• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று உலக ஆட்டிசம் தினம்!

|

-லதா சரவணன்

ஏப்ரல் 2.. இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்.

ஆட்டிஸம் குழந்தைகளை தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய். 1965ல் ஆண்டில் டாக்டர் பெர்னார்ட் ரிம்லாண்ட் டாக்டர் ரூத் சல்லிவன் என்பவர் மன இறுக்கம் கொண்ட அதாவது ஆட்டிஸம் குறைபாடு கொண்ட பிள்ளைகளுக்காக பெற்றோர்களால் ஆட்டிஸம் சொசைட்டி உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2ம் தேதி சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையால் உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. லைட் இட் அப் ப்ளூ என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நாளைக் கொண்டாடுவதற்காகவே நீல நிறத்தை அணிந்து கொள்வார்களாம்.

World Autism Day today

இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மதியிறுக்கம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும் எந்த முறையில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆட்டிஸம் குறைபாடு பற்றி கிஷோர் நடிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் தற்போது மனவளர்ச்சி குன்றிய பேரன்பு திரைப்படங்கள் அதற்கு உதாரணம்.

ஏப்ரல் 2ந் தேதியில் வேறென்ன விசேஷம் இருக்கு தெரியுமா... 1902ல் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத்திரையரங்கு கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது. மக்களின் பொழுதுபோக்கிற்கு இலக்காய் பாலாபிஷேகம், கலர்கலராய் பேப்பர் அலங்காரம், என்று மவுசாய் இருந்த திரையரங்குளின் மவுசு குறைய ஆரம்பித்து மால்கள் உற்பத்தியாயின, தரைடிக்கெட், பெஞ்ச்டிக்கெட் கை முறுக்கு அப்பப்போ கருப்பாய் வந்து மாறும் ஸ்கீரின் இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் அழகான அலங்காரங்கள் குஷன் சோபாக்கள், 300ரூபாய்க்கு பாப்கார்னோடு நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மால்கள் திரையரங்குகளை விழுங்கி ஏப்பம் விடவைத்தன.

ஒரு திரைப்படம் பார்க்க 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை ஆகும் இப்போதெல்லாம் 3000ரூபாய் வரை ஆகிறது ஒரு திரைப்படத்திற்கு ஐந்து நிமிடமே ஆனாலும் பார்க்கிங்கில் 60ரூபாய்க்கு மேல் வசூலிக்கிறார்கள். டிக்கெட், திண்பண்டம் அதிலும் மாலின் மூன்றாவது அல்லது நான்காவது தளத்தில் தியேட்டர் போகும் ஒவ்வொரு பக்கம் என்னைக் கொஞ்சம் வாங்கிக்கொள் என்று கைநீட்டி அழைக்காத குறையாய் கடைகள் போகவர செலவு என்று பர்ஸீம் ஏடிஎம் கார்டும் கொஞ்சிவிளையாடும் இன்றைய மால்களுக்கு இணையாய் ஏதுமில்லை. செழித்து ஓங்கி பலபேருக்கு வாழ்வளித்த திரையரங்கள் மூடப்பட்டன அநேகபேரின் வாழ்விழப்பதற்கு ஒரு சில வருடங்களுக்கு முன்பு காரணமாயிருந்தது. அதற்கு வெயில் படம் ஒரு சிறந்த உதாரணம் பசுபதி அவர்கள் தன் முதலாளியின் தியேட்டர் மதிப்பிழப்பில் அடிபடுவதை வெகு அழகாக காட்டியிருப்பார்கள். அதையும் நாம் ஒரு மாலின் குஷன் சேரில்தான் அமர்ந்து ரசித்தோம்.

1911 ஆஸ்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

1912 டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.

1972-1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லிசாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.

1984 ராகேஷ் சர்மா சோயூஸ் T-11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2007 சொலமன் தீவுகளுக்கு அண்மையில கடலின் அடியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக எபந்த ஆபிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.

2007 ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கில் 512 பேர் கொல்லப்பட்டனர்.

1805-1875 ல் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும் இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் காலையில் எழுந்ததும் படிப்பு பின் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்றார் பாரதி ஆனால் இப்போது காலையில் எழுந்ததும் மொபைல் போனில் ஏஞ்சலாவிற்கு பல் தேய்ப்பு பின்பு ஏதாவது பானம், அதன்பிறகு மூட்டை புத்தகங்களுடன் பள்ளி மாலையில் கணிணியிலும், மொபைலிலும் கேம்ஸ் என்று பிள்ளைகளின் விளையாட்டுகள் எப்படி தொலைந்ததோ அதே போலத்தான் படிக்கும் பழக்கமும், இந்த ஏப்ரல் 2ந்தேதி புத்தகம் படிக்கும் விரப்பத்தை ஊக்குவிப்பதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் தான் இந்த நாளின் நோக்கம்.

(தொடர்ந்து வரும்)

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Today is April 2, the world celebrates the day as World Autism day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more