For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடாவில் தொலைந்தவனே..

By Staff
Google Oneindia Tamil News

இளமையின் சுமை
அறியாதவனா நீ..?

கரைபுரளும்
என் கண்ணீரின்
கதை தெரியாதவனா நீ..?

சுகங்களின் முகவரியை
எனக்குச் சொல்லிக்கொடுத்தவனே..
பிறகு ஏன்
தனிமையில் என்னை கிடத்தி
கடல் கடந்து யாரை
கெளரவப்படுத்தப்போயிருக்கிறாய்..??

எதை பெறுவதற்காக
என்னை இழந்துகொண்டிருக்கிறாய்..??
வற்றிவிடும் இளமை வராது திரும்பவும்..
வளைகுடா மறந்து வா சீக்கிரம்..!!

இந்த முறையாவது
என் வயிற்று வலியையும் வாந்தியையும்
வாங்கிக்கொள்ள என் பக்கத்தில் நீயிரு..!!

Ladyஅபிரேகா அலாவுதீன்([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. என் தேவ தேவி
2. என் சைக்கிள் தேவதையே..
3. கைக்குட்டை கனவு


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X