For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சரஸ்வதி பூஜை: கம்பருக்காக கிழங்கு விற்று வந்த அன்னை சரஸ்வதி

அன்னை சரஸ்வதி தேவியின் அருள் கம்பர், அம்பிகாபதிக்கு நேரடியாகவே கிடைத்திருக்கிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: கம்பரின் பாடலைக் கேட்டு அதை நிரூபிக்கும் வகையில் அன்னை சரஸ்வதி தேவியே வயதான மூதாட்டியாக வந்து அருள்பாலித்திருக்கிறார்.

சரஸ்பதி பூஜை தினமான இன்று அந்த சுவாரஸ்யமான கதையைப்பற்றி அறிந்து கொள்வோம்.

கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும் சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. இது ஒட்டக்கூத்தருக்கு தெரியவருகிறது. எனவே இருவரையும் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

The goddess Saraswathi and Kambar

சோழ மன்னன் நடத்திய விருந்தில் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். கம்பர் அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அம்பிகாபதிக்கு மன்னன் மகள் அமராவதி மீது ஏற்பட்டுள்ள காதல் கம்பருக்கு லேசாக தெரியும். விருந்தில் பரிமாற அமராவதி உணவு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அப்போது அம்பிகாபதிக்கு பாடல் உதிக்கிறது.

' இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கு அசைய... என்று பாடினார்.

அதாவது, சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே என்று கூறினான்.

இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் சோழ மன்னனை பார்க்க... சோழ மன்னனுக்கு கோபம் வந்தது. உடனே கம்பர் சரஸ்வதி தேவியை தியானித்து அம்பிகாபதியின் பாடலை தொடர்ந்து பாடினார்

"கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள்
தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்" என முடித்தார்.

இந்த பாடலுக்கு விளக்கம் கேட்டார் சோழ மன்னன். அதற்கு கம்பரோ, வீதியில் வயோதிக மாது ஒருத்தி வெயிலில் உஷ்ணத்தால் இட்ட அடிநோக எடுத்த அடிகொப்பளிக்க கொட்டிக் கிழங்கு விற்றுக் கொண்டு வீதிவழியாக வருகின்றார் என கூறினார்.

உடனே அரசன் காவலாளியை அழைத்து தெருவில் போய் உண்மை நிலையை அறிந்து வர கூறினார். என்ன ஆச்சரியம் நாமகள் வயோதிகப் பெண்ணாகி கொட்டிக் கிழங்கு விற்று வருகிறாள்.

அந்த வயோதிகப் பெண்ணை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினர். ஒட்டக்கூத்தரின் கனவு பொய்த்து கம்பரின் மகன் அம்பிகாபதி சரஸ்வதியின் அருளால் காப்பற்றப்படுகிறாள்.

கம்பரின் வார்த்தையை காப்பாற்றவே சரஸ்வதி தேவி வயதான பெண்மணி போல வந்து காப்பாற்றினார்.

English summary
Goddesss Saraswathi very old lady getup, savings in Kambar and son Ambikapathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X