழங்கின.

இந்நிறுவனங்கள் அனைத்திற்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ. முஹம்மது தாஹா, பிரசன்னா, கீதாகிருஷ்ணன், சுந்தர், விஜயராகவன், விஜயேந்திரன், பாலா உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

அல் அஸ்மா டெக்னாலஜி நிறுவனம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவருக்கு சிறப்பு குலுக்கல் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை பரிசாக வழங்கியது.

English summary
TN BJP president Tamilisai Soundararajan attended DTS' Mupperum Vizha in Dubai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X