For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் நடைபெற்ற வானலை வளர்தமிழ் அமைப்பின் முப்பெரும் விழா

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டு, கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கம் மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிர்வாகம்= வெற்றி நூல் வெளியீடு 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இயக்குனர் சிகரம் அமரர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கு கவிஞர் ஜியாவுத்தீன் அவர்களும், பிரபல கல்வியாளர், தொழிலதிபர் துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிறுவனர் அமரர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு கவிஞர் அதிரை கலாமும் கவிதாஞ்சலி வழங்கினர்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

கவிதையும் கற்பனையும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு கவிஞர் அதிரை கலாம் தலைமை தாங்கினார். கவிஞர்கள் தஞ்சாவூரான், ஜெயராமன் ஆனந்தி, யமுனாலிங்கம், காவிரிமைந்தன், நர்கீஸ் பானு, ஜியாவுத்தீன், நாகினி கருப்பசாமி, கிருஷ் ராமதாஸ், அப்துல்லா ஆகியோர் கவிதை பாடினார்கள்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தங்குதடையில்லாத தமிழால் கவிதாயினி ஸ்வேதா கோபால் வரவேற்றார். நிகழ்ச்சியினை தனக்கே உரித்தான பாணியில் திண்டுக்கல் ஜமால் தொகுத்துரைத்தார்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பெருமக்களுக்கு கெளரவிப்பு செய்யப்பட்டது. பாரதி காவலர் கே.ராமமூர்த்தி அவர்களுக்கு காவிரிமைந்தன் பொன்னாடை அணிவிக்க தஞ்சாவூரான் நினைவுப்பரிசினை வழங்கினார். அடுத்து திரு.பாலாஜி பார்த்தசாரதி அவர்களுக்கு தமிழ்த்தேர் பொறுப்பாசிரியர் ஜியாவுத்தீன் பொன்னாடை அணிவிக்க கு.ரமணி நினைவுப்பரிசினை வழங்கினார். முனைவர் மன்சூர் அவர்களுக்கு ஹெல்த் கணேசன் பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசினை அப்துல்லா வழங்கினார். கவிஞர் தமிழ்த்தேனீ அவர்களுக்கு மயிலாடுதுறை அயூப் பொன்னாடை அணிவிக்க பாஷா நினைவுப் பரிசு வழங்கினார்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

விழாவில் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிர்வாகம்= வெற்றி நூல் வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பாரதி காவலர் கே.ராமமூர்த்தி முதல்பிரதியை வெளியிட திருமதி. மீனா பத்மநாபன் பெற்றக் கொண்டார். இரண்டாம் பிரதியை பாலாஜி பார்த்தசாரதி வெளியிட திருமதி. விசாலாட்சி மணி பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் மன்சூர் வெளியிட திருமதி. நர்கீஸ்பானு பெற்றுக் கொண்டார். நான்காம் பிரதியை கவிஞர் தமிழ்த்தேனீ வெளியிட திருமதி. மைமூன் ஆசியா பெற்றுக் கொண்டார். நூல் மதிப்பீட்டினை திருமதி ரமா மலர்வண்ணன் தெளிவுற வழங்கினார்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

மேலும் நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக பங்கேற்ற திருமதி. மைமூன் ஆசியா அவர்களுக்கு திருமதி. நர்கீஸ் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். தமிழ்த்தேரில் முதல் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற தலைப்புகளை வைத்து புதுமையாக கவிதை வழங்கிய ஜியாவுத்தீன், நர்கீஸ் மற்றும் ஆனிஷா ஆகியோரின் கவிதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தமிழ்த்தேரின் 85வது சிறப்பிதழாக கவிதையும் கற்பனையும் வெளியிடப்பட்டது. பாரதி காவலர் கே.ராமமூர்த்தி முதல் இதழை வெளியிட தமிழ்நேசர் அப்துல்லா பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை பாலாஜி பார்த்தசாரதி அவர்கள் வெளியிட முனீர் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை முனைவர் மன்சூர் வெளியிட சபீர் பெற்றுக் கொண்டார்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

பாரதி காவலர் கே.ராமமூர்த்தி அவர்கள் தனது 80வது வயதிலும் எழுச்சிமிகு உரையாற்றி பாரதியின் கவிதை வரிகளை எடுத்துரைத்த விதம் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. தனது அனுபவமிக்க பேச்சாற்றலால் சபையைக் கவர்ந்ததுடன் கரவொலியும் சிரிப்பொலியும் ஒருசேர அனுபவிக்க வைத்தார் என்றால் அது மிகையில்லை.

அடுத்து வந்த திரு.பாலாஜி பார்த்தசாரதி அவர்கள் நேர நிர்வாகம் பற்றிய காவிரிமைந்தனின் நூல்பற்றி ஒரு அலசல் தந்தார். கவியரசு கண்ணதாசனை நெஞ்சில் சுமந்து வாழும் காவிரிமைந்தன் இந்த நூலில் கண்ணதாசனை இன்னும் கொஞ்சம் அதிகம் மேற்கோள்காட்டியிருப்பார் என்று எதிர்பார்த்தேன்.. எனினும் அடுத்துவரும் நூல்களில் மனித மனதில் ஏற்படும் சஞ்சலங்கள், குழப்பங்கள் போன்றவற்றிலிருந்து வெளிவர கண்ணதாசன் பாடல்களோடு அடுத்த படைப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர், நடிகர் கிருஷ்ணமாச்சாரி எனும் தமிழ்த்தேனீ நேரம் அமைகிற விதம்.. நாமெல்லாம் கூடியிருக்கின்ற வண்ணம் என பேச்சினைத் தொடங்கி நடிப்பு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். தனது அமெரிக்க பயணத்தின் இடையே துபாய் விஜயம் உங்களை எல்லாம் சந்திக்கின்ற அரிய வாய்ப்பினை வழங்கியதற்கு தமிழ்த்தேருக்கு நன்றி தெரிவித்தார்.

Vaanalai Valartamil's Mupperum Vizha in Dubai

பேராசிரியர் முனைவர் தமிழ்த்தேருக்கு நன்கு அறிமுகமான விருந்தினராகவும்.. நிகழ்ச்சியில் பேசும்போது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை எழிலுற எடுத்துரைத்து பாட்டாளி மக்கள் தாங்கள் பெறுகின்ற கூழினையும் கஞ்சியையும் அதன்மூலம் பசியாறும் விதத்திற்கும் ஈடாகுமோ என்று நீலவான் ஆடைக்குள் ஒளிர்முகம் காட்டுகின்ற நிலா பற்றிய பாடல்தனை சுட்டிக்காட்டியவிதம் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன், இலட்சுமி நாராயணன், குளச்சல் இப்ராஹிம், திண்டுக்கல் ஜமால், ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.

English summary
Vaanalai Valartamil's Mupperum Vizha was held in Dubai on january 30th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X