For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரசிம்மர் ஜெயந்தி 2020: தீராத வினைகள் தீரும் செய்வினை கோளாறுகளை தீர்க்கும் நரசிம்மர்

சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் மறையும் நொடியில் மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ள

Google Oneindia Tamil News

மதுரை: சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் மறையும் நொடியில் மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மர் வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்தி சாயும் நேரமான மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையாகும். அன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் நமக்குக் கிடைக்கும்.

தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து ஹிரண்யனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி நன்னாளில், நரசிம்மர் அருள் புரியும் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

உங்க ஜாதகத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி இருக்கா ஆஸ்துமா வராமல் எச்சரிக்கையா இருங்க - பரிகாரங்கள்உங்க ஜாதகத்தில் இந்த கிரகங்கள் கூட்டணி இருக்கா ஆஸ்துமா வராமல் எச்சரிக்கையா இருங்க - பரிகாரங்கள்

நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்காளால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஆராதனைகள் நடைபெற்றன.

வெற்றி கிடைக்கும்

வெற்றி கிடைக்கும்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்ம ஜெயந்தி தினமான இன்று அவரது படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம். வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. எதிரிகள் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

சண்டை தீரும்

சண்டை தீரும்

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும். கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டிருந்தால் நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

நரசிம்மர் அருள் கிடைக்கும்

நரசிம்மர் அருள் கிடைக்கும்

நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும். பக்தன் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

செய்வினை கோளாறு நீங்கும்

செய்வினை கோளாறு நீங்கும்

ரசிம்மர் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டாலும் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்தினாலும் கடன் தொல்லை, தீராதநோய், வறுமை, செய்வினை கோளாறுகள் உடனுக்குடன் விலகுகின்றன. சுவாதி நட்சத்திரக்காரர்கள் பிரதோஷ பூஜையை ஏற்று நடத்துவது நல்லது.

கிரக தோஷங்கள் நீங்கும்

கிரக தோஷங்கள் நீங்கும்

நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். மருத்யுவேஸ்வாகா என்று கூறி நரசிம்மரை வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
தீராத வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை தடுமாறி யவர்கள், கிரகங்களின் தோஷத்தால் துன்புறுபவர்கள், கடன் தொல்லையில் கஷ்டப்படுபவர்கள் ஸ்ரீநரசிம்மரை வணங்க துயர் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

English summary
Sri Narasimha Jayanti is the appearance day of Lord Narasimha, the half-lion half-man incarnation of Supreme Lord of Maha Vishnu, who appeared to protect Prahlada from his demoniac father Hiranyakashipu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X