For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவாசம் கொடு சுடரே..

By Staff
Google Oneindia Tamil News

உன் மெளனங்களை
மொழிபெயர்க்கும் வித்தையை
காதல் எனக்கு
கற்றுத்தந்திருக்கிறது..

உன் விழியசைவுகளின்
வீரியத்தை
காதல் எனக்கு
கவிதையாக்கி தந்திருக்கிறது..

நீ நடந்து வரும் பேரழகின்
நளினத்தை
காதல் எனக்கு
கடனாய் தந்திருக்கிறது..

உன் புன்னகையின்
புதுப்பொலிவை
காதல் எனக்கு
காணிக்கையாக்கியிருக்கிறது..

உன் கடிதங்களின் கரிசணத்தை
காதல் எனக்கு
கெளரவப்படுத்தியிருக்கிறது..

முடிவாய்.. வா சகியே..
பரஸ்பரம் இதயம் கசிந்து
நாமிருவரும்
காமன் தேசத்தை
கையகப்படுத்துவோம்..!!

- அபிரேகா அலாவுதீன்([email protected])


இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X