For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்

Google Oneindia Tamil News

டோரன்டோ: உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை சார்பில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நேற்று தொடங்கிய கருத்தரங்கம் இன்றுடன் முடிவடைகிறது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

world Tholkappiyam Mandram seminar begins

முதல்நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெற்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்கினர்.

மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

சுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர்.

மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பியர் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன.

கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில் புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நன்றி: மு. இளங்கோவன்

English summary
World Tholkappiyam Mandram seminar began in Canada and various scholars from all over the world attended the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X